ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வியாழன், 27 ஜூலை, 2023

எனக்கான போதையான தருணம்

 


சமுத்திரத்தின் சோர்வில்லாமல் 

நீந்தும் அலையின் ஒலியில்...

பறவைகள் சிறகடித்து பறக்கும் 

அந்த சிறகின் அசைவின் ஒலியில்...

இந்த பிரபஞ்சத்தின் 

ஆழ்ந்த அமைதியின் 

சூழலில் எல்லாம் 

எனக்கான போதையான தருணத்தை 

உணர்கிறேன்...

இங்கே நான் தேடும் 

வாழ்வின் சுவாரஸ்யமான 

தருணங்கள் எல்லாம்

இங்கே பரந்து விரிந்து

என்னை ஆராவாரித்து 

அணைத்துக் கொள்ள

துடிக்கிறது...

நானோ சம்சார தழுவலில்

மூச்சு திணறி கிடக்கிறேன்...

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மர்ம வீடு பாகம் (1)

அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...