ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

செவ்வாய், 31 அக்டோபர், 2023

கிருஷ்ணா இணையதள வானொலி (Krishna fm)

 


நேயர்கள் அனைவருக்கும் இனிமையான வணக்கம் 🙏.

இன்று இரவு ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் மௌனா அவர்களின் கவிதை தொகுப்போடு இனிமையான பாடல்கள் கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் நேயர்களே 🎻🙏🎻.

https://zeno.fm/radio/krishna-fma76ufetpuy8uv/

ஞாயிறு, 29 அக்டோபர், 2023

இரவு சிந்தனை ✨


ஏதோ சுவாரஸ்யமாக இருக்கும் என்று நாம் நினைத்து பல விசயங்களை செய்கிறோம்...

உண்மையில் அந்த நிகழ்வை அடைந்தவுடன் நாம் மிகவும் முதலில் இருந்த அந்த ஆவலை குறைத்து விடுகிறோம் அல்லது குறைந்து விடுகிறது... அப்போது தான் நமக்கு உண்மை தெரியும்.... வாழ்வு என்பது இதை விட மிக பெரிய சுவாரஸ்யமான பொக்கிஷம் என்று...

இந்த பௌதீக வாழ்க்கை என்பது நிச்சயமாக ஒரே நிகழ்வில் தொடர்ந்து அதே உற்சாகத்துடன் பயணிக்க முடிகிறதா நம்மால்? நிச்சயமாக இல்லை தானே.. அப்போது நமது வாழ்வெனும் பயணம் எதை நோக்கி இருக்க வேண்டும் என்று யோசியுங்கள்...

#இரவுசிந்தனை.

#இளையவேணிகிருஷ்ணா.

வெள்ளி, 27 அக்டோபர், 2023

ஆழ்ந்த உறக்கம் வரும் நேரத்தில்...

 


ஆழ்ந்த உறக்கம்

வரும் நேரத்தில்

அந்த விழிகளுக்கு

ஓய்வு கொடுங்கள்

உங்கள் கண் இமைகள் எனும் 

கதவுகளை சத்தம் இல்லாமல் மூடி...

அதை விட மதிப்பு வாய்ந்த 

நிகழ்வொன்றை

உங்கள் கண்களுக்கும் மனதிற்கும் 

உங்களால்

வேறு என்ன செய்து விட முடியும்???

#இரவுகவிதை.

#இமைகள்.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 27/11/23.

நேரம் இரவு 11:14.

இந்த நொடியில் இழக்கிறேன்.. அடுத்தடுத்த நொடியில்...

 


இதோ இந்த நொடியில்

அனைத்தையும் இழக்கிறேன்...

தாங்க முடியாத பெரும் இழப்பு தான்...

இதோ அடுத்தடுத்த நொடிகளில் 

நான் இழப்பை சரி செய்கிறேன்...

அந்த காலத்தின் பெரும் ஆக்ரோஷமான சக்தியோடு...

என் இழப்பிற்காக வருந்தி அங்கே 

பேசிக் கொண்டு இருந்தவர்கள் 

சற்றே இந்த நொடியில் 

திகைக்கிறார்கள்..

எப்படி மீண்டேன் என்று...

அது தான் எனது வரம்...

நான் தோற்று விடுவதே இல்லை...

புதுப்பித்தல் மட்டுமே 

என் வாழ்வில் எப்போதும் நிகழ்கிறது...

ஏனெனில் நான் சாதாரண மனுஷி அல்ல...

#புதுப்பித்தல்.

#உற்சாகம்.

#இளையவேணிகிருஷ்ணா.

காலத்திற்கு கூட தெரியாத ரகசியம்...

 


பெரிதாக எதையும் நான் 

அவ்வளவு கண்டுக் கொண்டு 

பயணிப்பதில்லை

வாழ்வெனும் பெரும் பயணத்தில்...

ஆனால் ஏதேனும் சில விசயங்கள் 

செய்ய வேண்டும் என்று 

முடிவெடுத்து விட்டால்

அதை நோக்கிய 

சுவாரஸ்யமான பயணத்தில் 

நான் கலந்து விடுவதையும்

மறுப்பதற்கு இல்லை...

எது எப்படியோ

என் வாழ்வின் சுவாரஸ்யமான 

பயணங்கள்

இப்போதும் ருசியோடு தான் இருக்கிறது என்பதே

எனக்கு பெரும் ஆறுதல்...

இதோ அடுத்தடுத்த நிலையை நோக்கி மிகவும் நிதானமாக அதே சமயத்தில் சுறுசுறுப்பாக நகர்கிறேன்...

நான் இப்படி மீண்டும் புதுப்பித்துக் கொள்வதை பார்த்து காலம் என்னை கொண்டாடி உற்சாகப்படுத்துகிறது...

பாவம் அதற்கென்று நானும்

எனக்கென்று அதுவும் தான்

தற்போதைய ஆறுதல் என்பது 

அந்த காலத்திற்கே கூட 

தெரியாத ரகசியத்தை...

இதோ இங்கே இப்போது உங்கள் முன்பு உடைத்து விட்டேன்...

ரகசியம் காக்க தெரியாத

என்னை மன்னித்து விடு காலமே...😌.

#நானும்காலமும்.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:27/11/23.

நேரம் இரவு 10:27.

இதோ இந்த நொடியில் கூட...

 


நான் என்ன செய்கிறேன் என்று

பரபரப்பாக

என்னை பற்றி

தெரிந்துக் கொள்ள

யோசிக்காதீர்கள்...

நிச்சயமாக நான் பெரிதாக எதையும் 

செய்து விட போவதில்லை...

இந்த உலகத்திற்கு ஒவ்வாத அல்லது 

ஏற்றுக் கொள்ள முடியாத

உங்கள் கண்களுக்கு

ஒரு உப்பு பெறாத விசயத்தை தான்

இதோ தற்போது இந்த நொடியிலும் 

நான் செய்துக் கொண்டு 

இருக்கிறேன்...

இதற்கு ஏன் நீங்கள் அவ்வளவு 

பரபரப்பு அடைந்து

சலிப்படைகிறீர்கள்???

#இரவுகவிதை.

#இசைச்சாரல்வானொலி.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 27/11/23.

நேரம் இரவு 10:00.

பேசி தின்ற அந்த நொடிகள்...

 


உனக்கும் எனக்குமான

அந்த தொடர்பற்ற நிலையின் 

சுகத்தை

தினம் தினம் பேசி

தின்ற அந்த நொடிகள் கூட 

தந்ததில்லை...

#இரவுகவிதை.

#இசைச்சாரல்வானொலி.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:27/11/23.

நேரம் இரவு 9:51.

நீ ஏன் விடை பெற்று செல்கிறாய்?


 நான் இங்கிருக்கிறேன்

என்பதற்காக

நீ ஏன் நகர்கிறாய்?

இதோ கரையும் நிமிடங்களில்

நானும் விடைபெற்று செல்வேன்...

நீ பதட்டம் இல்லாமல் இரு...

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

#இசைச்சாரல்வானொலி.

நாள்:27/11/23.

நேரம் இரவு 9:40.

புதன், 25 அக்டோபர், 2023

எனது சந்தோஷம்...

 


உன் பெயரில்

ஒரு கோடி மதிப்புள்ள சொத்து 

இருக்கிறதே

அதனால் நீ சந்தோஷமாக 

இருக்கிறாயா என்கிறார்கள் 

அங்கே சிலர்...

நானோ மிகவும் நிதானமாக என் சட்டை பையில் உள்ள அந்த செல்லா காசான பத்து பைசாவை காட்டி இது தான் என் சந்தோஷம் என்றேன்...

அவர்கள் கலகலவென்று நகைத்து விட்டு இது வா உன் சந்தோஷம் என்று கேலியாக கேட்கிறார்கள்...

நானும் நிதானமாக ஆமாம்... என்றேன்.. ஏன் என்று விடாப்பிடியாக கேள்வி கேட்கிறார்கள்...

நானோ என்னோடு எங்கே சென்றாலும் கூடவே பயணிக்கிறது...

அதற்கும் பாதுகாப்பு தேவையில்லை எனக்கும் பாதுகாப்பு தேவையில்லை அதனால் தான் என்றேன்..

என் பதிலில் திருப்திக் கொண்டோ அல்லது புரிந்துக் கொண்டோ அவர்கள் அத்துடன் என்னிடம் கேள்வி கேட்பதை விட்டு விட்டு அவரவர் பாதையில் பயணிக்க நான் அவர்களை ஒரு புன்முறுவலோடு வேடிக்கை பார்க்கிறேன்...

#எனதுசந்தோஷம்...

#இசைச்சாரல்வானொலி.

நாள் 25/10/23.

நேரம்:இரவு:11:15.

பிரிதலில் அவ்வளவு கவலைப்பட ஒன்றும் இல்லை...

 


பிரிதலில் அவ்வளவு கவலைப்பட ஒன்றும் இல்லை...

இந்த பிரபஞ்சமே அந்த ஒரு நிகழ்வில் தான் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது..

ஒட்டுதலில் ஒட்டாமை புரிந்துக் கொண்டால் இங்கே பிரிதலை பற்றியோ சேர்தலை பற்றியோ எவ்வித கவலையுமின்றி பயணிக்கலாம்... கொஞ்சம் சிந்தியுங்கள்.. இந்த பிரபஞ்சத்தின் தனித்துவம் உங்களுக்கு புரியும் போது ஒரு குறுநகையோடு உங்களை நீங்களே புரிந்துக் கொண்டு ஆனந்தமாக பயணிப்பீர்கள்...

#வாழ்வின்புரிதல்.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:25/10/23.

நேரம் 10:58.

ஆழ்ந்த மன அமைதி...


 எதையாவது செய்யுங்கள்...

இல்லை செய்யாமலும் இருங்கள்...

ஆனால் 

ஆழ்ந்த மன அமைதியை மட்டும்

எப்போதும் கை விட்டு விடாதீர்கள்...

அது ஒன்றே நமது வாழ்வை

எப்போதும் ஆனந்தமாக 

புத்துணர்வோடு வைத்து இருக்கும்...

#ஆழ்ந்தமன #அமைதி.

#இளையவேணிகிருஷ்ணா.

என் அடையாளம் ...

 


என் அடையாளம்

எப்போதும் என்னை 

முன்னிறுத்திக் கொண்டு அல்ல...

என் ஆன்மாவை 

முன்னிறுத்திக் கொண்டு...

#இரவுசிந்தனை.

#இளையவேணிகிருஷ்ணா.

மகரம் எனும் பெரும் சக்தி...

 


மகர ராசி என்பது எல்லா கர்மாக்களையும் முடித்து விட்டு இறைவனோடு இரண்டற கலந்து இறை எனும் சூட்சமத்தில் ஒடுங்கி விடும் ராசி...

கர்ம பந்தங்களை பொசுக்கி சாம்பலாக்கி ஒரு பற்றற்ற தன்மையில் யாரையும் ஒரு பொருட்டாக மதிக்காமல் இறைவனின் சூட்சம சக்தியின் துணைக் கொண்டு இந்த பிரபஞ்சத்தின் ஒட்டு மொத்த தொடர்பையும் கிழித்துக் கொண்டு அந்த ஆன்மா எத்தனை குதிரை திறனில் பயணிக்கும் என்று அந்த படைத்த பிரம்மாவுக்கு கூட தெரியாது... அது தான் மகரம்...

எவரேனும் தனது வழி பயணத்தில் குறுக்கிட்டால் அமைதியாக சொல்லி புரிய வைப்பார்கள்.. இல்லை என்றால் தூக்கி போட்டு விட்டு என் வழி தனி வழி என்று பயணிப்பார்கள்...மகரத்தை புரிந்துக் கொண்டு அவர்களோடு பயணிப்பது அவ்வளவு எளிதல்ல... ஆனால் அந்த இறைவன் எப்போதும் துணையாக பயணிக்கும் ஒரே ராசி மகரம்.. அது ஒரு விஷேஷமான ராசி... துன்பங்களை எல்லாம் பெரிதாக மதிக்க மாட்டார்கள்..அதே சமயத்தில் இன்பத்தையும் தூக்கி போட்டு விட்டு எளிதாக பயணிப்பவர்கள்... எப்போதும் ஒரு பெரிய ராஜ்ஜியத்தை ஆளும் பெரும் சக்தி அவர்களுக்கு உண்டு... நிறைய விட்டு கொடுப்பார்கள்.. ஒரு கட்டத்தில் சரிப்பட்டு வராது என்று தெரிந்து விட்டால் தூக்கி போட்டு விட்டு போய்க் கொண்டே இருப்பார்கள்.. அதிலும் அனைத்து கிரகங்களும் வலுத்து அது மகர ராசியாக இருந்து விட்டால் தயைக் கூர்ந்து அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள்.. அது உங்களுக்கு நல்லது.. இல்லை என்றால் உங்களுக்கு தான் நஷ்டம்.. மேலும் பல கிரகங்கள் வலுத்து விட்டால் அந்த இறைவனோடு நேருக்கு நேர் சண்டை போடும் பெரும் சக்தி உள்ளவர்கள் மகர ராசிக்காரர்கள்...

#மகரம்...

#இளையவேணிகிருஷ்ணா.

நகரம் உறங்குகிறது...


நெடுஞ்சாலைகள் 

ஓய்வெடுக்கும் தருணத்தில் 

நகரம் உறங்குகிறது...

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:25/10/23.

நேரம் 9:15.

ஞாயிறு, 22 அக்டோபர், 2023

புது சட்டை வேண்டவே வேண்டாம்..

 


சட்டை நைந்து விட்டது என்கிறேன்...புது சட்டை எல்லாம் இப்போதைக்கு இல்லை இதை வைத்து இன்னும் சில காலம் ஓட்டு என்கிறது மனம்...நானோ அதிவிரைவாக எனக்கு இந்த நைந்த சட்டை பாரமே தாங்கவில்லை...புது சட்டை வேண்டவே வேண்டாம் என்றேன் பரபரப்பாக.. அதெல்லாம் உன் கையில் இல்லை.. உன் இருவினை கணக்கை பொறுத்தது என்று கொஞ்சம் கோபமாக சொன்னது மனம்...நானோ இந்த நைந்த சட்டை மட்டுமே போதும்... புது சட்டை வேண்டாம் என்று சத்தமாக அழுகிறேன்... என்னை அங்கே ஒரு குழந்தை வேடிக்கை பார்த்து கைக் கொட்டி கலகலவென்று சிரித்தது...

#இரவுசிந்தனை.

#இளையவேணிகிருஷ்ணா.

#இசைச்சாரல்வானொலி.

நாள்:22/10/2023.

நேரம் 8:39.

சனி, 21 அக்டோபர், 2023

மனவெளி சாலையில்...


அங்கே அவ்வளவு சண்டை

நடந்துக் கொண்டு இருந்தது...

என் மனம் எனும்

சாலை வெளியில் ...

துயரங்கள் என்ற பகைவனை

துரத்துவதற்காக...

நான் சற்றே சமாதானமாக

இருங்கள் என்று 

என் மனவெளியில் 

சண்டை இடுபவர்களை பார்த்து 

கட்டளை இட்டும்

நான் பேசுவதை

கண்டுக் கொள்வதாகவே 

தெரியவில்லை...

நான் சற்றே கோபமாக

துயரங்கள் என் மனமெனும் 

சாலையின் ஓரத்தில்

பயணித்து விட்டு போகட்டும்..

நீங்கள் கொஞ்சம்

இந்த சாலையை விட்டு 

விலகிச் செல்லுங்கள் என்றேன்..

நாங்களா விலக வேண்டும் என்று

சற்றே ஆச்சரியமும் பயமும் கலந்து

அந்த சாலையை விட்டு விலகி

நடக்கிறார்கள்..

நானும் என் மனவெளியில்

பயணிக்கும் துயரமும் 

கொஞ்சம் அமைதிக் கொள்கிறோம்..

#இளையவேணிகிருஷ்ணா.





நடனமாடி தொலைக்கிறேன்..


எத்தனையோ களேபரங்கள்...

என் மீது ஆயிரம் ஆயிரம்

பொய்கள் பரப்பிக் கொண்டு

அங்கே சிலர்...

எத்தனையோ சொல்லொணா 

துயரங்கள்...

இப்படி என் வாழ்வில் 

நொடிக்கு நொடி 

நிகழ்ந்துக் கொண்டே தான்

இருக்கிறது..

இதை எல்லாம் கண்டுக் கொள்ளாமல்

நான் ஆழ்ந்த 

அமைதி மனம் கொண்டு

நடனமாடி அவை என்னை 

நெருங்காமல்

நடனமாடிக் கொண்டு இருக்கிறேன்...

இவை தவிர வேறு என்ன தான்

செய்ய இயலும் என்னால்?

#இளையவேணிகிருஷ்ணா.


அமைதி பயணிக்கும்...


ஆள் அரவமற்ற 

பாதையில்

ஆழ்ந்த அமைதி 

இருப்பது போல

தனித்து வாழ்வில் 

பயணிக்கும் போது 

எப்போதும் நம்மோடு 

அமைதி பயணிக்கும்!

#இளையவேணிகிருஷ்ணா.

செவ்வாய், 17 அக்டோபர், 2023

இரவு சிந்தனை ✨

 


எதன் மீதும் 

பற்று இல்லாதவர்களை 

எந்த சக்தியாலும் 

துன்பம் அடைய செய்ய முடியாது...

#இரவுசிந்தனை.

நாள்:17/10/23.

நேரம் இரவு 10:28.

#இளையவேணிகிருஷ்ணா.

புறவழி சாலை... ஆன்மீக பயணத்தில்..

 


ஒரு அழகான ஆன்மீக பயணத்தில் பயணித்த உணர்வை இந்த கதை எனக்கு தந்தது.. கற்பனை மிகவும் அருமையாக இருந்தது.. கேட்டு தான் பாருங்கள்.. உங்களுக்கும் அந்த உணர்வும் தோன்றும்..

கீழேயுள்ள லிங்கில் கதை கேட்டு தங்களது மேலான விமர்சனங்கள் இங்கே பதியுங்கள் நேயர்களே 🎻✨🙏.

https://mylangaudio.in/ta/stories/puravazhich-chaalaiyum-maayakkannaathiyum-1697557458617?med=Copy-Link&lang=ta&ref=U2FsdGVkX18RNIWjbggAWsO0r8dd5lZW9885K9CEOFilRDwVqV1hlp%2FkEqctr2VR

ஞாயிறு, 15 அக்டோபர், 2023

அதீத நம்பிக்கை ✨


என்ன தான் நடக்க போகிறது என்று

பார்ப்பதை தவிர வேறு வழி எனக்கு

எந்த மோசமான நிகழ்வாக 

இருந்தாலும்

அது என்னை நெருங்கும் போது

பவித்திரத்தன்மை அடைந்து விடும்

என்கின்ற 

அதீத நம்பிக்கை மட்டும்

நிழலாக தொடர்கிறது...

#இளையவேணிகிருஷ்ணா.

வெள்ளி, 13 அக்டோபர், 2023

வறண்ட மனம்

 


அங்கே இரு நாட்டிற்கு

இடையே சண்டை

என்கிறார்கள்...

மனிதத்தை தொலைத்து 

அரசியல் பேச முடிகிறது 

அவர்களால்...

மனிதத்தை வைத்துக் கொண்டு 

இங்கே இருந்து

நடக்கும் அவலங்களை

விண்ணில் உலாவிக் கொண்டு 

இருக்கும்

என்றோ செலுத்திய 

செயற்கை கோள் மூலம்

கண்ணீர் மட்டுமே வடிக்க முடிகிறது 

என்னால்...

இங்கே எது தான் அவசியம் என்று 

தெரியாமல்

கருத்து சுதந்திர போர்வையில் 

ஆயிரம் ஆயிரம் அரசியல் பேசி

குளிர் காய்கிறோம்...

அத்தனை வறண்ட மனதை

உடையவர்களாக இங்கே

இந்த பிரபஞ்சத்தில் வலம் வந்து 

எதைத் தான்

சாதிக்க போகிறோம் என்கின்ற 

கேள்வி குறைந்தபட்சம் 

ஒரு மனிதனுக்கு கூடவா எழவில்லை 

என்பதே இங்கே 

எனக்குள் எழும் 

ஆயிரம் ஆயிரம் கேள்வி....

#வறண்டமனம்.

#நாள்:13/10/2023.

நேரம் மதியம் 1:30.

#இசைச்சாரல்வானொலி.

#இளையவேணிகிருஷ்ணா.

ஒரு ஓவியம் தன் வெட்கத்தை உணர்த்தும்?


நிழலுக்கும் வெட்கம் உண்டு என்பதை ஒரு ஓவியத்தை தன் எழுத்தின் மூலம் கண் முன்னே நிறுத்த முடியுமா...இதோ இந்த சுவாரஸ்யமான கதை சொல்கிறது.. #எழுத்தாளர் #பிரேம்குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐 எழுத்து நடையில் ஓவியத்தை உயிர்த்தெழு முடியுமா... ஆச்சரியமாக இருந்தது... வாசியுங்கள் இதோ கீழேயுள்ள லிங்கில் குரல் வடிவில் கதையை கேட்டு பாருங்கள் நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும் நேயர்களே 🙏✨🎻.https://mylangaudio.in/ta/stories/nirvaanathhthhirkum-vethkam-unthu-1697178417536?med=Copy-Link&lang=ta&ref=U2FsdGVkX1%2FzsYPwBwho1bPUqEn2wO5zKHlWdcaURgu0dIlqoexcfBWekgXOplDZ

வியாழன், 12 அக்டோபர், 2023

நிழல் போல தொடர்கிறது...

 


நிழல் போல தொடர்கிறது

நான் விரும்பாவிட்டாலும்

சில நிகழ்வுகள்...

நான் அதன் பெரும் பசிக்கு 

சோளப்பொறியானேன்..

இதை யோசித்துக் கொண்டே 

இருந்த போது 

எதனோடும் பயணிக்காத 

அந்த சில மணித்துளிகள்

என்னை சத்தம் இல்லாமல்

கடந்து சென்றதை தான்

என்னால் 

மீட்டெடுக்க முடியவில்லை...

#இரவுகவிதை.

நாள் 12/10/23.

நேரம் இரவு 10:31.

#இளையவேணிகிருஷ்ணா.

காலம் கரைப் புரண்டு ஓடிக் கொண்டு தான் இருக்கிறது...


காலம்

கரைப் புரண்டு

ஓடிக் கொண்டு தான்

இருக்கிறது

ஒரு காட்டாற்று வெள்ளம் போல...

எப்படியோ நான் தப்பித்து 

கரையேறி விடுகிறேன்...

அதோ அங்கே மிதக்கும் 

அந்த துயர கட்டையை

இறுக்கமாக 

பற்றிக் கொண்டு...

#இரவுகவிதை.

நாள்:12/10/2023.

நேரம் இரவு 10:18.

#இளையவேணிகிருஷ்ணா.

நேசித்த பேனா...

 


நாம் அனைவரும் நிச்சயமாக பேனாவை மிகவும் நேசித்து பயன்படுத்தி இருப்போம்... அந்த நேசித்த பேனா காணாமல் போனால் எப்படி இருக்கும்... நிச்சயமாக மனம் வருந்திய நாட்கள் நிறைய நமக்கு இருக்கும் தானே... அப்படி தொலைத்த பேனா மீண்டும் கைக்கு கிடைத்தால்... சுவாரஸ்யமான கதையை கேட்கலாம் வாருங்கள்...

கீழேயுள்ள லிங்கில்...

https://mylangaudio.in/ta/stories/ithamaarram-1697121636803?med=Copy-Link&lang=ta&ref=U2FsdGVkX1%2BXPxgGDUbtP5aR7z3FposlbqQqkkGaq3bMmkbeJEO8EPQCLHydc3my

புதன், 11 அக்டோபர், 2023

அந்த பட்டாம்பூச்சியின் வண்ண சிதறல்கள்...


எனது அறைக்குள்

நுழைந்த

அந்த பட்டாம்பூச்சி

சிறிது நேரம்

அங்கும் இங்கும்

சுற்றி திரிந்தது..

என்ன நினைத்ததோ திடீரென 

எனது இருக்கையில் அமர்ந்து

தனது சிறகை ஒன்றோடொன்று 

மூடிக் கொண்டது...

சில நிமிடங்கள் தான்

அந்த அமர்வு...

என்ன நினைத்ததோ தெரியவில்லை...

சட்டென்று தனது வண்ண 

சிறகை விரித்து 

அந்த சன்னல் வழியே பறந்து

சென்று விட்டது...

சில மணித்தியாலங்கள் தான் 

என்றாலும்

அது அமர்ந்து சென்ற 

எனது இருக்கையில் 

சில வண்ண துளிகள் 

சிதறிக் கிடந்ததை

பொக்கிஷமாக சேகரித்து 

வைத்தேன்..

இன்று மாலையோ நாளையோ 

அல்லது

இன்னும் சில காலமோ தெரியாது...

நிச்சயமாக 

அது என் அறையை நோக்கி 

வரும் போது அது 

அந்நியமாக உணரக்கூடாது என்றே

அந்த சிதறிய 

வண்ண துளிகளை பத்திரமாக்கி 

வைத்து இருக்கிறேன்...

இங்கே அது ஒன்றே ஆறுதல் 

எனக்கு என்று...

#பட்டாம்பூச்சி.

#இளையவேணிகிருஷ்ணா.

#இசைச்சாரல்வானொலி.

#நாள்:12/10/2023.

#நேரம் காலை 8:52.

ஒரு திருமண பந்தம் எப்படி இருக்க வேண்டும்?

 


ஒரு பொருள் வாங்கினால் காலாவதி பற்றி யோசிக்கலாம்... ஆனால் ஒரு திருமண பந்தத்திற்கு ஏது காலாவதி.. இன்றைய தலைமுறை புரிந்துக் கொள்ள வேண்டிய கதை இது..

கீழேயுள்ள லிங்கில் கதையை கேட்டு தங்களது விமர்சனங்களை வையுங்கள் நேயர்களே 🙏.

https://mylangaudio.in/ta/stories/kaalaavathi-1697040044021?med=Copy-Link&lang=ta&ref=U2FsdGVkX1%2FSimM1aE09yOCxwlaQr%2F35otRuYXWjdxMBKuw5jPJNhwRXvQhgXpwA

ஒரு தெருவோர ஜீவ ராசியின் பசியை யார் அறியக் கூடும்?

 


வணக்கம் நேயர்களே 🙏🎻🙏.

ஒரு வாயில்லாத ஜீவனின் பசியை இங்கே எதையோ நோக்கி ஓடிக் கொண்டே இருக்கும் வறண்ட உணர்வுகளோடு பயணிக்கும் மனிதர்களுக்கு புரிய வாய்ப்பில்லையோ??

கீழேயுள்ள லிங்கில் அந்த ஜீவ ராசியின் பசியை கண் மூடி கேட்டு பாருங்கள் நிச்சயம் அதன் வலி உங்களுக்கு புரியும்...

https://mylangaudio.in/ta/stories/or-aanmaavin-thhethal-1697038872632?med=Copy-Link&lang=ta&ref=U2FsdGVkX19jdj6CTwyO445N5ERD2i2fPDuRsqzW23vM9VhIoA%2FAttwuUycWMoxg

என்னை நானே விடுவித்துக் கொள்ள...

 


எனக்காக படைக்கப்பட்ட

அந்த இலக்கியத்திற்குள்

நான் ஒளிந்துக் கொண்டேன்...

இளைப்பாறுதலின் 

ஒரு தேவையை இங்கே

எனக்கு காலம் உணர்த்துகிறது...

ஆனால் நான் நானாக தான்

 அந்த இலக்கியத்தில் இருக்கிறேனா 

என்கின்ற

சந்தேகம் மட்டும் ஓய்ந்தபாடில்லை...

வரும் விமர்சனத்தில் 

ஆயிரம் ஆயிரம் பிம்பங்களாக 

நான் அவர்களுக்கு 

காட்சி அளிக்கும் போது

என்னை நானே 

விடுவித்துக் கொண்டு பயணிக்க 

பெரும் பிரயத்தனங்கள் 

தேவைப்படுகிறது இங்கே...

#இளையவேணிகிருஷ்ணா.

#இரவுகவிதை 🍁

நாள் 11/10/2023.

நேரம் மாலை 5:20.

#இசைச்சாரல்வானொலி.

செவ்வாய், 10 அக்டோபர், 2023

அந்த அபூர்வ நிகழ்வு...

 


ஒரு பேரமைதி

உங்களை ஆட்கொள்கிறதா...

அதை அப்படியே விட்டு விடுங்கள்...

ஏனெனில் 

அந்த அபூர்வ நிகழ்வு 

எப்போதாவது தான் நிகழ கூடும்...

#இரவுகவிதை.

நாள்:10/10/2023.

நேரம் இரவு 9:50.

#இளையவேணிகிருஷ்ணா.

#கிருஷ்ணாஇணையதள #வானொலி

குப்பம்மாள் அவர்களின் மனநிலை...

 


வணக்கம் நேயர்களே🙏 ஒரு மூதாட்டியின் குறைந்தபட்ச தேவையை இங்கே யார் அறியக் கூடும்? பரபரப்பான இந்த உலகில் கீழேயுள்ள லிங்கில் கேட்டு பாருங்கள் நாம் எதை நோக்கி ஓடுகிறோம் என்று குறைந்தபட்ச வருத்தத்தையாவது நாம் அடைவோம்..

https://mylangaudio.in/ta/stories/kuppammaal-1696946704867?med=Copy-Link&lang=ta&ref=U2FsdGVkX19Aff86rThTnwsz%2Bf5ACqtkA8syq5RJRZwskeHB6Nwxk1I%2FhB%2Fyaojc

திங்கள், 9 அக்டோபர், 2023

ஒரு அதீத காதல் இங்கே புல்லாங்குழல் இசையாகிறது...


ஒரு ஈடு இணையற்ற காதல்

இப்படி தான் இருக்குமோ 

கேட்டு பாருங்கள்...

நீங்களும் அந்த காதலை உணர்வீர்கள்...

கீழேயுள்ள லிங்கில் அந்த காதல் கதையை...

https://mylangaudio.in/ta/stories/kuzhalin-kural-1696857818832?med=Copy-Link&lang=ta&ref=U2FsdGVkX1%2FW1PiJeIz6IRwOPlXz7Djuh62ErajQ3H0UdKkZW3ocI%2FCOU9vRDANf

சனி, 7 அக்டோபர், 2023

ஜென் நிலை ✨


அந்த வெயில் கால கதகதப்பில் தான்

நான் பேரமைதிக் கொள்கிறேன்...

குளிர்கால இளம் வெயிலோ

என் மீது கோபம் கொள்ளும் 

அளவிற்கு...

இங்கே சுடும் நிலா என்று 

சொன்னால் ஏதோ 

காதலிப்பவர்கள் தான் உணர்வார்கள் 

என்று நம்பும் உலகில்

இந்த பேரமைதி தரும் வெயிலின் 

கதகதப்பை மட்டும் ஏன் ஆயிரம் 

கேள்வி கேட்கிறீர்கள்???

#ஜென்நிலை.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 07/10/2023.

நேரம் இரவு 10:20.

தேநீர் விடுதியை அலங்கரிக்கும் உன் ஞாபகம்...

 


இதோ இந்த தேநீர் விடுதியில் 

அந்த மழைக் கால இரவொன்றில் 

ஒரு நீண்ட சிறு மௌனத்திற்கு 

பிறகு தான்

அன்று நீ உதிர்த்த வார்த்தைகள் 

என் வாழ்வின் சுவையை கூட்டியது...

இன்று உன் ஞாபகம் மட்டும்

இந்த தேநீர் விடுதியை

அலங்கரிக்கிறது

இதோ என் மேசையில்

இன்னும் இதமான கதகதப்பில் 

என் மீது பெரும் நேசங் கொண்ட 

தேநீர்

என் நிலையை நினைத்து

கலங்கியபடி...

நான் அதன் மணத்தில்

கொஞ்சம்

விழித்துக் கொள்கிறேன்...

ஏன் இதன் நேசம் கூட

உன் மீது நான் கொண்ட

நேசத்தை விட பல நூறு மடங்கு 

அதிகமாகி

என் நாவினை தீண்டி 

அரவணைத்துக் கொள்கிறது

பெரும் காதலோடு...

நான் விழித்துக் கொள்வதற்கு 

காரணம்

அந்த பெரும் காதலாக கூட

இருக்கலாம்...



#இரவுகவிதை.

நாள் 07/10/2023.

நேரம் இரவு 9:53.

#இசைச்சாரல்வானொலி.

#இளையவேணிகிருஷ்ணா.

இரவு கவிதை 🍁


அத்தனைவித பகலின் பரபரப்பும்

அடங்கி விட்டது...

இதோ இந்த இரவின் நீட்சியில்

நான் கலந்து விட துடிக்கிறேன்..

ஒரு இளைப்பாறுதலுக்காகவா 

என்றால்

நிச்சயமாக இல்லை...

ஒரு ஆழ்ந்த மௌனத்தின் 

மெல்லிசையில்

கரைந்து எனக்குள் நானே

தொலைந்து போக இதை தவிர

எனக்கு வேறு காலம் இல்லை..

என்பதற்காக தான்...

#இரவு கவிதை 🍁

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:07/10/2023.

நேரம் இரவு 9:20.

புதன், 4 அக்டோபர், 2023

Matrix விலக முடிந்தால் அற்புதம்.


 Matrix இதில் இருந்து விலகி விட்டால் நாமும் மிகவும் அற்புதமான வாழ்க்கை வாழ்கிறோம் என்று கெத்தாக இருக்கலாம்...அதை விடுத்து இங்கே நாம் என்னதான் அரசியல் பற்றியோ மற்ற வாழ்வியல் பற்றியோ கூச்சல் போட்டு கொண்டே இருந்தாலும் ஒன்றும் பிரயோஜனம் இல்லை... இது கிட்டத்தட்ட கர்மா போன்றது.. ஆனால் செயற்கையான கர்மா... யோசியுங்கள்... உங்களுக்கும் வாழ்க்கை பிடிபடும்...🎉🙄🤝🥳

#இரவுசிந்தனை.

#இளையவேணிகிருஷ்ணா.

கடன் வாங்கிய சுவாசங்கள்...


கடன் வாங்கிய

சுவாசங்கள்

சலனமின்றி 

விடைப்பெற்று போகிறது...

தேம்பி அழும்

என் நிலைமையை

இங்கே யார் அறியக் கூடும்?

#அந்திநேரகவிதை.

நாள்:04/10/2023.

நேரம் மாலை 5:35.

#இசைசாரல்வானொலி.

#இளையவேணிகிருஷ்ணா.

ஆத்ம விசாரம்...


உலகியலிலேயே மூழ்கி இருந்தால் 

ஆத்மஞானத்தை 

அடைய இயலாது. 

உங்கள் கடமைகளை 

ஒரு கையில் செய்து கொண்டே 

பிறவிபிணிக்கு மருந்தை தேடுங்கள். 

ஏனெனில் வாழ்வு குறுகியது.

#இளையவேணிகிருஷ்ணா.

செவ்வாய், 3 அக்டோபர், 2023

இரவு சிந்தனை ✨


சுகம் சோகம் இந்த இரண்டிற்கும் 

அப்படி ஒன்றும் தூரமில்லை..

இரண்டும் மிகவும் நெருக்கமாக தான் 

உள்ளது...

நாம் தான் துக்கம் வரும் போது 

சுகம் எங்கோ தூரத்தில் இருப்பதாக 

நினைத்து கொள்கிறோம்.😊

#இரவுசிந்தனை.

#இளையவேணிகிருஷ்ணா.

ஆத்ம விசாரம்...


கட்டுகள் இறுகும் போது 

ஒன்று 

சம்சாரம் ஆகிறது;

மற்றொரு வகையில் 

மரணம் ஆகிறது;

இரண்டுக்கும் அப்படி ஒன்றும் 

வேறுபாடு இல்லை.

#ஆத்மவிசாரம்.

#இளையவேணிகிருஷ்ணா.

இந்த பிரபஞ்சத்திற்கான ஆறுதல்...

 


யாருமற்ற தனிமையில்

எனக்கான தேடல்

தொடங்குகிறது...

நான் முழு நிறைவை

அடைவதற்கு

எனக்கு கிடைத்த

தனிமை துளிகளை விட

தனிமை சாகரமே

பேரானந்தத்தை கொடுத்து

அந்த பேருணர்வில் கரைந்து

பேச்சற்ற பொழுதை

கழித்து உவகை கொள்ளும்

இந்த தருணத்தில்

நான் மெய்யுணர்வு 

இல்லாமல் இல்லை என்பதே

இந்த பிரபஞ்சத்திற்காக 

ஆறுதல் என்று கூட

சொல்லலாம்...

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 03/10/2023.

நேரம் 7:00.

ஞாயிறு, 1 அக்டோபர், 2023

பேச்சற்ற சமரசத்தில்...


அந்த நெடும் பகை

நம்மை இணைத்து விடுகிறது...

அந்த ஒரு நொடிப் பொழுதில்

தோன்றிய பேச்சற்ற சமரசத்தில்...

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

#இசைசாரல்வானொலி.

நாள்:01/10/2023.

நேரம் இரவு 9:19.

இரவு கவிதை 🍁


தொட்டு விடும்

தூரத்தில்

நீ இருக்க வேண்டாம்...

அதுதான் 

எனக்கான வரம்!

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:01/10/2023.

நேரம் 8:50.

பெரும் போரின் உக்கிரத்தை தணித்து...

 நீயோ குருட்டு பிடிவாதத்தால் எவரின் தூண்டுதலாலோ விலகி விலகி பயணிக்கிறாய்  என்னிடம் இருந்து... அந்த உக்ரைனை போல... நானோ உன்னை  என் பேரன்பின் ...