ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வியாழன், 26 டிசம்பர், 2019

ஞாபகம் எனும் தணல்

என் அன்பே!
நீ சென்று வெகுநாட்கள்
ஆகிறது என்னை விட்டு!
நானோ உன் ஞாபகம் எனும்
தணலில் வெந்து அழிகிறேன்
கொஞ்சம் கொஞ்சமாக!
இன்னும் கொஞ்சமே
இருக்கும் தீக்கு இரையாகாத
உயிரையாவது பார்க்க வருவாயா
இல்லை முழுவதும் நான்
எரிந்து முடித்தவுடன்
அந்த தணலின் வெம்மையை
பூசிக்கொண்டு மகிழ வருவாயா
புரியாமல் தவிக்கும் இங்கே
உனது ஆருயிர்!

காதலியின் குடை

எங்கோ இருந்து
வந்த புயல் வந்து
என்னை நிலைகுலைய
வைத்துவிட
நீ மழைக்காக கொடுத்தகுடையை
என்கையில் இருந்து பிடுங்கி
புயல் காற்று எங்கோ
கொண்டு போய் போட்டு விட!
நானோ என் உயிரை பிடுங்கி
எறிந்தது போல
சாலையில் நினைவற்று நிற்கிறேன்
ஒன்றும் செய்வதறியாமல்!

கிரகண காதல்

கிரகணத்தை போல
சிலமணிநேரங்களில்
நமது காதல் முடிவடையும்
என்று முன்பே நான்
கணித்திருந்தால்
காலம் முழுவதும்
இருளில் தள்ள இருக்கும்
காதலை கடந்து
சென்று இருப்பேன்
வெகுஇயல்பாக!

சித்த நிலை யாதென்று புரிகின்ற வேளையில்...

சித்த நிலை யாதென்று  புரிகின்ற வேளையில்  சுவையுள்ள பதார்த்ததின் வாசம்  நாசியை வசீகரிக்கிறது... சுத்தமான ஆத்மாவின்  தீராத தாகத்தை கண்டுக்கொள்...