ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

செவ்வாய், 4 ஜூலை, 2023

அந்த தவிப்பின் சாயல்...

 


அந்த பொருளற்ற தவிப்பை

தவிர்த்து விட்டால்

தாங்கொணா துயரம் எனும்

நெடுங்கடலை நீந்தி 

கடந்து விடுவேன்

என்றேன் காலத்திடம்!

காலமோ தவிப்புகளை 

 மனமெனும் கடலில் நீ

தாலாட்டி அழகு பார்க்கும் வரை 

அது உன்னை விட்டு 

நீங்காது என்றது! 

நானும் அது சொன்னதை 

ஏற்றுக் கொண்டு 

அந்த தவிப்புகள் கதறி அழ அழ

என் மனக்கடலில் இருந்து 

வெளியேற்றினேன்!

கொஞ்ச நேரம் அந்த தவிப்பின்

சாயல் கறையாக என் மனவெளியில்!

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மர்ம வீடு பாகம் (1)

அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...