ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

ஞாயிறு, 30 ஜூலை, 2023

வாழ்வின் சுவை (3)

 

நீ அமைதியாக

வாசித்துக் கொண்டே இரு

நான் பேரமைதியோடு

நீ வாசிப்பதை கண்மூடி 

சுவாசிக்கிறேன் ...

இங்கே பெரும் இரைச்சலுக்கிடையே 

பயணித்து பயணித்து

அலுத்து விட்டது...

பேசு பேசு என்று

தொல்லை செய்யாத 

நம் இருவருக்கும் உள்ள 

நெருக்கத்தில் 

இந்த பிரபஞ்சத்தில்

கோடானுகோடி மக்கள் தேடும் 

ஆழ்ந்த காதலை

நாம் எளிதாக உணர்வோம்...

பேசுவதில் இல்லை காதல்..

கிருஷ்ணனின் ராச கிரீடையை 

இங்கே எவர் 

புரிந்துக் கொண்டார்கள்?

நீயும் நானும்

இங்கே அந்த ராதையும் கண்ணனும் 

என்பதை

இங்கே யாரும் அறிய போவதில்லை...

பேசாத மௌனத்தின்

நம் பெரும் காதலை

அங்கே பேசி பேசி அனுபவிக்கட்டும்...

இதென்ன புது வித காதல் என்று...

#வாழ்வின்சுவை(3).

30/07/2023.

இரவு 8:18.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சங்க இலக்கியம்//நற்றிணை பாடல் (5)

  நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப, அகல் வாய்ப் பைஞ் சுனைப் பயிர்  கால்யாப்ப, குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர் நறுங் காழ் ஆரம் சுற்றுவன அகை...