இன்று இரவு இந்திய நேரம் பத்து மணிக்கு திரைப்பட பின்னணி பாடகி #நாகைசரஸ்வதி அவர்களின் நினைவலைகளோடு அவர் விரும்பிய பாடல் தொகுப்புகள் கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் நேயர்களே 🎻🙏🎻
கீழேயுள்ள லிங்கில் 🎻
https://zeno.fm/radio/krishna-fma76ufetpuy8uv/
இன்று இரவு இந்திய நேரம் பத்து மணிக்கு திரைப்பட பின்னணி பாடகி #நாகைசரஸ்வதி அவர்களின் நினைவலைகளோடு அவர் விரும்பிய பாடல் தொகுப்புகள் கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் நேயர்களே 🎻🙏🎻
கீழேயுள்ள லிங்கில் 🎻
https://zeno.fm/radio/krishna-fma76ufetpuy8uv/
அவளோடு ஓர் பயணம்(7):-
நான் இன்று கொஞ்சம் வருத்தமாக தான் இருந்தேன். கடந்த சில நாட்களாக இருந்த வருத்தம் இல்லை இது.புது ஆங்கில வருட பிறப்பை நண்பர்களோடு வெளியே சென்று கொண்டாட முடியவில்லை என்கின்ற வருத்தம் தான் அது. என்ன செய்வது நதி சொல்வது போல எல்லாம் விதி விளையாடும் விளையாட்டில் நாம் கைபொம்மைகளோ..என்று தத்துவம் எனது மனதை சாந்தமாக்கியது.இந்த தத்துவம் கூட நமக்கு நிறைய விசயங்களுக்கு வடிகால் போலும். இதனால் தான் எல்லோரும் தத்துவத்தின் பின்னால் ஓடுகிறார்களோ என்று நினைத்து மனதிற்குள் சிரித்து கொண்டேன்..
அப்போது நதியிடம் இருந்து அழைப்பு வந்தது அலைபேசியில்.நான் கொஞ்சம் சந்தோஷம் அடைந்தேன்.அலைபேசியை எடுத்து ஹலோ சொன்னேன்.கிருஷ் என்ன வருத்தம்.. குரல் கம்முகிறது...என்றாள்.
அதெல்லாம் ஒன்றும் இல்லை நதி.கொஞ்சம் வெளியே போக முடியாமல் இருப்பதற்கான வருத்தம் தான்.வேறு ஒன்றும் இல்லை என்றேன்.
சரி இங்கே வா ..என்றாள்..நானோ அங்கே செல்ல கொஞ்சம் தயக்கம் காட்டினேன். ஏனெனில் ஏதேதோ தத்துவம் பேசி நம்மை நோகடிப்பாளே என்று.. ஆனால் ஒருவரும் இல்லாமல் இருப்பதற்கு நதி வீட்டுக்கு செல்வது நல்லது என்று தோன்றியது எனக்கு. சரி வருகிறேன் என்றான்.. உடனே கிளம்பினேன்..தனது வண்டியை எடுத்து கொண்டு..
சரியாக பதினைந்து நிமிடத்தில் நதி வீட்டில் இருந்தேன்.. காலிங் பெல்லை அழுத்த போனேன். ஆனால் கதவு லேசாக திறந்து இருந்ததை பார்த்து உள்ளே நுழைந்தேன்.
அங்கே நதி சோபாவில் அமர்ந்து தனது டைரியில் எதையோ எழுதி கொண்டு இருந்தாள்.. லேசாக தலை நிமிர்ந்து சிறு புன்னகை பூத்து வா கிருஷ்.. என்று தலையசைத்து கூப்பிட்டாள்.நான் நதியின் பக்கத்தில் அமர்ந்து கொண்டு என்ன நதி இன்று நடந்ததை எழுதி இந்த வருடத்தின் இறுதி பக்கத்தை நிறைவு செய்கிறாயா என்றேன். சிரித்தவாறே..😊
நதியோ இல்லை கிருஷ்.. இந்த வருடத்தின் நினைவுகளை நிரப்பி அதை மகிழ்விக்கிறேன் என்றாள்.😊கொண்டே.
சரி தான்..வார்த்தை ஜாலத்தில் நீ நாட்குறிப்பையே அதிரடிக்கிறாய்.என்றேன்.
கொஞ்ச நேரம் இரு..இந்த நாட்குறிப்பை எழுதி விட்டு வருகிறேன். அதுவரை இந்த ஜே.கே..புத்தகத்தை படி என்று எனது கையில் ஒரு புத்தகத்தை திணித்து விட்டு எழுதினாள்..
நான் அந்த புத்தகத்தின் பக்கங்களை புரட்டினேன்.. சில பக்கங்களில் கண்களை ஓட விட்டேன்.. அதில் உள்ள கிருஷ்ணமூர்த்தி ஐயா படம் ஏனோ என்னை பார்த்து சிரித்தது..எனக்கும் சிரிப்பு வந்தது.
நதி தனது நாட்குறிப்பை எழுதி விட்டு சமையலறை நோக்கி சென்றாள்.இருவரும் பருக இஞ்சி தேநீர் கொண்டு வந்து எனதருகே அமர்ந்தாள்.
நான் அவளிடம் இந்த வருடத்தில் நீ எதை முக்கியமாக செய்தாய் நதி..சென்ற வருடத்தில் நீ ஏதேனும் தீர்மானம் எடுத்து அதை நிறைவேற்றி விட்டாயா..என்றேன்..
நதி என்னை பார்த்து படுபயங்கரமாக சிரித்தாள்.. எனக்கு ஒன்றும் புரியவில்லை..ஏன் என்னாச்சு என்றேன்.
நதி என்னிடம் கேட்டாள்..நீ ஏதேனும் தீர்மானம் எடுத்தாயா என்று..நான் ஒரு தீர்மானமும் எடுக்கவில்லை நதி என்றேன்..
ஏன் என்றாள்..
எந்த தீர்மானமும் எடுத்து சில நாட்களில் காணாமல் போகிறது.. கடைபிடிக்காமல் என்றேன்.. நீ என்ன தீர்மானம் எடுத்து இருந்தாய். அதை முதலில் சொல் என்றேன்.
நான் முதலில் கணந்தோறும் ஆனந்தமாக வாழ நினைப்பவள்.எனக்கு ஒவ்வொரு நாளும் புது வருட முதல் நாட்களே..😊அப்படி இருக்கும் போது நான் ஏன் பனிரெண்டு மாதங்களுக்கு ஒரு முறை ஒருநாளை கொண்டாட வேண்டும் என்றாள் கேலியாக.
அதெப்படி உன்னால் மட்டும் எல்லா நாட்களிலும் இனிமையாக கடத்த முடிகிறது என்றேன்.. ஆச்சரியமாக..
கிருஷ் அதெல்லாம் அப்படி தான்.. வாழ்க்கை என்பது கணந்தோறும் நம்மை ஆனந்தத்தில் லயம் அடைய செய்கிறது. நாம் தான் அந்த லயத்தில் அடங்காமல் திமிறி திரிந்து துன்பத்தை அடைகிறோம்..என்று சொல்லி கொண்டே எனது கையை பிடித்து இழுத்து கொண்டு மொட்டை மாடிக்கு சென்றாள்..
அங்கே அவள் இரு நாற்காலிகள் ஏற்கனவே இருந்தது.அதில் ஒன்றில் என்னை அமர வைத்து அவள் அமர்ந்து கொண்டு இமைக்காமல் அங்கே இருக்கும் நிலவை பார்த்தாள்..மிகவும் உற்சாகமாக.. கொஞ்ச நேரம் அமைதி அமைதி...அங்கே..
இந்த நிலவை நீ எப்போதும் ரசிப்பதற்கு காரணம் என்ன என்றேன்..
ஆனந்தத்தை அனுபவிக்க காரணம் தேவையில்லை கிருஷ். கணந்தோறும் இயற்கை ஆனந்தத்தில் தாண்டவமாடுகிறது..அந்த தாண்டவத்தில் நம்மை தொலைக்க மறுத்து சம்சாரம் எனும் துன்ப தாண்டவத்தில் துவண்டு போகிறோம்.. என்றாள்..சிரித்து கொண்டே..
கொஞ்ச நேரம் அந்த பனியில் நனைவதும் ஆனந்தமாக தான் இருந்தது.. தென்றல் காற்று இதமாக வருடியது..கொஞ்ச நேரத்தில் எனக்கு கொஞ்சம் குளிர ஆரம்பித்ததை அவள் கவனித்து விட்டாள்..
அருகே வந்து என்ன குளிர்கிறதா என்றாள்.எனக்கு கொஞ்சம் கோபம் வந்தது.. மார்கழியில் குளிரால் வேர்க்கவா செய்யும்.. என்றேன்..
குளிர்வது குளிராமல் இருப்பது இந்த இரட்டைகளை கடந்து விடு கிருஷ்.. அப்போது தான் வாழ்க்கை மிகவும் ஆனந்தமாக இருக்கும்..என்று சொல்லி கொண்டே வா கீழே போகலாம் என்றாள்..
கீழே வந்தவுடன் நீ இப்போது இங்கே இரவு உணவை முடித்துவிட்டு வீட்டுக்கு கிளம்பு என்றாள்..
சொல்லி கொண்டே வேகமாக வேலைகளை முடித்து சப்பாத்தி செய்து அதற்கு நல்ல குருமா வைத்து கொண்டு வந்து கொடுத்தாள்..அதை ருசித்து சாப்பிட்டு முடித்தேன்..
கிளம்பும் வேளையில் எனக்கு ஏதேனும் புது வருட செய்தி உள்ளதா என்றேன்..
அதற்கு அவள் எப்போதும் கணந்தோறும் கொண்டாடிக் கொண்டே இரு.கடந்த காலங்களில் தேங்காதே;எதிர்காலத்தில் தொலையாதே..இதோ கடந்து சென்று கொண்டே இருக்கும் இந்த நிமிடத்தில் வாழ கற்று கொள் என்று சொல்லி கொண்டே என்னை புன்னகையோடே வழியனுப்பி வைத்தாள்..நானும் அந்த கணத்தில் நழுவ விடாமல் எடுத்து சென்றேன்..மிகுந்த மனநிறைவோடு..
#இளையவேணிகிருஷ்ணா.
விடை பெறும் வருடம்
இங்கே பனிரெண்டு
மாதத்திற்கு ஒருமுறை
வந்து வந்து
செல்கிறது!
கடந்த நாட்களின்
நினைவுகளை
கிழித்தெறிய
முடியவில்லை!
கொண்டாட்டங்கள்
ஏதோவொரு இரவின்
கருப்பில் கரைந்து
போவது நியாயம் இல்லை!
கணங்கள் தோறும்
கடந்து நம்மோடு
பயணிக்கிறது!
ஆனந்தமெனும்
நமது வாழ்க்கை!
நாமோ
அதை கடந்து கடந்து
வெகுதூரம் சென்று
தேடி தேடி களைப்படைகிறோம்!
விடைபெறும் நாட்களை
கடந்தும் ஆனந்தம் உள்ளது!
நிகழ்காலம் எனும்
பெட்டகத்தில் பாதுகாப்பாக!
நிகழ்காலங்கள் நிகழ்த்தும்
ஆனந்தத்தில்
மூழ்கி விட்டால்
கடந்த கால எதிர்கால
கவலைஇல்லை!
நிகழ்காலத்தில் கொண்டாட்டங்கள்
இருக்கும் போது
எதிர்காலத்தில்
நமது கொண்டாட்டங்களை
தேடி அலைவதும் ஏனோ
மனிதர்காள்!
#இளையவேணிகிருஷ்ணா.
வாழ்வின் துயரங்களை
நேசிக்கும் போது
வாழ்வின் அர்த்தம்
மனமெனும் ஆற்றில்
நெகிழ்ந்து ஓடுகிறது..
அந்த ஆற்றின் சத்தத்தில்
கரைய
துடிக்கிறது துயரம்..
நானோ அதை கரைய விடாமல்
தடுத்து எனக்குள்
நிரப்பிக் கொள்கிறேன்..
ஏன் அது கரைந்து விடுவதை
தடுக்கிறீர்கள்..
நீங்கள் துயரத்தில் இருந்து
விடுபடுவீர்கள் தானே என்கிறார்கள்..
விடுபடுவது என்பதே இங்கே
அதை முழுமையாக
அனுபவித்தலில் தான் உள்ளது என்றேன்..
ஏதோ உளறுகிறேன் என்று
முணுமுணுத்து கலைகிறார்கள்..
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த மனிதனின்
உள்ளிருக்கும்
அத்தனை இரகசியங்களையும்
பெற்றாயிற்று என்று
நினைத்து நிம்மதியடைந்த
உறவுகளுக்கு தெரியாது
அவர் ஒரேயொரு மிகப்பெரிய இரகசியத்தை
எவரிடமும் பகிர்ந்து கொள்ளாமல்
நிம்மதியாக
அந்த இறுதி மூச்சை வெளியேற்றி
முகத்தில் ஒரு வெற்றி புன்னகையோடு பயணித்ததை
இங்கே எவரும் கவனித்திருக்க நியாயமில்லை...
#இளையவேணிகிருஷ்ணா.
என்ன
நீ துயரப்படுகிறாயா என்று அதிசயித்து கேட்டது
காலம் என்னை...
இல்லை இல்லை
அந்த உணர்வு எப்படி
இருக்கும் என்று
கொஞ்சம் அனுபவித்து பார்க்கிறேன் என்றேன்
கொஞ்சம் புன்னகைத்து...
#இளையவேணிகிருஷ்ணா.
அன்று பிறந்த குழந்தைக்கு
எவ்வித சஞ்சலங்களும்
இல்லை...
எண்ணங்களே இல்லை..
பிறகெப்படி சஞ்சலங்கள்
தோன்றக் கூடும்..
நான் அத்தகைய நிலையில்
இருக்கும் ஒரு நாளை
ஒரேயோரு நாளை
எதிர்பார்த்து ஏங்கி
தவிக்கிறேன்...
தவித்த நொடிகள் கூட
என் நிலைமையை புரிந்து
கலங்கியது...
#இளையவேணிகிருஷ்ணா.
அடங்காத
நாடோடி காற்றாக
நான் அலைகிறேன்..
எனை சிறைப்பிடித்து
ஒரு சிறு குடுவையில்
அடைக்க முயலாதீர்கள்
நான் மூச்சற்று கிடப்பதில்
உங்களுக்கு என்ன
அவ்வளவு ஆனந்தம்?
கொஞ்சம் உங்களை தேற்றிக் கொள்ளுங்கள்
நான் இல்லாமல்
உங்களால் வாழ முடியும்
நான் இல்லாமல் நான் வாழ
இயலாது...
#இளையவேணிகிருஷ்ணா.
வாழ்வின் நிஜத்தோடும்
போராட
விரும்பவில்லை
நிழலோடும் போராட விரும்பவில்லை...
கொஞ்சம் ஓரமாக
தள்ளி நின்று வேடிக்கை மட்டும்
பார்த்து விட்டு செல்கிறேன்
எதற்கும்
தொந்தரவில்லாமல்
என்று கெஞ்சுகிறேன்
காலத்திடம்...
காலமோ என் மீது
இரக்கம் கொண்டு
சம்மதித்தது...
#இளையவேணிகிருஷ்ணா.
நாய்க்கு கருத்தடை..
குரங்குக்கு கருத்தடை...
இன்னும் இன்னும்
பல ஜீவராசிகளுக்கு
கருத்தடை செய்ய வேண்டும் என்று அங்கே ஆயிரம் பேர்
கூக்குரலிட்டுக் கொண்டு
இருப்பதை பார்த்து
இந்த பூமி தாய் மௌனமாக
கண்ணீர் வடிக்கிறாள்...
இங்கே அதனதன் வாழ்வை
சிதைத்து விட்டு
மனிதர்களின் கூட்டம்
மட்டும் கூடிக் கொண்டே
போகிறதே என்று...
அதன் மௌன விசும்பலை
பொறுக்க முடியாத நான்
தீவிர பிரார்த்தனை செய்து கொள்கிறேன்...
இறைவா
இங்கே மனிதர்கள் எனும்
ஜீவ கூட்டத்தை மட்டும்
சில காலம் இல்லாமல் செய்து விடு இறைவா...
அந்த இடைப்பட்ட காலத்தில்
நிம்மதியாக அந்த
பல ஜீவராசிகள்
உயிரோட்டமான வாழ்வை
கொஞ்சம் வாழ்ந்து விட்டு
போகட்டும் என்று...
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த சுமைதாங்கிகளுக்கும் வேண்டும்
கொஞ்சம் ஆசுவாசம்..
இதை உணராமல்
போவோர் வருவோர்
அதன் மீது சுமையை இறக்கி
ஆசுவாசப்படுத்திக் கொண்டு
தனது பயணத்தை
கவலை இல்லாமல் தொடர்கிறார்கள்..
சுமைதாங்கியோ மௌனமாக
கண்ணீர் வடிக்கிறது...
கொஞ்சம் சத்தமும் கேட்டால்
ஆறுதல் தேடுபவர்கள்
ஆதங்கப்பட்டு விடுவார்களே என்று...
#இளையவேணிகிருஷ்ணா.
ஓஷோவின் தத்துவத்தோடு இனிமையான பாடல்கள் கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் நேயர்களே 🎻🙏🎻.
எப்போதும் போட் காஸ்ட் நினைவில் இருந்து நம்மோடு எப்போதும் பயணிக்கும் இனிமையான தருணம் இது நேயர்களே 🎻🙏🎻
கீழேயுள்ள லிங்கில் நிகழ்ச்சி கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் நேயர்களே 🎻🙏🎻.
https://radiopublic.com/-WxOkEV/s1!0163b
கீழேயுள்ள லிங்கில் நிகழ்ச்சி கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் நேயர்களே 🎻 🙏 🎻
https://radiopublic.com/-WxOkEV/s1!0163b
அந்த நாளில் நான் பயணித்த ஞாபகம் வந்ததே.. இப்போது மலைத்து தான் போகிறேன்.. தொடர்ந்து போட்காஸ்ட் எப்படி கொடுத்தேன் என்று.. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நேயர்களே 🎻🙏🎻🎉🎻🥳🎻💃🎻
பெரும் வாழ்வியல்
போராட்டங்களுக்கிடையே
கொஞ்சம்
ஆசுவாசப்படுத்திக் கொள்ள
இரவில் கண் சிமிட்டி
கூட்டமாக என் வரவை
எதிர்நோக்கி காத்திருக்கும்
இந்த நட்சத்திர ரசிகைகளே
என் இரவின் பொக்கிஷம்...
#இரவுகவிதை.
#இளையவேணிகிருஷ்ணா.
எப்போதும் இடைவிடாத இசையோடு ஒரு பயணம் இது..
இனிமையான பாடல்களோடு அழகான கவிதை தொகுப்போடு இணைந்து இருங்கள் நேயர்களே 🙏
கீழேயுள்ள லிங்கில் நிகழ்ச்சி கேட்டு ரசிக்க அழைக்கப்படுகிறது உங்களை இசை சாரல் வானொலி 🎉🥳💃🎻
https://radiopublic.com/-WxOkEV
இன்று பாருங்கள் மார்கழி அமாவாசை திதி மற்றும் ஆஞ்சநேயர் அவதரித்த நாள்.. இந்த நாளில் எங்கள் ஊரில் உள்ள மலை மீது உள்ள ஆஞ்சநேயருக்கு மிகவும் சிறப்பாக பூசைகள் தடபுடலாக நடக்கும்.. அங்கே அந்த ஆஞ்சநேயருக்கு குறிப்பிட்ட நபர் தான் வடை செய்து கொடுக்க வேண்டும் என்று அங்கே மற்ற யாரையும் வடை செய்ய விட மாட்டார்கள்.. அப்படி அங்கே குறிப்பிட்ட நபரின் கையால் வடை செய்து பூசை எல்லாம் செய்வார்கள்.. பிறகு அங்கே பூசை செய்யும் இடத்தில் வானரத்தை விரட்ட ஒரு ஆளையும் நியமிப்பார்கள்.. ஏனெனில் பூசைக்காக வைத்திருக்கும் வடை வாழைப்பழம் இவற்றை வானரம் தூக்கி கொண்டு போய் விடக் கூடாதாம்.. இதை எல்லாம் பாவமாக அங்கே கூர்ந்து கவனித்து வரும் வானரங்கள் எப்படியோ நமக்கு கொடுப்பார்கள் என்று பார்த்து பார்த்து கண்கள் ஓய்ந்து சோர்ந்து போய் உட்கார்ந்து இருக்கும்.. எப்படியோ காலையில் இருந்து ஆஞ்சநேயருக்கு செய்த பூசையை ஒரு பனிரெண்டு மணிக்கு முடித்து விட்டு எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு ஒரு பத்தி மட்டும் குத்தி வைத்திருக்கும் வாழைப்பழத்தை போனால் போகுதே என்று விட்டு விட்டு இறங்குவார்கள்.. இறங்கும் போதும் அங்கே இவ்வளவு நேரம் பார்த்து கொண்டு இருக்கும் அந்த #வானரத்திற்கு எதுவும் தர மாட்டார்கள்.. பிறகு எவரோ ஒருத்தர் கருணை மிகுந்து எவருக்கும் தெரியாமல் அந்த பூசை செய்த வடையில் இருந்து ஒன்றை தூக்கி போடுவார்.. அங்கே ஆயிர கணக்கில் இருக்கும் வானரம் அடித்துக் கொண்டு அங்கே ஒரு பெரிய யுத்தமே நடக்கும்.. ஆனால் அதை பற்றி கவலைப் படாமல் மலையில் இருந்து கீழே வந்து அன்னதானம் அங்கே ஊர் மக்களுக்கு போடுவார்கள்.. அந்த மக்கள் ஏதோ இலையில் கொஞ்சம் நஞ்சம் எதையும் விட்டு வைத்திருக்கிறார்களா என்று இலையில் தேடும் அந்த வானரங்களை பார்த்தால் தான் பாவமாக இருக்கும்..
நன்றாக சாப்பிட்டு விட்டு கொஞ்சம் நேரம் ஓய்வாக எல்லோரும் ஓய்வாக பேசி விடை பெறும் போது ஜீவ காருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்று சொல்லி செல்வதை பார்த்து அந்த கொலை பசியோடு இருக்கும் வானரங்கள் என்ன நினைக்கும்???நீங்களே சொல்லுங்கள் மக்களே 😔😒🤔
#அனுமன்ஜெயந்திஅலப்பறைகள்.
#இளையவேணிகிருஷ்ணா.
கடந்த பல வருடங்களை போலவே
இதோ இன்னும் சில நாட்களில் முடிய இருக்கும்
என்னோடு பயணித்த
இந்த வருடமும்
நீங்காத நினைவலைகளை
இன்னொரு சுமையாக
என் மனதில் ஏற்றி
விடைபெறட்டுமா என்கிறது...
கொஞ்சம் வாஞ்சையாக
என் கைகளை பிடித்து...
ஏன் இந்த அவசரம்..
இன்னும் நீட்டித்து
என்னோடு பயணித்தால் தான் என்ன என்கிறேன்..
நானும் அழிவும் வேறல்ல
நானும் புதுப்பித்தலும்
வேறல்ல..
புது பரிணாமத்தில்
உன்னோடு கை கோர்ப்பேன்
என்றது ...
ஏனோ சில பந்தங்களை
அவ்வளவு எளிதாக விட்டு விட
முடியவில்லை என்றேன்
என் கண்ணீர் துளிகளை மறைத்து..
இந்த பந்தமோ எந்த பந்தமோ
எப்போதும் விலகுதல் விதி
ஒன்றே விலகாமல்
பயணிக்கும் என்றது
சற்றே புன்னகையோடே..
நானும் சிரிக்க முயன்று
தோற்றேன்...
#இளையவேணிகிருஷ்ணா.
நான் இங்கே
உங்களை விட்டு
தள்ளியே பயணிக்கிறேன்
அத்தனை சஞ்சலங்களோடும்
என்னை ஒப்பிட்டு பேசுகிறீர்கள்..
அத்தனையும் செவி மடுத்து
மௌனமாக வேடிக்கை பார்க்கிறேன்..
உங்களோடு ஒப்பிடும்போது
நான் இங்கே வாழ்வின் ரசனையில்
மெருகேறுகிறேன்...
நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக
பொலிவிழக்கிறீர்கள்..
அதை கூட உணராமல்
பயணிக்கிறீர்கள்...
நான் அதையும் சேர்த்து
உங்களுக்கு எந்த அறிவுரையும் சொல்லாமல்
வாய் பொத்தி வேடிக்கை
பார்க்கிறேன்...
நீங்கள் மாயையின் பயணத்தில் பயணியுங்கள்..
பயணித்துக் கொண்டே
இருங்கள்...
நானும் உங்களை
சலனம் இல்லாமல்
வேடிக்கை மட்டுமே
பார்த்துக் கொண்டே
இருப்பேன்...
வாழ்வின் ரசனையை
இங்கே என்னை தவிர
யாரும் அறிந்திருக்க நியாயமில்லை...
#இளையவேணிகிருஷ்ணா.
நான் எனும் மாயை
அடங்கும் நேரத்தில்
உள்ளே தெரியும் அந்த ஜோதியின் காட்சியில்
கண்கூசி நிற்கிறேன்..
ஆத்ம ஞானத்தின்
தரிசனத்தை கண்ட பின்
என்னுள் பேரமைதி
நிலவுவதில் நான்
வேடிக்கை பார்க்கிறேன்
என்னையே..
என்னை சுற்றி இருப்பவர்கள்
என்னிடம் இருந்து பயந்து
விலகி செல்கிறார்கள்..
நான் அதை உணர்கிறேன்
தடுக்க விரும்பவில்லை..
மாறாக ஒரு புன்னகை செய்து
அவர்கள் விலகிய இடத்தை
கொஞ்ச நேரம் அமைதியாக
பார்த்து விட்டு
மெல்லமாக நடந்து
விலகி செல்கிறேன்...
#இளையவேணிகிருஷ்ணா.
பூவிதழ் கன்னத்தில்
அன்று நான் இட்ட
முத்தத்தை
இங்கே இன்றும்
நான் உணர்கிறேன்...
முத்தம் வாங்கிய
உன் கன்னம் இன்னும்
இன்னும் சிவந்து தான்
போகிறது...
நான் இட்ட முத்தத்தை
நினைத்து..
நீ அதை உணர்கிறாயா
சொல்லாயோ
என் காதல் கிளியே...
#இளையவேணிகிருஷ்ணா.
இந்த மாலை வேளையில்
உன் காதலின்
உணர்வு பெருக்கில்
களித்திருப்பதை பார்த்து
அந்த தென்றலும் கொஞ்சம்
பொறாமையாக
என்னை சீண்டி விட்டு
காணாமல் போனது..
நானோ அதை மீண்டும்
இழுத்து
ஒரு காதல் கடிதத்தை
தூதாக பறக்க விட்டேன்...
வந்ததா
தூது அனுப்பி வை
அதே அந்தி நேர தென்றலை
என் ஆருயிரே...
#இளையவேணிகிருஷ்ணா.
திருப்பூர் மற்றும் தொழில் துறையில் பயணிப்பவர்கள் எல்லோரும் தங்கள் வியாபாரம் எப்படி போகிறது என்று கேட்டால் ஏதோ போகிறது என்று சலிப்பாக சொல்கிறார்கள்.. மேலும் விவசாயம் கேட்கவே வேண்டாம்.. இப்படி தமிழ் நாட்டின் வளர்ச்சி முன்னேற்றம் எல்லாம் எதனால் முடங்கி உள்ளது என்று கேட்டால் நிச்சயமாக வரி விதிப்புகள் தான் காரணம் என்று சொல்லி தெரிய வேண்டியதில்லை..கொரணாவிற்கு பிறகு அரவணைக்க வேண்டிய அரசாங்கமே வரி விதிப்புகளால் மக்கள் வாழ்வாதாரத்தை பற்றி கவலைக் கொள்ளாமல் மேலும் மேலும் வரி விதிப்புகளை கடுமையாக்கிக் கொண்டே சென்றதேயொழிய தொழில் செய்பவர்கள் பற்றி கவலைப்பட்டதாகவே தெரியவில்லை.. இந்த நிலையில் மத்திய அரசாங்கத்தின் வரி விதிப்பு கொள்கையை எதிர்த்து தமிழ் நாட்டில் உள்ள அனைத்து தொழில் துறையினரையும் ஒருங்கிணைத்து ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் ஆளும் தரப்பு செய்தால் தான் என்ன? தமிழ் நாட்டில் உள்ளவர்கள் வீரம் மிக்கவர்கள் தைரியசாலி கள் என்பதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து கொண்டே வருகிறதா? எவ்வளவு அடித்தாலும் தாங்கிக் கொள்ளும் மனநிலைக்கு வந்து விட்டார்களா? தெரியவில்லை..மக்களை காப்பாற்ற வேண்டிய நிலையில் உள்ள ஆளும் அரசாங்கமோ உணர்வற்ற நிலையில் பேசாமல் மௌனமாக பயணிக்கிறது.. ஒரு காலத்தில் மத்திய அரசாங்கத்தை தைரியமாக எதிர்த்து மாநில நலனை காப்பாற்றிய கட்சிகள் தமிழ் நாட்டில் இருந்தது.. தற்போது அதே கட்சிகள் இருக்கிறது.. ஆனால் அந்த #மாநில #உணர்வு எங்கே?????
சாமானிய குடிமக்களின் கேள்வியிது...
பதில் சொல்ல வேண்டிய நிலையில் உள்ளவர்கள் எப்போதும் போல தமது பதவி அதிகாரத்தை காப்பாற்றி கொள்ள ஓடிக் கொண்டே இருக்கிறார்கள் இனியும் அப்படி தான் இருப்பார்கள்.. அதில் சந்தேகமில்லை..
ஆனால் கொஞ்சம் மௌனம் கலைந்து தைரியமாக பதிலாவது சொல்லுங்கள்..
#இன்றையதலையங்கம்
#சாமானியனின்கேள்வி
#இளையவேணிகிருஷ்ணா.
இன்னும் 🐒 குரங்குகள் பற்றி நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன்..
#இன்றைய #சுவாரஸ்யமான #விசயம்.
#இளையவேணிகிருஷ்ணா.
அவ்வளவு எளிதன்று
நான் நேசிக்கிறேன்..
அது ஏனோ என்னை
காதலோடு தழுவி
ஆழ்ந்த முத்தமிட்டு
நகர்ந்து சிறிது தூரம் சென்றதும்
மீண்டும் ஏதோ ஞாபகம்
வந்ததை போல
அரவணைத்துக் கொண்டு
விடுவித்து...
இப்படியே தொடர்கிறது
எங்கள் காதல்
கண்ணாமூச்சி விளையாட்டு
#இளையவேணிகிருஷ்ணா.
நேயர்கள் அனைவருக்கும் வணக்கம் 🙏
இன்று இரவு ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சியில் படைப்பாளி கல்பனா அவர்களின் கவிதை தொகுப்போடு இனிமையான பாடல்கள் கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் நேயர்களே 🎻🙏🎻
கீழேயுள்ள லிங்கில் கேட்டு மகிழலாம் வாருங்கள் நேயர்களே 🎻🙏🎻
https://zeno.fm/radio/krishna-fma76ufetpuy8uv/
என்னை கரைத்து விட
மூச்சிரைக்க
இசை வந்த அந்த திசை
நோக்கி ஓடோடி வந்தேன்..
நீயோ மாயமாய் மறைந்து போனாயே...
வெகுநேரம் அழுதுகொண்டே
இருந்தேன்..
சற்று நேரத்தில்
கன்னத்தில் வழியும்
கண்ணீரை மெதுவாக
துடைக்கிறது..
ஏதோவொரு சூட்சம கரம்
அந்த பேரன்பில்
நான் இங்கே கிருஷ்ணா
என்று வாய் விட்டு
பிதற்றுவதை
என்னை வேடிக்கை பார்ப்பவர்கள்
சித்தம் கலங்கியவளோ
என்கிறார்கள்...
நானோ உன் மீது பித்தம்
கொண்டவள் என்பதை
உன்னை தவிர
இங்கே எவர் அறியக் கூடும்
கண்ணா...
#இளையவேணிகிருஷ்ணா.
அந்த இணைப்பின்
மகத்துவத்திற்காக
காத்திருந்தேன்...
நெடுந்நேரம் காத்திருத்தலில்
சலிப்படைந்து
அலைபேசியை மறந்து
அவசரமாக
நகர்ந்த நொடியில்
நீ அந்த அழைப்பை ஏற்று
காதில் வைத்து
நீசொன்ன ஹலோ
காற்றில்
கரைந்தது...
நான் அந்த அலைபேசியை
உன்னை அழைத்து வைத்த
கடைசி அழைப்பது என்று
நீ அறிய நியாயம் இல்லை..
#இளையவேணிகிருஷ்ணா.
மார்கழி மஹா உற்சவம்:-
நமது பாகவதத்தில் ஒரு நிகழ்வு வரும்.அதாவது கோவர்த்தன மலைக்கு பூசை செய்ய சொல்வார் கிருஷ்ணர்.. இந்திரனுக்கு பூசை செய்ய தேவையில்லை.. இந்த கோவர்த்தன பர்வதம் தான் நமது பசு கூட்டங்களுக்கு அடைக்கலம் கொடுத்து பசியாற்றியது.. இந்திரனின் செயல் ஒன்றும் கோபியர்களை காப்பாற்றவில்லை.. அதனால் கோவர்த்தன மலையை பூசை செய்யுங்கள் என்று சொல்வார்.கோபியர்கள் தயக்கத்துடன் தான் அந்த பூசையை மேற்கொள்வார்கள்.. பிறகு இந்திரன் கோபம் கொண்டு ஏழு நாட்கள் விடாமல் மழை பொழிந்து நிறைய துன்பங்களை கொடுத்தாலும் கிருஷ்ணர் காப்பாற்றுவார் என்று தான் அந்த நிகழ்வு போகும்..
சரி இந்த நிகழ்வை பற்றி இங்கே தற்போது ஏன் கூறுகின்றேன் என்றால் பகவான் ஶ்ரீகிருஷ்ணர் #இயற்கையை #நேசியுங்கள்;இயற்கையை புறந்தள்ளி விட்டு நீங்கள் எவ்வளவு பெரிய பூசையை நடத்தினாலும் அது ஒன்றும் பயன்படாது.. என்கின்ற தத்துவத்தை தான் அங்கே நிரூபிக்கிறார்..
ஆனால் தற்போது உலகில் என்ன நடக்கிறது..மூட பக்தி அதாவது பகுத்தறிதல் இல்லாத பக்தி பூசைகள் பெருகி விட்டது.. இப்படி நடத்தும் பூசைகளால் இந்த பிரபஞ்சம் எந்த விதத்திலும் காப்பாற்றப்பட போவதில்லை என்பதை அன்றே #கிருஷ்ணர் சூட்சமமாக சொல்லி இருக்கிறார்..
#கிருஷ்ணர்உணர்த்தும்தத்துவம்
#இளையவேணிகிருஷ்ணா.
#மார்கழிமஹாஉற்சவம்.
இன்று இரவு இந்திய நேரம் ஒன்பது மணிக்கு (9:00pmto10:00pm)உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சியில் படைப்பாளி #கல்பனா அவர்களின் கவிதை தொகுப்போடு இனிமையான பாடல்கள் கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் நேயர்களே 🎻.
கீழேயுள்ள லிங்கில் கேட்டு மகிழலாம் வாருங்கள் நேயர்களே 🎻🙏🎻.
https://zeno.fm/radio/krishna-fma76ufetpuy8uv/
கொஞ்ச நேரம்
என் பந்தங்களை விலக்கி
இங்கே பெய்யும் மழையை
ரசிக்கிறேன்...
இயற்கையின் விதி பந்தம் என்று
அங்கே யாரோ
சொல்லி செல்கிறார்கள்..
நானோ புன்னகை செய்கிறேன்..
இங்கே பற்றற்ற தன்மையின்
வீரியத்திற்கு
பயந்த மனங்களே...
ஏதோவொரு பற்றுக் கோடை
பிடித்து பயந்து பயந்து
கொஞ்சம் கொஞ்சமாக நகர்கிறது...
நான் அவர்களிடம் ஒன்று
சொல்கிறேன்..
கொஞ்சம் எல்லா பந்தங்களையும்
பற்றுகளையும் விலக்கி
முயற்சி செய்து பாருங்களேன்...
இதோ அளவுக் கடந்த ஒளி
உங்கள் முன் வழிகாட்டி
செல்கிறது...
ஏதோன்றில் புதைந்து
பாதுகாப்பாக நகர்வதில்
என்ன சுவாரஸ்யம்
இருக்க போகிறது என்றேன்..
அங்கே அந்த பற்றுக் கோட்டை
தீவிரமாக பிடித்தவர்கள்
தன்னையும் அறியாமல்
கொஞ்சம் கொஞ்சமாக
விடுவித்துக் கொள்ள
முயற்சி செய்தது
என்னை கொஞ்சம்
புன்னகைக்க வைத்தது...
இதோ நம்பிக்கை அவர்களின்
வாழ்வின் பயணத்தை
மாற்ற போகிறதென...
#இளையவேணிகிருஷ்ணா.
நினைவுகளை சுமந்து
திரியாதீர்கள்...
ஏதோவொரு எண்ண கொதிப்பு தான்
உங்கள் இயல்பான வாழ்வை
பதம் பார்க்கிறது..
இங்கே எல்லாமே
ஒரு வேடிக்கை என்பதை
நீங்கள் எப்போது உணர்கிறீர்களோ..
அப்போது சிந்தனையற்ற
மனதை நீங்கள் பெறுவீர்கள்..
அந்த சிந்தனையற்ற மனம் தான்
உங்களை அமைதியான
வாழ்வை நோக்கி நகர்த்தி செல்லும்..
அதை உங்களால் செய்ய முடிந்தால்
நீங்களும் ஞானிதான்..
#இரவுசிந்தனை.
#இளையவேணிகிருஷ்ணா.
நேயர்கள் அனைவருக்கும் வணக்கம் 🙏
இன்று இரவு ஒன்பது மணிக்கு (9:00pmto10:00pm) உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சியில் படைப்பாளி கல்பனா அவர்களின் கவிதைகளோடு இனிமையான பாடல்கள் கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் 🙏🎻🙏
கீழேயுள்ள லிங்கில் இணைந்து கொள்ளுங்கள் நேயர்களே 🎻.
https://zeno.fm/radio/krishna-fma76ufetpuy8uv/
என்னிடம் எதையும்
எதிர்பார்க்காமலேயே...
நானும் அதை அப்படியே வழியனுப்பி
காத்திருக்கிறேன்..
எதையும் எதிர்பாராமல்
ஒரு புதிய வருடத்திற்காக...
இங்கே கடந்து செல்வது காலம் மட்டுமா
சூட்சமமாக நானும் தான்..
வாழ்ந்து விட்டு போகலாம்
வாழ்வை ஒரு விளையாட்டாக..
உற்சாகமாக..
அதன் போக்கில்...
இது தான் நான் எப்போதும்
மனதில் கொள்ளும் பாடம்..
நீங்கள்???
#இளையவேணிகிருஷ்ணா.
இன்று இரவு இந்திய நேரம் ஒன்பது மணிக்கு(9:00pmto10:00pm) உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் எழுத்தாளர் #கல்பனா அவர்களின் கவிதை தொகுப்போடு இனிமையான பாடல்கள் கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் நேயர்களே 🎻🙏🎻.
இது கொஞ்சம் உங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டு இரவை கடக்கும் தருணம்..☔🍁🦋✨.
கீழேயுள்ள லிங்கில் வானொலியோடு இணைந்து கொள்ளுங்கள் நேயர்களே 🙏🎻🙏.
https://zeno.fm/radio/krishna-fma76ufetpuy8uv/
எனக்கான அங்கீகாரம்
எப்போதும் நான் மட்டுமே...
இதில் அடுத்தவர்களின்
கணிப்பு என்பதெல்லாம்
என்னை பொறுத்தவரை
ஒரு பொருட்டே அல்ல..
நான் என்னை மதிக்கிறேன்
நான் என்னை நேசிக்கிறேன்
இதை தவிர வேறு மிக பெரிய
அங்கீகாரம் எதுவும்
எனக்கு தேவையில்லை என்று
சொல்வதை விட
அவசியம் இல்லை..
அதை சுமந்து கொண்டு பயணிக்க
நான் சுமைதூக்கி அல்ல...
நான் எப்போதும் நானாக...
#இளையவேணிகிருஷ்ணா.
இன்று இரவு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சியில் படைப்பாளி #சரஸ்வதி ரவி அவர்களின் படைப்புகளோடு இனிமையான பாடல்கள் கேட்டு ரசிக்கலாம் வாருங்கள்..
இயற்கை கொடுப்பதோ புயல் மழை.. நாங்கள் கொடுப்பதோ இசை மழையோடு கவிதை மழை ☔🥳🎉.
கேட்டு ரசிக்க இங்கே வாருங்கள் கீழேயுள்ள லிங்கில்
https://zeno.fm/radio/krishna-fma76ufetpuy8uv/
#கிருஷ்ணாஇணையதளவானொலி.
நான் அப்படியே அமர்ந்து இருந்தேன் முற்றத்தில்...கொஞ்சம் வெங்காய பக்கோடா கொறித்து கொண்டே இடையிடையே இஞ்சி தட்டி போட்ட தேநீரையும் சூடாக பருகிக் கொண்டே... குளிர் காற்றை மெய்மறந்து ரசிக்கிறேன்..வானிலையின் தன்மை அப்படி..எல்லோரும் குளிர்கிறது என்று போர்த்திக்கொண்டு படுக்கையில் விழுந்து இருக்க நான் மட்டும் ஏனோ இந்த காலநிலையில் ரசிகையானேன்..என் தோளை பற்றி பிடித்தது யார் என்று திரும்பி பார்த்தால் காலம்..அட என்ன இப்போதெல்லாம் நீ என்னை தேடி அடிக்கடி வந்து விடுகிறாய் என்று கேட்டேன்...எனக்கும் ரசனை இருக்காதா..உன்னோடு சேர்ந்து கொஞ்ச நேரம் இந்த காலநிலையை ரசித்து விட்டு போகலாம் என்று வந்தேன் என்றது..ஒரு நிமிடம் இதோ வருகிறேன் என்று சொல்லி விரைவாக அதற்கு சூடான வெங்காய பக்கோடாவோடு தேநீரை மும் கொண்டு வந்து கொடுத்தேன்..அது மிகவும் ஆர்வமாக வாங்கிக் கொண்டு ரசித்து வெங்காய பக்கோடாவை ருசித்து தேநீரை ரசித்து பருகியது.. இருவரும் அமைதியாக அந்த காலநிலையை ரசித்தோம்..எங்கோ இருந்து வந்த மழைக் கால மேகம் ஒன்று பாடல் இந்த காலநிலையில் கேட்க இதமாக இருந்தது... இப்படியான பாடல்கள் கேட்க கேட்க இனிமை தான் இல்லையா என்றது காலம் என்னிடம்..ஆமாம் காலமே..சில நேரத்தில் சில பாடல்கள் நாம் எநிர்பாராத நேரத்தில் இப்படி வந்து மகிழ்விக்கும் போது கிடைக்கும் சுகமே தனி தான் என்றது..திடீரென வேகமாக வீசிய காற்று நின்றது..ஆழ்ந்த இந்த இரவின் அமைதி ஏதோவொரு ஆவலை எங்களை தூண்டியது..நாங்கள் இருவருமே இதை பார்த்து கொஞ்சம் ஆச்சரியம் அடைந்தோம்..என்ன நடக்கிறது இங்கே காலமே என்றேன் ஆவலாக..நானும் உன்னை போல தான் ஆச்சரியமாக பார்க்கிறேன் எனது ஆருயிர் தோழியே என்றது..கொஞ்ச நேரம் நாங்கள் நடக்கும் அந்த காலநிலை மாற்றங்களை ரசித்து இருந்தோம்..திடீரென காலம் என்னிடம் ஏதாவது இந்த சூழலுக்கு தகுந்தார் போல ஒரு கவிதை சொல்லேன் என்றது..கவிதையா..மீண்டும் மீண்டும் மீண்டும் ஏன் இந்த சோதனை உனக்கு என்றேன் சிரித்துக்கொண்டே 😊?அட சொல்லேன்..என்றது.. கொஞ்சம் கொஞ்சலாக..சரி சரி சொல்கிறேன்.. என்றேன்.. புயல் வரும் நேரத்தில் நிகழ்கால கவிதை 🍁
இதோ இன்னும் சில மணிநேரங்களில்
கரை கடந்து விடும்
அந்த புயல்...
என் மனதில் சுற்றிக் கொண்டு இருக்கும்
உனது காதல் எனும் புயலை
கடக்க தான்
கரை தேடி அலைகிறேன்...
எக்காலம் கரை சேருமோ...
அட எவ்வளவு அழகான கவிதை இது என்று கைத்தட்டி சபாஷ் சொன்னது..
மீண்டும் நாங்கள் இருவரும் அமைதியானோம்..
இங்கே கொஞ்சம் கொஞ்சமாக சாரலாக மழை வர தொடங்கியது.. இப்போது இன்னும் ஆழ்ந்த அமைதியில் அந்த காலநிலையில் லயித்து கிடந்தோம் எங்களை மறந்து..
#காலமும்நானும்
#இளையவேணிகிருஷ்ணா.
நான்:-கொஞ்சம் அந்த பக்கம் போகிறீர்களா.. நான் தற்போது இங்கே சாரலாக பொழியும் மழையில் ரசித்து கொண்டு இருக்கிறேன் என்றேன்..
Some one else:-அதுவா இப்போது முக்கியம் பாஸ்... இங்கே வாருங்கள் விமர்சனம் செய்யுங்கள்..
நான்:-நான் ஏதாவது சொல்லி உங்களை திட்டுவதற்குள் இங்கே இருந்து நகர்ந்து விடுங்கள்.. நான் தற்போது அரசியல் விமர்சனம் செய்யும் மனநிலையில் இல்லை.. சாரல் மழையை ரசித்து கொண்டே கொஞ்சம் அழகான இசையை கேட்டு கொண்டு இருக்கிறேன்.. தயவுசெய்து நாளை அல்லது நாளை மறுநாள் வாருங்கள்..அதை பற்றி நிறைய பேசலாம்.. ஆமாம் அதை பற்றி பேசுவதற்கு என்ன இருக்கிறது.. தெரிந்த கதையை மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருக்க இது என்ன பகவத் கீதையா.. போங்கள் நிம்மதியாக சாப்பிட்டு விட்டு உறங்குங்கள்.. உறக்கம் வரவில்லை என்றால் என்னை போல ஏதாவது இசையோடு மழையை ரசியுங்கள்.. இனிய இரவு வணக்கம்..
Some one else:-இவர்கள் ஏன் தற்போது இப்படி கோபமான மனநிலையில் இருக்கிறார்கள் என்று புரிந்தும் புரியாமலும் என் இருப்பிடத்தை விட்டு நகர்ந்தார்..
நான் நிம்மதியாக இசையை ரசித்துக் கொண்டே சில கவிதைகளை எழுதிக் கொண்டே அந்த சாரல் மழையை இமை மூடாமல் ரசித்தேன்.. அதில் சில துளிகள் நான் எதிர்பாராத நேரத்தில் என் கன்னம் வருடி சென்றதை என்னால் தடுக்க இயலவில்லை.. ஆனால் அந்த வருடலின் அவசியம் இப்போது தேவையாக இருந்தது எனக்கு.. ஏனெனில் அவர் மீது கொண்ட கோபத்தை போக்க..
#இளையவேணிகிருஷ்ணா.
நேயர்களே வணக்கம் 🎻🙏🎻. இன்று இரவு இந்திய நேரம் ஒன்பது மணிக்கு (9:00pmto10:00pm) உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சியில் படைப்பாளி #சரஸ்வதிரவி அவர்களின் அழகான கவிதைகளோடு இனிமையான பாடல்கள் கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் நேயர்களே 🎻🙏🎻.
இந்த மழைக் கால இரவொன்றில் வானொலியை கண்களை மூடிக் கேட்டுக் கொண்டே இரவை கடக்கலாம் 😊. 🎻💐.
கீழேயுள்ள லிங்கில் இணைந்துக் கொள்ளுங்கள் நேயர்களே 🎻🙏🤝.
https://zeno.fm/radio/krishna-fma76ufetpuy8uv/
இரவெனும்
வேள்வித் தீயில்
உன் நினைவுகளை
ஆகூதி செய்து
என்னை கொஞ்சம்
ஆசுவாசப்படுத்திக் கொள்கிறேன்
#இளையவேணிகிருஷ்ணா.
இன்று இரவு #ஒன்பது மணிக்கு(9:00pmto10:00pm) உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் #இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சியில் படைப்பாளி #சரஸ்வதிரவி அவர்களின் கவிதை தொகுப்புகளோடு இனிமையான பாடல்கள் கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் நேயர்களே 🎻🙏🎻
கீழேயுள்ள லிங்கில் நிகழ்ச்சி கேட்டு மகிழலாம் 🎻.
https://zeno.fm/radio/krishna-fma76ufetpuy8uv/
இன்று இரவு ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் படைப்பாளி #சரஸ்வதி ரவி அவர்களின் கவிதை தொகுப்போடு இனிமையான பாடல்கள் கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் நேயர்களே 🎻🙏🎻
கீழேயுள்ள வானொலி லிங்கில் கேளுங்கள் 🎻
https://zeno.fm/radio/krishna-fma76ufetpuy8uv/
நீதான் அழைக்கிறாய்
என்று தெரிந்தும்
அழைப்பை ஏற்க மறுக்கிறது
என் மனம்...
மீண்டும் மீண்டும்
காதலின் கதறலை
கேட்க என் மனதிற்கு
தைரியம் இல்லை...
நாம் மௌனமாக
விலகி காதலை கண்ணீரில்
கரைத்து பயணிப்போம்
இதுவும் ஒரு துளி
இன்பம் தானே
இங்கே...
எளிதாக சொல்லிக் கொள்கிறேன்...
மனம் தான் ஏற்க மறுத்து
பெரும் கண்ணீரை
பரிசாக அளித்து விடுகிறது..
அதை நம் காதலின் அடையாளமாக
அதன் எல்லா துளிகளையும்
ஒரு தாளில் சேர்த்து
வைத்துக் கொள்கிறேன்..
#இளையவேணிகிருஷ்ணா.
அன்றொரு நாள்
ரயில் பயணத்தில்
பயணித்தோம்
இதே வழியில்...
அதீதமான காதல் உணர்வோடு..
இன்று இதே பாதையை
நான் கடந்து செல்லும் போது
உன் நினைவுகள் எனும்
சுவடுகளை தவிர
வேறெதுவுமில்லை..
தொலைதூரத்தில்
ஏதோவொரு ஒரு அபூர்வ பூவின்
வாசம் ஒன்று
என் நாசியை துளைக்கிறது...
அது ஏனோ உன் அருகில்
நான் இருந்து பயணித்த
வாசத்தை ஞாபகப்படுத்துவதை
என்னால் தடுக்க இயலவில்லை..
#இளையவேணிகிருஷ்ணா.
எத்தனை தடைகளை
தாண்டியும்
நீ பெண்ணாக அரசியலில்
பிரகாசித்தாய்...
இன்னும் எவ்வளவோ
விசயங்கள் நீ செய்து முடிக்க
இங்கே இருந்தது...
உனக்குள் ஏதோவொரு
ரகசியம் புதைந்து கிடந்ததை
இங்கே யார் அறியக் கூடும்?
உன் பெயருக்காக
உன் முகத்திற்காக
உன் தைரியமான பேச்சுக்காக
யாரோ ஒருவர்
ஓட்டு அறுவடை செய்து
மகிழ்ந்திருக்க...
நீ பகடைகாயாக...
நான் உணர்கிறேன்
இப்போது
நீ இல்லாத இந்த தமிழகம்
ஏதோவொரு ஒரு வெறுமையை
தாங்கி
அரசியல் பயணம் செய்கிறது...
உன் ஆளுமையை இங்கே
எவரும் குறைத்து சொல்ல முடியாது...
நீ இன்னும் கொஞ்சம்
தைரியமாக துணிந்து
பல காரியங்களை நடத்தி
இருந்தால்
இந்த தமிழகம்
ஒரு இரும்பு பெண்மணியை
பெற்றது என்ற பெருமை கொண்டு
இருக்கும்...
முதன் முதலாக உனக்கு ஒரு
நினைவஞ்சலி கவிதை
எழுதுகிறேன்
நினைவு நாளாக அறிவிக்கப்பட்டு இன்று...
#நினைவஞ்சலி
#இளையவேணிகிருஷ்ணா.
இரவொன்றில்
அங்கே தெருவில்
குரைத்து கொண்டு
இருக்கும்
அந்த நாயின்...
அதன் தவிப்பை...
இங்கே இருக்கும்
இதமான காலநிலையில்
கதவடைத்து
உறங்குபவர்களுக்கு
தெரிய நியாயமில்லை தான்..
நீ விழித்துக் கொண்டு தானே
இருக்கிறாய்
அதன் குரலின் தவிப்பு
உணர்ந்தும் ஏன்
வெளியே செல்லவில்லை என்று
என் மனசாட்சி கேட்கும்
கேள்விகளுக்கு பதில்
என்னிடம் இல்லை..
என் தவிப்பை மௌனமாக
அதற்கு ஒரு மின்சாரம் இல்லாத
இந்த அறையில்
அமர்ந்துக் கொண்டு
கடத்திக் கொண்டு இருக்கிறேன்...
மனதின்
குற்றவுணர்ச்சி எனும்
நெருடலோடு...
#இந்த மழை இரவும் நானும்
#இளையவேணிகிருஷ்ணா.
தற்போது வாட்ஸ் அப்பில் இந்த ஆப்சன் வந்து இருப்பது மிகவும் நல்ல விசயம்.. முன்பெல்லாம் ஏதேனும் குறுந்தகவல் தெரியாமல் அதாவது யோசிக்காமல் அனுப்பி விட்டால் அல்லது ஒருத்தருக்கு அனுப்ப வேண்டிய குறுந்தகவல் இன்னொருத்தனுக்கு அனுப்பி விட்டால் ஒரு பதட்டம் வந்து விடும்.. நான் இதுவரை ஒருத்தருக்கு அனுப்ப வேண்டிய குறுந்தகவலை இன்னொருவருக்கு அனுப்பியதே இல்லை என்பது வேறு விசயம்.. ஆனால் ஏதோவொரு வேகத்தில் குறுந்தகவல் போட்டு விட்டு உடனே வாசித்து விட்டு அடடா இது சரியில்லை என்று நினைத்து டெலிட் செய்து இருக்கிறேன்.. பெரும்பாலும் நடப்பது இல்லை.. சில நேரங்களில் எனக்கு இருக்கும் கோபத்தில்.. ஆனால் பெரும்பாலானவர்களுக்கு இது அடிக்கடி நடந்து விடுகிறது.. அப்போதெல்லாம் அந்த டெலிட் செய்த மெஸேஜ் படும் பாடு இருக்கிறதே..அடடா... அது அந்த அனுப்பி டெலிட் செய்த மெஸேஜ்க்கு தெரியாது.. அதுபாட்டுக்கு தேமே என்று டெலிட் ஆகி நிம்மதியாக இருக்கும் இருந்த இடம் தெரியாமல்.. குறுந்தகவல் அனுப்பப்பட்டவருக்கும் அதை டெலிட் ஆன நிலையில் பார்க்கும் குறுந்தகவல் பெறுபவர் நிலையும் தான் பெரும் போராட்டமாக அமைந்து விடும்.. அதை நல்ல புரிதல் இருப்பவர்கள் சாதாரணமாக கடந்து சென்று விடுகிறார்கள்.. ஆனால் டெலிட் ஆன குறுந்தகவல் என்னவாக இருக்கும் என்று மண்டைக்குள் ஒரு குறுகுறுப்பு இருப்பவர்களை சமாளிப்பது தான் பெரும் பிரச்சினை.. இங்கே நாட்டில் ஆயிரம் ஆயிரம் விசயங்கள் நடக்கிறது.. அதைப்பற்றி குறுகுறுப்பு சிறிதும் இங்கே இல்லை.. உணர்வற்ற மனிதர்களாக தான் இருக்கிறார்கள்..ஏதோ தவறாக அனுப்பி டெலிட் ஆன குறுந்தகவல் படும் பாடு இருக்கிறதே அது ஏதோ கொலை குற்றம் செய்து விட்ட மனிதரை போல அவதிப்படுகிறது.. ஏன் அந்த கொலை குற்றம் செய்த மனிதர்கள் கூட பெயிலில் தப்பி விடுகிறார்கள்..😔
இது ஒரு நல்ல நோக்கத்தில் வாட்ஸ் அப் கொண்டு வந்ததே எத்தனை மனிதர்களை பிரச்சினையாக்கி அழகு பார்க்கிறது.. என்ன உலகமடா இது சாமி🏃🤦.
#வாட்ஸ்அப்அலப்பறைகள்.
#இளையவேணிகிருஷ்ணா.
இங்கே பெய்யும் மழை
எனது இதயத்தில் உள்ள
அத்தனை உற்சாகமான
உணர்வுகளை உள்வாங்கி
என்னுள் ஊற்றாக
இறங்குகிறது...
அந்த மழைக் கால நேரமொன்றில் தான்
நீ எனக்கு அறிமுகம் ஆனாய் என்று நான்
நினைக்கும் போதே
என் மனம் உடனே
அதை பெய்கின்ற மழையில்
உன் நினைவுகளை கரைத்து
என்னை கொஞ்சம்
அன்பு கலந்த அதிகாரத்தில்
மிரட்டுகிறது...
இங்கே பெய்கின்ற மழையை நேசி..
இதை விட தற்போது
உன் காதலியின் நினைவு
பெரிதில்லை என்றது..
நானும் அதுதான் சரி என்று
வெளியே பெய்யும் மழையை
ரசிக்கிறேன்...
அங்கே வீசும் காற்றில்
தெறிக்கும் சாரல்
எனது முகத்தில் முத்தமிட்டு
நொடி பொழுதில் மறைந்தது..
#நிகழ்காலகவிதை
#மழைசாரல்
#இளையவேணிகிருஷ்ணா.
விடை பெற்ற
அந்த தருணத்தின்
அடுத்த நொடியில்
நான் ஞானியாகி பயணிக்கிறேன்
இந்த பிரபஞ்சம் எனும்
கவித்துவமான படைப்போடு
#இளையவேணிகிருஷ்ணா.
காலம் என்ன அதிகாலையில் இருந்து ஏதேனும் கிறுக்கி கொண்டே இருக்கிறாய் என்றது என்னிடம்.. இதமான காலநிலையில் இதை எழுத்தின் மூலம் தான் அனுபவிக்க முடியும் காலமே.. மேலும் எழுத ஆரம்பித்தால் ஏனோ எழுத்தெனும் போதை இன்னும் இன்னும் என்று என்னை விடாமல் துரத்துகிறது.. நான் என்ன செய்ய இயலும் என்றேன் மிகவும் அப்பாவியாக..
போதைக்கு அடிமையாவது தவறு என்று உனக்கு எவரும் சொல்லி தந்து வளர்க்கவில்லையா என்று சிரித்தது.. உண்மை தான் காலமே இங்கே எந்த போதையும் ஒரு அளவோடு இருந்தால் நலம் தான்.. ஆனால் எங்கே கேட்கிறது இந்த புத்தி என்றேன் மிகவும் சலிப்பாக... காலம் சிரித்து கொண்டே நகர்கிறது...
#காலமும்நானும்
#இளையவேணிகிருஷ்ணா.
காலமும் நானும்:-
வெகுநாட்கள் ஆகிறது
ஒரு காதல் கவிதை எழுதி
நீ என்றது காலம்
காதல் என்றால் என்றேன் நான்...
காதல் என்றால் காதல் தான்
என்றது காலம்...
ஓ அப்படியா..
இப்போது சொல்கிறேன் காதலை என்றேன்..
எங்கே வேகமாக எழுது என்றது காலம்...
இதோ இங்கே நழுவி சென்ற
அந்த நொடி என்னை நேசிப்பதாக சொல்லி
சென்றதை இப்போது தான்
கவனித்தேன்...
அந்த நொடிக்கான கவிதை இது...
நீ நேசித்த அந்த பொழுதில்
நான் எங்கோ தொலைந்திருந்தேன்..
நான் உன் காதலை உணர்ந்து தேடிய போது
நீ எங்கோ புதைந்து போனாய்...
இங்கே காதல் எனும் உணர்வை தான்
நீயும் நானும் நேசித்து கிடந்தோம்..
அதை நீ எங்கோ இருந்து
உணர்கிறாய்..
நான் இங்கிருந்து உணர்கிறேன்...
எப்படி கவிதை என்றேன் காலத்திடம்...
எங்கே சுற்றியும் நீ
என்னை தவிர எவரையும் காதலிக்க போவதில்லை என்று மெலிதாக காதலோடு
சிரித்து விட்டு நகர்ந்தது..
நானோ சற்று பொறு காலமே
உனக்கான தேநீர் நீ இன்னும் சுவைக்கவில்லை என்றேன்
சற்று கடமைகள் உள்ளது
மாலையில் வருகிறேன் என்று சொல்லி காதலோடு விடை பெற்று சென்றதை
நான் காதலோடு உணர்கிறேன் கையசைத்து...
#காலமும்நானும்
#இளையவேணிகிருஷ்ணா.
நீயோ குருட்டு பிடிவாதத்தால் எவரின் தூண்டுதலாலோ விலகி விலகி பயணிக்கிறாய் என்னிடம் இருந்து... அந்த உக்ரைனை போல... நானோ உன்னை என் பேரன்பின் ...