ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வியாழன், 13 ஜூலை, 2023

இளைப்பாறுதல் இங்கே...

 


இளைப்பாறுதல் இங்கே

அதிகப்பட்சமாக ஒரு சில 

மணித் துளிகள் தேவை இங்கே..

அதுவும் களவாடப்படும் போது 

நான் பேச்சற்ற நிலையில் 

சகித்துக் கொண்டு 

அடுத்த மணித் துளிகளுக்காக 

ஏங்கி தவிப்பதை இங்கே

ஓயாத சத்தங்களால் 

துன்புறுத்தும் அலைகளின் 

நகர்வை பொறுத்துக் கொள்ளும் 

இந்த சமுத்திரத்தை தவிர 

வேறு யார் அறியக் கூடும் 

என் நிலைமையை..

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாலையோர புழுதியில் நனைந்த ஓவியம்...

 அந்த பிரமாண்டமான வீட்டில்  வாழ்ந்து கொண்டு  இருப்பவர் சில நாட்களில்  உற்சாகம் இழந்து  அவர் தாம் பார்த்து பார்த்து கட்டிய  அந்த வீட்டில்  உள...