ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

திங்கள், 3 ஜூலை, 2023

காலத்தின் நேசத்தின் நேசத்தில்


 என் தேடல் நீ

என் உயிர் நீ

என் வாழ்வின் சுவை நீ

நீ மட்டும் போதும்

இங்கே நான் உற்சாகமாக

என் வாழ்வின் பயணத்தை

இனிமையாக்க என்று

காதல் மொழியில் பிதற்ற

எனக்கு தோன்றவில்லை!

எனக்கு அந்த தேவையும் இல்லை!

எந்த அவஸ்தையும் இல்லாமல்

என்னோடு விடாப்பிடியாக

ஒட்டிக் கொண்டு பயணிக்கும்

இந்த காலத்தின் நேசத்தை தவிர

வேறு எது உண்மையான நேசம்

இந்த பிரபஞ்சத்தில்!

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாலையோர புழுதியில் நனைந்த ஓவியம்...

 அந்த பிரமாண்டமான வீட்டில்  வாழ்ந்து கொண்டு  இருப்பவர் சில நாட்களில்  உற்சாகம் இழந்து  அவர் தாம் பார்த்து பார்த்து கட்டிய  அந்த வீட்டில்  உள...