ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

சனி, 29 ஜூலை, 2023

வெற்று தேநீர் கோப்பை


எனது வாழ்வின் பயணத்தை

எப்போதும் 

வெற்று கோப்பையோடே தான்

தினமும் தொடங்குகிறேன்...

இடைப்பட்ட காலத்தில்

தேநீர் நிரப்பி நிரப்பி 

ஆத்மார்த்தமாக

பருகி விட்டு உறங்க செல்லும் போது

வெற்று கோப்பையை விட்டு விட்டு

நிம்மதியாக உறங்குகிறேன்...

இந்த கோப்பை எப்போதும்

என்னை விட்டு நீங்காமல்

காதலோடு பயணிக்கிறது...

நானும் அந்த தேநீர் கோப்பையை

காதலிப்பதை நிறுத்தி விடாது

பயணிக்கிறேன்..✨

காலை:10:16

 30/07/2023.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சங்க இலக்கியம்//நற்றிணை பாடல் (5)

  நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப, அகல் வாய்ப் பைஞ் சுனைப் பயிர்  கால்யாப்ப, குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர் நறுங் காழ் ஆரம் சுற்றுவன அகை...