அலுவலகத்தில் மதிய உணவு வேளையில் மிகவும் ஆவலாக தனது சாப்பாட்டு டப்பாவை திறந்தவருக்கு ஒரு அதிர்ச்சி.. ஏனெனில் அதில் அவித்த புடலங்காய் பொறியல் மட்டுமே இருந்தது..அதை பார்த்தவுடன் கடும் பசியோடு இருந்தவருக்கு கடும் கோபம்..உடனே வீட்டுக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டவர் நீ சாப்பாடு எடுத்து வைக்க மறந்து விட்டாயா என்றார் மிகவும் கோபமாக..எதிரே மனைவியோ இல்லை இல்லை.. நான் அவித்த புடலங்காய் பொறியல் மட்டும் தான் வைத்தேன் என்றார்.. அதான் ஏன் என்றார் கணவர்..
காலையில் நன்றாக தோசை சாப்பிட்டு விட்டு தானே போனீர்கள்.. அங்கே அப்படி என்ன கடுமையான பணி... இங்கே அரிசிக்கு வரி மேல் வரி போட்டு இன்று முதல் அமலுக்கு வந்ததை மறந்து விட்டீர்களா.. நாளை முதல் பச்சை காய்கறிகள் தான் உங்களுக்கு மதிய உணவாக.. சும்மா என்னிடம் சண்டை போடாமல் அதை மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு விட்டு வரவும்.. விலைவாசி ஏற்றத்தில் அதை அப்படியே எடுத்து வந்தால் அதையே குளிர் சாதன பெட்டியில் வைத்து நாளையும் அதையே கொடுத்து அனுப்புவேன்.. என்றார்..
கணவருக்கு அந்த அதிர்ச்சியை ஜீரணம் செய்வதற்குள் உடன் பணிபுரிபவர் வந்து சார் கேள்விப்பட்டீர்களா... மின் கட்டண உயர்வு செய்தி என்றார்..
கணவர் அலைபேசி அதற்குள் அழைத்தது..மனைவி தான்.. அலுவலகத்தில் இருந்து சீக்கிரம் வீட்டுக்கு வந்து விடுங்கள்.. மின் கட்டண உயர்ந்து விட்டது.. சூரியன் மறைவதற்குள் சாப்பிட்டு விட்டு கொசுக்கடியை எல்லாம் பொருட்படுத்தாமல் மொட்டை மாடியில் போய் படுத்துக் கொள்ளலாம்..மழை வரும் போது கீழே வந்து விடலாம் என்றாள்..
கணவருக்கு தலை சுற்றியது...
#நாட்டுநடப்பு
#நையாண்டிகதை
#இளையவேணிகிருஷ்ணா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக