ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

செவ்வாய், 29 அக்டோபர், 2019

பகவத் கீதை:முதல் அத்தியாயம்:31வது ஸ்லோகம்.

Listen to the most recent episode of my podcast: பகவத் கீதை https://anchor.fm/elaiyaveni-k/episodes/ep-e8cd20

மௌனமே வார்த்தையாக

நம் இருவருக்கும் இடையே
தேகரீதியாக
இடைவெளி குறைந்து விட்டபோதிலும்
நமது நெஞ்சத்தில் வார்த்தைகளை
தேடியலைந்து அலைந்து
மௌனமே வார்த்தையாகி
அலங்கரிக்கிறது!
நமக்கு இடையே இருக்கும்
மலரோ நம்மை நமட்டு சிரிப்போடு
வேடிக்கை பார்த்து பொழுதை
போக்கி ஆனந்தம் அடைகிறது!

எண்ணங்களின் வலிமை

என் எண்ணகுதிரைகள்
தறிக்கெட்டு பறக்கிறது
ஓர் அளவில்லாமல்!
நானும் லகானை இழுத்து
இழுத்து பிடிக்கிறேன்!
லகான் தெறித்து வீழ்கிறது!
அது விழுந்த வேகத்தில்
உடைகிறது சுக்குநூறாக!
திகைத்து நிற்கிறேன்
செய்வதறியாமல் நான்!
தறிக்கெட்டு ஓடும்
எண்ணத்திற்கே இவ்வளவு
வலிமை என்றால்
ஒருமுகப்படுத்தப்பட்ட எண்ணத்திற்கு
எவ்வளவோ என்று யோசித்து
வியக்கிறேன் நான் இங்கே!

  • எண்ணங்களை நினைத்து!

திங்கள், 21 அக்டோபர், 2019

அன்பில் கரைகிறேன்...

நீ ஏதேதோ பேசுகிறாய்
நான் கவனிக்கிறேனா இல்லையா
என்று கூட நீ கவனிக்காமல்!
நீ உன் பேச்சில் கவனமாக இருக்க!
நானோ உன் முகபொலிவில் மறந்து
ரசிக்கிறேன் உன் உதடு
அசைவை மட்டும்!
அலைபாயும் மனதில் ஆயிரம்
சுமைகளை சுமந்து கொண்டு
உன் அன்பில் கரைகிறேன்
ஓர் சர்க்கரையைபோல!

பயணம்

வாழ்க்கை பயணம்
முடிந்து ஓர் வெறுமை
என்னை சூழ்ந்துக்கொள்ள
இல்வாழ்க்கை பயணத்தை
படிபடியாக குறைத்து
பெற்ற பிள்ளைகளிடம்
ஓர் புன்சிரிப்போடு விடைபெற்று
பயணிக்கிறேன் ஓர் பயணம்
இந்த பயணத்தில் எவரையும்
இணைத்து கொள்ளாமல்!
இணைத்து கொண்டு பயணித்தால்
அது என்னை சம்சாரசாகரத்தில்
தள்ளி வேடிக்கை பார்த்து
கைகொட்டி சிரிக்கும் என்பதால்
தனியேதன்னந்தனியே ஆனந்தமான
பயணத்தை பயணிக்கிறேன்
ஆத்மஞானத்தை தேடி!
அடைந்து விட துடிக்கும் ஆத்மஞானத்தை அறிவிப்பவர்
எவரும் இல்லாததால்
நானே அறியவேண்டி
ஓர் நீண்ட பயணம்
பயணிக்கிறேன்!

நீ சிந்தும் சிரிப்பில்

பனிசாரலில் பளிங்கு சிலையாக
நீ அருகில் இருக்க!
உன் இதழோரம் சிந்தும்
சிரிப்பில் கரைவது
நான் மட்டும் இல்லையடி!
இந்த கடுமையான பாறை போன்ற
பனியும் தான் உருகுகிறது
நீ சிந்தும் சிரிப்பின் வெப்பத்தில்!

சனி, 19 அக்டோபர், 2019

நெஞ்சம் தேடுதே!

நீயோ விடைபெற்று போகவே
விரைவாக எண்ணுகிறாய்!
நானோ உன்னை விட
மனம் இல்லாமல் உன்கைகளை
இறுக பிடித்து மன்றாடுகிறேன்!
நீயோ எனது கைகளை உதறிதள்ளவும்
மனம் இல்லாமல்
எனது கைகளில்
சிறை இருக்கவும் மனம் இல்லாமல்
சிக்கி தவிப்பதை
நான் உன்னை பார்க்காவிட்டாலும்
கண்ணீரோடு உணர்கிறேன்!
இப்போதும் ஒன்றும்
கெட்டுப்போகவில்லை!
உனது அகங்காரத்தை மறந்து
அடங்கிக்கொள்ளடி
என் கையணைப்பில் வந்து
என் நெஞ்சம்
தேடுகிறதடி உனது மஞ்சத்தை!

நதியிடம் ஓர் கோரிக்கை

சலசலத்து ஓடும் நதியே
சகியின் நிலையை
கொஞ்சம் கேட்டு விட்டு
செல்லக்கூடாதா?
உனது ஓயாத பயணத்தை
கொஞ்சம் நிறுத்தி
என் கதையை கேட்டு
கொஞ்சம் தேற்றி ஆறுதல்
சொல்லி விட்டு செல்!
நீ போகும் வழிநெடுகே
என்னவர் எங்காவது கண்ணில்
உனக்கு படக்கூடும்!
அப்போது வலுக்கட்டாயமாக
உனது கைகளால் பிடித்து இழுத்து
அக்கரையில் சேர்த்து விடு!
அதுபோதும் எனக்கு!
நான் வந்து பார்த்து கேள்விகள்
கேட்டு கண்ணீரோடு
அந்த மனிதரிடம் மன்றாடிக்கொள்கிறேன்!
நான் கேட்கும் கேள்வியின் வீரியம்
தாளாமல் மீண்டும் உன்னை
நாடக்கூடும்!
அப்போதும் நீதான் காப்பாற்ற வேண்டும்!
அவருக்கு உன்னிலும் நீந்தி
கரையேற தெரியாது!
என்னையும் சேர்த்து
சம்சார சாகரத்தில் நீந்தி
கரையேற தெரியாது!

பட்டாம்பூச்சியாய் உன் நினைவலைகள்

அந்த இளமைக்கால நினைவலைகள்
என்னுள் பட்டாம்பூச்சியாய்
சிறகடித்து பறக்க!
நானோ உன்னோடு அன்று
பட்டம் விட்டு கடற்கரையில்
விளையாடிய அந்த நாட்களை
வேகமாக நினைவுக்கூற
வரும் போது நீயோ
கடந்து செல்கிறாய் என்னை
உன் மனதில் இருந்த என்னை
தூக்கி எறிந்து விட்டு வேகமாக!

வெள்ளி, 18 அக்டோபர், 2019

உன்னை மட்டும் சுற்றுகிறேன்


இந்த பூமி எந்தவித
எதிர்பார்ப்பும் இல்லாமல்
சுழல்கிறது!
நானும்தான் உன்னை
எந்தவித எதிர்பார்ப்பும்
இல்லாமல் சுழல்கிறேன்!
பூமியை எவரும் நிராகரிக்க
முயலவில்லை!
நீயோ உன்னை மட்டுமே
சுற்றி வரும் என்னை நிராகரிக்க
நினைப்பது
எந்தவிதத்தில் நியாயம்?

தேடல்

உனது வருகைக்காக
இங்கே நான்
கால் மேல் கால் போட்டு
காத்திருக்க நீயோ
கால்போனபோக்கில்
சென்று விட்டாய்
எனது நிலையை
உணராமல்!
கண்ணீர் என் இமைகளை
மறைக்க உன்னை மட்டும்
தேடி அலைகிறது
எனது கண்பாவைகள்!

செவ்வாய், 15 அக்டோபர், 2019

பெரும் போரின் உக்கிரத்தை தணித்து...

 நீயோ குருட்டு பிடிவாதத்தால் எவரின் தூண்டுதலாலோ விலகி விலகி பயணிக்கிறாய்  என்னிடம் இருந்து... அந்த உக்ரைனை போல... நானோ உன்னை  என் பேரன்பின் ...