ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

செவ்வாய், 28 ஜனவரி, 2025

ஒரு மீனவனின் இறப்பு கண்டுக் கொள்ளப்பட...


தேர்தல் நெருங்குகிறது!

ஒரு மீனவனின் இறப்பு 

கண்டுக் கொள்ளப்பட 

இங்கே ஒரு தேர்தல் அவசியமாகிறது!

அங்கே எத்தனையோ மீனவனின் 

உயிர் கதறல் 

மண்ணுக்குள் புதையுண்டு 

அழுகி கிடக்கும் போது 

இங்கே ஒரு மீனவனின் 

இறப்பு பற்றிய அரசாங்கத்தின் 

கண்டன அறிக்கை 

அவர்கள் கதறலுக்கு

போதுமானதாக இருக்கிறதா என்று 

பல கேள்விகள் 

அந்த சமுத்திர நண்பனுக்கு 

எழுந்த போதும் 

அந்த அலை🌊 எனும் 

சிறு நட்பு கூட்டம் ஓயாமல் 

தமது கண்டனங்களை பதிவு 

செய்துக் கொண்டே வருவதை 

இங்கே அறிவிலிகளின் 

யானை போன்ற 

பெரும் காதுகளில் ஒலித்திருக்க 

நியாயமில்லை தானே 🔥😏.

#ஒருமீனவனுக்கானநீதி.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 28/01/25/செவ்வாய் கிழமை.

இரவின் நிழலில் எழுதியது...

திருமண பந்தம் பற்றிய புரிதல் ஓஷோவின் பார்வையில்

 


வணக்கம் நேயர்களே 🙏.

திருமண பந்தம் பற்றிய புரிதல் நம்மில் பல பேருக்கு இருக்கிறதா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை என்றே சொல்ல வேண்டும்.. அதுவும் இந்த கால தலைமுறைக்கு அது பற்றிய புரிதலுக்காக ஓஷோவின் பார்வையில் என்ற தலைப்பில் நமது சேனலில் பதிவேற்றம் செய்து உள்ளேன்... கீழேயுள்ள லிங்கில் கேட்டு பயனடையுங்கள் நேயர்களே 🎻 🙏. நன்றி 🙏.

https://youtu.be/eaDoSOhIZ3k?si=UtaqDvD7tHeblmvA


ஞாயிறு, 26 ஜனவரி, 2025

அந்த பூனைகளின் சுவாரஸ்யமான வேடிக்கை...


அந்த நெருக்கடி நிறைந்த சாலையில் 

அந்தி மங்கும் அந்த இரவின் 

தொடக்கத்தில் வேலைக்கு சென்று 

திரும்பி வந்துக் கொண்டு 

இருக்கிறார்கள் அந்த நகரவாசிகள் 

அந்த உயிர் காக்கும் கவசத்தினால் 

எவரின் முகமும் எவருக்கும் 

தெரியாதபடி ஒருவரையொருவர் 

ஏதோ வேற்று கிரக வாசிகள் போல 

ஜட பார்வை பார்த்துக்கொண்டு 

சிகப்பு சமிக்ஞைக்காக

ஏதோவொரு பெரும் எரிச்சலோடு 

காத்திருக்கும் வேளையில் தான் 

அந்த அடுக்குமாடி குடியிருப்பு 

பகுதியின் மேற்பரப்பில் இருந்து 

கொண்டு அங்கே வசிக்கும் 

பூனைக் கூட்டங்கள் 

அந்த நகரவாசிகளின் கதைகளை 

பேசி பேசி நகைத்துக் கொண்டு 

இருக்கிறது...

இந்த நகரவாசிகள் 

தேடுவது யாது என்று ஒரு பூனையும் 

நமக்கு இருக்கும் வயிற்றை போல 

பல மடங்கு பெரும் பானை வயிறோ 

அவர்களுக்கு என்று இன்னொரு 

பூனையும்...

இல்லை இல்லை அவர்கள் 

வேறு ஒரு அற்புதமான 

கிரகத்தை சிருஷ்டித்து 

அதில் நம்மை குடியமர்த்த 

போவதற்காக இந்த ஓட்டம் 

ஓடுகிறார்கள் என்று 

அங்கிருந்த மற்ற பூனையும் 

சுவாரஸ்யமாக பேசிக் கொண்டு 

இருந்த போது 

அங்கே திடீரென வந்த 

வாழ்வின் எல்லையின் இறுதியில் 

இருந்த அந்த குடியிருப்புவாசி 

அந்த பூனைகளின் 

உரையாடலை கேட்டு 

கொஞ்சம் ஆச்சரியமாக கீழே 

எட்டி பார்த்தார் ...

அந்த பூனைகளின் உரையாடல் தான் 

எவ்வளவு பொருத்தமானதாக 

உள்ளது என்று தனக்குள் 

பேசிக் கொண்டு 

அந்த சாலையின் 

பெரும் கூட்டத்திற்கிடையில்

தனது கண்களை இடுக்கி 

தனது மகனின் தலையை தேடுகிறார் 

இன்னும் வீட்டிற்கு வரவில்லையே 

என்ற பரிவோடு...

#இளைய வேணி கிருஷ்ணா 

நாள் 27/01/25/திங்கட்கிழமை.

அதிகாலைப் பொழுதில்..



சனி, 25 ஜனவரி, 2025

நான் இந்த பிரபஞ்சத்தின் ஓரத்தில் இளைப்பாறி அமர்ந்து இருக்கிறேன்...

 


பயணிகள் தனது பேருந்து 

வரும் வரை காத்திருக்கும் 

அந்த பயணியர் இருக்கையில் 

யாரும் இல்லாத அந்த நேரத்தில் 

சிறிது இளைப்பாறும் அந்த மரத்தின் 

ஒரு இலையை போல...

நான் இந்த பிரபஞ்சத்தின் 

ஒரு ஓரத்தில் 

இளைப்பாறி அமர்ந்து இருக்கிறேன்...

எனை அழைக்க உரிமையுள்ள 

கால தேவனோ இந்த பிரபஞ்சத்தின் 

எந்த திசையில் எனை தேடி 

அலைகிறாரோ 

நான் அறியேன்...

அவர் வரும் வரை நான் இங்கே 

போவோர் வருவோரை 

ஒரு புன்னகை சிந்தி வேடிக்கை 

பார்த்து களிக்கிறேன் ...

என் புன்னகையில் 

பரவசமடைந்த சிலரோ 

சில இனிப்புகளை திணித்து 

செல்கின்றனர்...

நானோ அதை அவசர கதியில் 

தின்று தீர்க்கிறேன்...

அந்த கால தேவன் 

வந்து கண்டிக்கும் முன்னே...

இங்கே நானும் அந்த கால தேவனின் 

செல்ல பிள்ளை தானே.

#இரவு கவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 25/01/25/சனிக்கிழமை.

இளம் இரவு வேளையில்...



வெள்ளி, 24 ஜனவரி, 2025

அந்த கண்ணீருக்கு தெரியாது...


அந்த கண்ணீருக்கு தெரியாது...

இவள் அந்த நேரத்தின் 

கடினத்தை கடப்பது என்பது 

ஒரு யுகத்தின் வலியை போல என்று! 

என்றாலும் எனக்கு தற்போதைய 

ஆறுதலாக அது மட்டுமே 

துணையாக 

நான் கேட்காமலேயே 

என் கன்னத்தில் 

ஆழ்ந்த நீண்ட முத்தமிட்டுக்கொண்டே 

என் கவலைக்கு 

ஒரு விடை கொடுத்து பிரிக்க 

முடியாதா என்ற யோசனையோடு 

பேரன்பு கொண்டு 

எனை நனைத்து 

அதை பெரும் நதியாக்க

முயற்சி செய்து அதில் 

என் கவலையை கரைத்து விட 

பெரும் பிரயத்தனங்களை 

செய்து கொண்டு இருக்கிறது.../

நானோ அதன் 

பேரன்பில் அடைக்கலம் அடைந்து 

பெரும் ஆறுதலோடு 

உறங்கி விட்டேன்...

இதோ அந்த பேரன்பு கொண்ட 

கண்ணீரும் என் கண்களுக்குள் 

மறைந்து பெரும் காதலோடு 

என்னுள் கலந்து சங்கமிப்பதை 

அந்த பிரபஞ்சமும் பெரும் மூச்சோடு 

பார்த்து விட்டு மெல்ல நகர்கிறது...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 24/01/25/வெள்ளிக்கிழமை.

வியாழன், 23 ஜனவரி, 2025

இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சி 🎻

 


வணக்கம் நேயர்களே 🙏.

தற்போது இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சி கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் நேயர்களே 🎻🙏🎉.

இது மனதை மயக்கும் பாடல்களோடு படைப்பாளிகளின் படைப்புகள் கேட்டு மகிழலாம் 🎉🎻✨.

கீழேயுள்ள லிங்கில் நிகழ்ச்சி கேட்டு மகிழுங்கள் நேயர்களே 🎻.

நேரம்:-இந்திய நேரம் இரவு 🌃 9:00-10:00.

https://zeno.fm/radio/krishna-fma76ufetpuy8uv/

செவ்வாய், 21 ஜனவரி, 2025

அந்த பிணந்திண்ணி கழுகின் பசி...


அந்த பிணந்திண்ணி கழுகு 

பசியாற எவ்வளவு தூரம்

பயணித்தும் பயனில்லை அன்று...

அன்று அதன் விதி அதுதானா என்று 

சோர்ந்து அந்த மரக்கிளையில் 

அமர்ந்து சூரியன் அஸ்தமிப்பதை 

கவலையாக பார்த்து சிறகை ஒடுக்கி 

வெறுமனே வேடிக்கை 

பார்த்த வேளையில் தான் 

என் அகங்காரத்திற்கு 

உயிர் கொடுத்து உருவமாக்கி

அதற்கு உணவாக்கி கொஞ்சம் 

நகர்ந்து அந்த கழுகை 

கண்காணித்தேன்...

ஆவலாக பறந்து வந்து 

அதை ஆக்ரோஷமாக தின்று 

தீர்க்கிற வேளையில் காலம் 

என்னிடம் ரகசியமாக கிசுகிசுத்தது...

ஒரு பிணந்திண்ணி கழுகின் 

ஒரு யுகத்தின் பசியை ஒரு நொடியில் 

தீர்த்து விட்டாயே 

நீ மஹா காலனா என்று ஆச்சரியமாக 

கேட்ட வேளையில் 

அந்த 🦅 பிணந்திண்ணி கழுகு 

உண்ட களைப்பில் 

ஆழ்ந்த நித்திரையில் 

அமைதிக் கொள்வதை

பார்த்து நானும் ஒரு யுகத்தின் 

பேரமைதியை பெற்றுக் கொண்டேன் 

இந்த பிரபஞ்சத்திடமிருந்து... 

இதை பார்த்த காலமும் 

ஆழ்ந்த அமைதியில் எங்களை விட்டு 

நகர்வதை அந்த சூரிய அஸ்தமனமும் 

வேடிக்கை பார்த்து 

ஏதோவொரு மன திருப்தியில் 

அந்த மலைக்கு பின்னால் 

ஓய்வெடுக்க செல்கிறது...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 21/01/25/செவ்வாய் கிழமை.



திங்கள், 20 ஜனவரி, 2025

யாரும் யாரையும் கண்டுக் கொள்ள நேரம் இல்லாத தருணத்தில்...

 


யாரும் யாரையும் 

கண்டுக் கொள்ள நேரம் இல்லாத 

தருணத்தில் தான் 

எனை அந்த தென்றலும் 

நிலவின் கிரணமும் தீண்டியது...

நெடுநாட்களாக சந்தித்து கொள்ள 

நேரம் இல்லாத 

மனிதர்கள் வரிசையில் 

அப்படி ஒன்றும் நாங்கள் இல்லை 

என்றாலும் 

நாங்கள் அனுதினமும் காதலோடு 

கசிந்துருகி சிறிது நேரம் 

அணைத்துக் கொண்டு தான் 

அத்தனை கதைகளையும் 

பேசுவோம்...

நாங்கள் எப்போது வருவோம் என்று 

இந்த இரவும் இந்த நேரத்தை 

தவம் போல யாசித்து காத்திருப்பதை 

அங்கே இருந்த மரங்களும் 

அந்த மரத்தின் கிளையின் 

கூடுகளில் 

வாழ்ந்த சில பறவைகளும் 

ஆச்சரியமாக தலை நிமிர்ந்து 

சிறிது நேரம் கூர்ந்து பார்த்து விட்டு

கூடுகளில் புதைந்து உறங்கி விடும்...

நாங்களோ இது எது பற்றியும் 

அறியாமல் பேச்சின் சுவையில் 

அமிழ்ந்து இந்த பிரபஞ்சத்தின் 

வெட்டவெளி மடியில் சுகித்து விட்டு 

அப்படியே உறங்கி விட்டு 

அதிகாலையில் நான் மட்டும் எழுந்து 

ஓடுகிறேன் 

அந்த நெடுஞ்சாலையில்...

என் காலடி சத்தத்தில் 

அங்கே இரவின் 

நிழலில் இளைப்பாறி 

கூடுகளில் முடங்கிய பறவைகளும் 

சிலிர்த்தெழுந்து வானத்தின் மீது 

பெரும் காதல் கொண்டு பறக்கிறது..

இது எதையும் உணராமல் அங்கே 

சில பல மனிதர்கள் 

கிசுகிசுக்கிறார்கள் எனை பற்றி 

பலவாறு...

இது எப்போதும் நடப்பது தான் என்று 

அலட்டிக் கொள்ளாமல் காலம் 

என்னோடு புது உற்சாகத்துடன் 

பயணித்து அந்த விடியலுக்கு 

ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள் 

கற்பித்து ஓடுகிறது தன் வழியில்

நானும் என் வழியில் பயணிக்கிறேன் 

எந்தவித சலனமும் இன்றி...

அந்த சில பல மனிதர்களும் 

பயணிக்கிறார்கள் தனது 

கிசுகிசு சுபாவம் மாறாமலேயே...

இப்படி தான் இந்த பிரபஞ்சம் 

சத்தம் இல்லாமல் இயங்குகிறது 

என்று அங்கே ஒரு ஞானி 

எங்கள் அனைவரை பற்றியும் பேசி 

ஞான உரை நிகழ்த்திக் கொண்டு 

திருப்தி அடைகிறார்..

இதை எல்லாம் கவனித்து விட்டு 

இந்த பிரபஞ்சம் சிறிதும் சலனம் 

இல்லாத நதியாக சத்தம் இல்லாமல் 

பயணிக்கிறது 

பல நீங்காத வடுவோடு...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 20/01/25/திங்கட்கிழமை.





ஞாயிறு, 19 ஜனவரி, 2025

சில மனிதர்களின் வேடிக்கை நிகழ்வுகளும் அந்த ஒற்றை நொடியும்...


எப்படி பார்த்தாலும் 

அவ்வளவு தான் வாழ்க்கை என்று

அந்த ஒற்றை நொடியில் 

புரிந்துக் கொண்டு 

நின்று நிதானமாக 

ரசிக்க தொடங்கியது

அங்கே நடந்துக் கொண்டு இருக்கும் 

சில மனிதர்களின் வேடிக்கை 

நிகழ்வுகளை எனது கால்கள்...

நான் நின்று கொண்டு இருக்கும் 

இடத்தில் திடீரென 

ஒரு அபூர்வ பூவின் 

வாசனையை உணர்ந்த 

தருணத்தில் தான் என்னை 

அந்த வேடிக்கை மனிதர்கள் 

கவனிக்க ஆரம்பித்தார்கள்...

நானோ அவர்கள் கைகளை குலுக்கி 

உற்சாகமாக விடைபெற்று 

அந்த நெடுஞ்சாலையில் 

நடக்கும் போது மீண்டும் 

உயிர் பெற்று 

என்னோடு பயணிக்கிறது 

நான் சலிப்படைந்த

அந்த ஒற்றை நொடி வாழ்க்கை!

இங்கே எப்போதும் எனக்காக 

காத்திருக்கும் 

அந்த ஒற்றை நொடிப் பொழுதின் 

பெரும் காதலுக்கேனும்

நான் இந்த காலத்தின் 

நெடுஞ்சாலையில் 

பயணித்தாக வேண்டும் என்ற 

கட்டாயத்தில் இருக்கிறேன்...

அந்த ஒற்றை நொடியோ 

பெரும் காதலோடு என்னோடு 

அபூர்வ சுவையோடு 

என்னில் கலந்து பயணிக்கிறது...

மீண்டும் அந்த வேடிக்கை மனிதர்கள் 

எங்கேனும் தென்பட்டால் 

நான் அவர்களிடம் பகிர 

என்னிடம் ஒரு பெரும் காதல் கதை 

உள்ளது...

அது வேறு யாரும் அல்ல...

நானும் என்னை நேசிக்கும் 

அந்த ஒற்றை நொடியும் தான்...❤️.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 19/01/25/ஞாயிற்றுக்கிழமை.



 

புதன், 15 ஜனவரி, 2025

அந்த ரசிக்கப்படாத இரவுகள் எல்லாம் உயிர் வற்றிய நதி போல...


அந்த ரசிக்கப்படாத எத்தனையோ 

இரவுகள் எல்லாம் 

உயிர் வற்றிய நதி போல 

நிலவின் பிம்பத்தில் எனை ஏக்க 

பெரும் பார்வை 

பார்த்த நினைவுகள் இன்றும் என் 

நினைவில் குடிக் கொண்டு 

அலைகழிக்கிறது 

இதோ இப்போது மேகத்தில் மறைந்து 

கொண்ட அந்த நிலவோ 

அந்த இரவை மறந்து விடு 

இங்கே இருளின் நதியின் 

புலம்பலுக்கு 

நீ ஏன் ஒரு ஆறுதல் தோளாக 

இருக்கக் கூடாது 

என்று கேட்டது...

நானும் சிறு முறுவலோடு 

நிலவின் பேச்சுக்கு 

எனது செவியை கொடுத்து 

அந்த இருள் தோய்ந்த நதிக்கு 

ஆறுதலாக பேசுகிறேன்...

இரவோ என்னை தழுவிக் கொண்டு 

பேச்சற்று ஆனந்த கண்ணீரில் 

தோய்கிறது...

இங்கே எனக்கான ஆறுதலும் 

அது தான் போலும் என்று 

மனதை தேற்றி பயணிக்கிறேன்..

அந்த நிலவோ பெரும் நிம்மதியோடு

விடை பெறுகிறது 

என்னிடம் இருந்து...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 16/01/25/வியாழக்கிழமை.



 

அவர்களை வெறுமனே வேடிக்கை பார்த்து நகர்கிறேன்...


ஒன்றும் இல்லாத ஆயிரம் ஆயிரம் 

விசயங்களுக்கு 

ஆயிரம் ஆயிரம் விமர்சனங்கள் 

அங்கே அவர்களால் 

வைக்கப்படுகிறது...

இங்கே அதை பார்த்துக் கொண்டே 

நகைப்போடு மெல்ல 

நகர்கிறது காலம்...

நானும் கூட காலத்தின் 

மெல்லிய விரல்களை 

பிடித்துக் கொண்டே 

அவர்களை வெறுமனே 

வேடிக்கை பார்த்து நகர்கிறேன் 

சிறு குழந்தையாக...

காலமோ எனது வேடிக்கையை 

ரசித்துக் கொண்டே 

எனை அழைத்துச் செல்கிறது

எந்த விசய சுகங்களிலும் 

எனை தொலைத்து விடாமல் 

கண்ணும் கருத்துமாக...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 15/01/25/புதன் கிழமை.

அந்தி மயங்கும் வேளையில்..

வெள்ளி, 10 ஜனவரி, 2025

வாழ்வின் நிச்சயமற்ற கணத்தில் எல்லாம்...


வாழ்வின் நிச்சயமற்ற கணத்தில் 

எல்லாம் வேடிக்கை ஒன்றே 

இங்கே எனக்கு பல ஆழ்ந்த 

தத்துவத்தை 

உணர்த்தி விடை பெறுகிறது 

என்னிடமிருந்து அந்த காலம்!

இந்த பிரபஞ்சத்தில் சத்தமின்றி 

சுவாசித்து நான் அனுபவிக்கும் 

ரசனையை 

எந்த விரோதியும் அறிந்துக் கொள்ள 

முடியாமல் 

நான் நேசிக்கும் சமுத்திரத்தின் 

ஏதோவொரு மூலையில் 

மறைத்துக் கொண்டு 

பயணிக்கிறேன் நான் ...

இங்கே என் வாழ்வின் துயரங்களை 

கணக்கிட்டுக் கொண்டே 

கூர்மையான பார்வையால் 

என்னை பார்த்து நகைக்கிறான் 

அங்கே எனது விரோதி ஒருவன் ...

நானும் அவனை பார்த்து 

புன்னகைக்கிறேன்

நேசத்தோடு...

இங்கே நான் எவரையும் 

நேசிக்கவும் இல்லை 

வெறுக்கவும் இல்லை என்று 

அவனுக்கு புரியாது..

வாழ்வின் நிச்சயமற்ற கணத்தில் 

அவன் புதைகிறான்...

நான் மிதக்கிறேன்...

இவ்வளவு தான் வாழ்க்கை என்று 

அங்கே மூழ்கிக் கொண்டு இருக்கும் 

அவனிடம் விரைவாக யாரேனும் 

சென்று சொல்லுங்கள்...

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 10/01/25/வெள்ளிக்கிழமை.

செவ்வாய், 7 ஜனவரி, 2025

அந்த பறவையின் இறக்கையின் நிழலில் நான் பயணிக்கிறேன்...


அந்த பறவைக்கு வானில் 

தொடர்ந்து சோர்வில்லாமல்

பறக்க மட்டுமே தெரியும்!

பறப்பதை நிறுத்தி கீழே இறங்கி 

இரை தேடும் ஆர்வம் அதனிடம் 

கிஞ்சித்தும் இல்லை!

இது பற்றி ஆச்சரியமாக 

அங்கே பலரும் கிசுகிசுப்பதை கேட்டு 

நான் நகைக்கிறேன்...

இங்கே தனித்துவமான 

வாழ்வின் மகத்துவம் 

எல்லாம் வெறும் பேச்சோடு 

பலரின் முன்னால் 

அவர்கள் அளவில் 

முடித்துக் கொண்டு 

அவரவர் வழக்கமான பணிகளை 

செய்ய சென்று விடுகிறார்கள்...

அந்த பறவையோ இன்னும் 

அந்த ஆகாயத்தில் எந்தவித 

சலனமும் இல்லாமல் 

பறந்துக் கொண்டு தான் 

இருக்கிறது...

இங்கே அதன் நிலையை அடைய 

எத்தனை பேர் யோசிக்கிறார்கள் 

என்று 

எனக்கு நானே கேட்டுக் கொண்டு 

அந்த பறவையின் இறக்கையின் 

நிழலில் 

பயணிக்கிறேன் என்றோவொரு நாள் 

நானும் அந்த நிலையை 

அடையக் கூடும் என்று!

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 08/01/25

விடியல் பொழுதில் ...



நான் தேடும் ஆறுதல்...


ஏன் என்று தெரியவில்லை 

 எனக்கான தேடலில் 

எல்லாம் எப்போதும் கடலை தவிர 

வேறெதுவும் எனக்கு ஆறுதல் 

தருவதாக தெரிவதில்லை!

ஏதோ அமிர்தம் இதில் இருந்து 

கிடைத்ததால் கூட இருக்கலாம் 

நான் தேடும் ஆறுதல் கடலாக 

இருப்பதற்கு!

அந்த அமிர்தம் கையில் 

கிடைக்காமல் 

போனாலும் கூட நான் கடலை 

நேசிப்பேன்!

ஏனெனில் எனக்கான 

தேடலின் வெறுப்பில் 

நஞ்சை கக்குவதும் 

அதே கடல் தானே!

இரண்டுக்கும் வேறுபாடு 

நான் பார்ப்பதில்லை!

ஒன்று வாழ்வின் ருசியையும் 

இன்னொன்று வாழ்வின் 

எச்சத்தையும் 

எனக்குள் உணர்த்தி விட்டு 

சத்தம் இல்லாமல் 

உயிர்ப்போடு நகர்ந்து செல்கிறது..

இது காலத்தின் தேடலாக 

இருக்கும் போது 

நான் என்ன கருத்து சொல்ல முடியும்?

கொஞ்சம் நீங்களே சொல்லுங்கள் 🧐😌

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:07/01/25/செவ்வாய் கிழமை 

வாழ்வின் பேராசை பசியில் சிக்காமல் பயணிக்கும் பயணி நான்...

ஒரு அற்புதமான விடியல் எப்போதும்  சில பறவைகளின்  மெல்லிய சத்தத்துடன் தான்  துவங்குகிறது... இலேசான குளிர் காற்றில்  முழு வாழ்வின் பேரானந்த  சு...