ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வெள்ளி, 28 ஜூலை, 2023

நான் இன்னும் வாழ்ந்துக் கொண்டு தான் இருக்கிறேன்..


 நான் இன்னும் 

வாழ்ந்துக் கொண்டு தான்

இருக்கிறேன்!

வெறும் சுவாசம் மட்டும் நான் 

வாழ்வதாக

அறிவித்துக் கொண்டே இருக்கிறது!

பெரும் பிரயத்தனத்திற்கு பிறகு

எந்தவித உணர்வுகளையும் 

வெளிக் காட்ட

தெரியாமல் வாழ கற்றுக் கொண்டது

எனக்கு பெரும் உதவியாக 

போய் விட்டது!

நம்புங்கள் நான் இன்னும்

 வாழ்ந்துக் கொண்டு தான் 

இருக்கிறேன்..

அத்தனை அவலங்களையும் 

என் மனதிற்கு அறிவிக்க தோன்றாமல்...

நான் இன்னும் 

வாழ்ந்துக் கொண்டு தான் இருக்கிறேன்...

#இளையவேணிகிருஷ்ணா.

10:20இரவு..

28/07/2023.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மர்ம வீடு பாகம் (1)

அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...