ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

சனி, 21 செப்டம்பர், 2024

இரவு சிந்தனை ✨

 


அதீத உள் தேடல், 

உங்களை நீங்களே நேசித்தல், 

எதுவாக இருந்தாலும் 

பார்த்துக் கொள்ளலாம் 

இங்கே இழப்பதற்கு 

நம்மிடம் எதுவும் இல்லை என்கின்ற திமிர்... 

அதிகமான நேரத்தை 

இயற்கையோடு சேர்ந்து இருந்து 

அனுபவித்தல்... 

மற்றபடி யாரோ எதுவோ பேசி விட்டு 

போகட்டும் என்று 

கண்டுக் கொள்ளாமல் 

நமக்கு விதிக்கப்பட்ட வேலையை 

சலனம் இல்லாமல் செய்வது...

இது போதும் வாழ்க்கையில் நீங்கள் 

நிம்மதியாக உங்கள் 

வாழ்க்கையை வாழ்வதற்கு...

#இரவு சிந்தனை ✨ 

நாள் 21/09/24/சனிக்கிழமை.

#இளையவேணிகிருஷ்ணா

வெள்ளி, 20 செப்டம்பர், 2024

அந்த ஒற்றை மனிதனின் நடமாட்டமும் இல்லாமல்...

 


அந்த குடியோடு ஒட்டி உறவாடிய ஒற்றை மனிதனின் இறுதி பயணம் முடிந்து சில நாட்களில் அந்த வீட்டின் சுவர்கள் இடிக்கப்படும் ஓசையில் 

என் மனமும் சேர்ந்து அதிர்கிறது...

என்றோ குடியின் காரணமாக விட்டு விலகிய மனைவி குழந்தைகள் 

வேறு நகரத்தில் வசிக்க ஆரம்பித்து பல வருடங்கள் ஆகி விட்டது...

கணவனின் இறுதி சடங்கில் 

பங்கேற்ற மனைவி குழந்தைகள் அடுத்த நாளே 

எல்லா சடங்கும் முடித்து 

சென்று விட 

அந்த ஒற்றை மனிதனின் நடமாட்டமும் இல்லாமல் பேரமைதி கொண்ட அந்த வீடு தான் இன்று இடிக்கப்படுகிறது...

அந்த வீட்டின் மனிதர்கள் 

ஒரு காலத்தில் கூடி குலாவி 

மகிழ்ந்த தருணங்கள் எல்லாம் வெறும் சுவர் இடிந்த அந்த மண் துகள்களுக்குள் புதைக்கப்படும் ஓசையில் 

அந்த மனிதர்களின் உணர்வுகளை நினைத்து விம்மி அழும் என் மனதிற்கு 

ஆறுதல் எங்கே என்று தான் தெரியவில்லை...

இன்னும் சில நாட்கள் 

இதன் தாக்கம் இருந்து விட்டு 

காலத்தின் லீலையால் 

அழியதான் போகிறது என்று 

தெரிந்தாலும் 

இதோ இப்போது இடிக்கப்படும் ஓசையில் 

அதிரும் என் மனதிற்கு 

ஆறுதல் யார் தரக் கூடும்?

அறமற்ற அரசாங்கத்தின் 

கொள்கை முடிவில் 

இங்கே புதைக்கப்படும் 

பல மனிதர்களின் 

கனவுகளின் சாபத்தை 

அதை நடத்தும் அரசாங்கம் 

உணரும் நாளில் 

இங்கே ஒரு தலைமுறையே 

மலை போல புதைக்கப்பட்டு 

அங்கே அதன் மேலே சிரித்துக் கொண்டு இருக்கும் மண்டை ஓட்டின் பயத்தில் உயிர் பயம் தொடர இறப்பை விரும்பி அழைக்கும் தலைவனுக்கு 

அருகில் இருக்கும் தொண்டர்களால் கூட ஆறுதல் சொல்ல இயலவில்லை...

#அந்த #ஒற்றை #மனிதனின்

#இறுதி #பயணம்.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 21/09/24/சனிக்கிழமை.

விடை தெரியா கேள்வி ஒன்று...

 


விடை தெரியா கேள்வி ஒன்று 

பல யுகங்களாக இங்கும் அங்கும் 

அலைந்து திரிந்து கொண்டு 

இருக்கிறது என்னுள்ளே...

ஒவ்வொரு முறையும் இந்த பூமியில் 

நான் ஜனனம் எடுக்கும் போது 

என்னை நோக்கி 

முதலில் அழுகை மூலம் துவங்கிய 

அந்த கேள்வி இன்னும் 

முடிந்தபாடில்லை...

இந்த முறை சலித்து விட்டு 

நான் கொஞ்சம் காலத்திடம் 

எரிச்சலாக கேட்கிறேன் ...

ஏன் இந்த ஒற்றை கேள்வியை 

இப்படி அநாதரவாக அலைய 

விடுகிறீர்கள் ?

உங்களுக்கு தெரியும் தானே 

அதை சொல்லி விட்டு கொஞ்சம் 

எனை கடந்து சென்றால் தான் என்ன 

என்று கோபத்தோடு கேட்கிறேன்...

காலம் எனது கோபத்தை 

சிறிதும் மதியாமல் நீ எனக்கு காலம் 

காலமாக என்னோடு பயணிக்கும் 

உற்ற தோழி...

நீயே அந்த கேள்விக்கான பதிலை 

கொஞ்சம் ஆசுவாசமாக அமர்ந்தால் 

கண்டுபிடித்து விடுவாய்...

கண்டுபிடித்து விட்டால் 

நீ என்னோடு பயணிப்பது 

சுத்தமாக நின்று விடும்..

நான் பித்து நிலையை 

அடைவேன் அல்லவா 

அதனால் தான் உன்னை அப்படி 

ஆசுவாசப்படுத்திக் கொள்ள

விடாமல் துரத்திக் கொண்டே 

நான் இருக்கிறேன்...

உன் மீது கொண்ட காதலால்

என்ற காலத்தை பார்த்து 

ஒரு முறைப்பு முறைத்து விட்டு 

நான் எனது பயணத்தை 

தொடர்ந்தேன் 

அந்த விக்கிரமாதித்தன் போல...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 21/09/24/சனிக்கிழமை.


ஆசையின் சலனத்தை யார் அறியக் கூடும்?




அந்த யாருமற்ற தனிமையில் தான் 

என் தேடலுக்கான விடை 

எனக்குள் கை மாறுகிறது...

உள்ளுக்குள் ஆழ்ந்த அமைதியில் 

எந்தவித சங்கடமும் இல்லாமல் 

நான் அதை நான் பெற்றுக் கொள்ள 

முற்படும் போது 

என்னையும் அறியாமல் 

லௌகீக விசயத்தின் 

சிறு தீண்டலில் நான் கொஞ்சம் 

நிலை தடுமாறி வீழும் போது 

என் கை நழுவி போன அந்த விடை 

எனை கொஞ்சம் பதட்டமாகவும் 

பரிதாபமாகவும் 

பார்த்து விடுவதில் தான் 

நான் கூனி குறுகி போய் விடுகிறேன் 

என் ஆசையின் சலனத்தை 

யார் அறியக் கூடும்???

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 21/09/24/சனிக்கிழமை.

அந்த மரண தேவனின் சிறு ஸ்பரிசத்தில்...

 


அந்த மரண தேவனின் 

ஒரு சிறு ஸ்பரிசத்தில் 

நான் ஆங்காரமாக 

அதன் தலையில் ஏறி 

அமர்ந்துக் கொண்டு 

அந்த சத்தமான சிரிப்பொலியை 

உதிர்த்துக் கொண்டே 

இந்த பிரபஞ்சத்தை இங்கும் அங்கும் 

நோக்குவதை பார்த்து 

ஈரேழு பதினான்கு லோகங்களும்

கொஞ்சம் அல்ல நிறையவே 

அதிர்ந்து தான் போனது...

#இளையவேணிகிருஷ்ணா.

#நாள்:21/09/24/சனிக்கிழமை.



புதன், 18 செப்டம்பர், 2024

காலை சிந்தனை ✨


இனிமையான 

இந்த காலைப்பொழுது 

உங்களுடைய புதிய 

உற்சாக நிகழ்வுக்கான 

தொடக்கம் ...

இன்பமும் துன்பமும் 

நம் மனதில் விளைந்த கற்பனை 

அதை கொஞ்சம் வெளியே 

தூக்கி எறிந்து விட்டு 

நிகழ்வுகளில் பயணம் செய்யுங்கள் 

எந்த உணர்வுகளும் தற்காலிகமே 

என்பதை உணர்ந்து 

இந்த மூச்சு காற்று நம் உடலில் 

உலாவும் வரை 

எதையேனும் இந்த பிரபஞ்சத்தில் 

நல்ல அதிர்வலைகளை 

ஏற்படுத்தி விட்டு

அதனோடு ஒட்டாமல் பயணிப்போம் 

வாழ்க்கை உற்சாகமாக இருக்கும்...

#இன்றைய சிந்தனை ✨ 

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 19/09/24/வியாழக்கிழமை.


சனி, 14 செப்டம்பர், 2024

இன்னும் பொழுது இருக்கிறது...

 


அங்கே காகம் தொடர்ந்து 

எனது வீட்டின் கூரை மீது 

அமர்ந்து வெகுநேரமாக 

கரைந்துக் கொண்டு 

இருக்கிறது ...

பாவம் அதற்கு தெரிய 

நியாயமில்லை 

விருந்தாளிகளின் வருகையை 

எனது அலைபேசி இன்னும் 

தனது கூவுதலில் எனக்கு 

தெரியப்படுத்தவே இல்லை என்று 

ஒரு வேளை காகம் 

உணர்த்தும் செய்தி 

உண்மையானால் நான் 

எனக்காக வைத்திருக்கும் 

அந்த கேழ்வரகு கூழை 

வரும் விருந்தாளிகள் மகிழ்ச்சியாக 

ஏற்றுக் கொள்வார்களா 

இல்லை என்  ஏழ்மை 

நிலைமையை பற்றி 

என் நெருக்கமான சொந்தங்களிடம் 

புறம் பேசுவார்களா 

பொறுத்து இருந்து தான் 

பார்க்க வேண்டும் 

இன்னும் பொழுது இருக்கிறது...

#ஞாயிறுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 15/09/24/ஞாயிற்றுக்கிழமை.

எமது உறவினர்

அகங்கார வீதியில் அங்கும் இங்கும் அலைந்துக் கொண்டு இருக்கிறேன்...


அத்தனை சுகங்களுக்கும் 

விடை கொடுத்து விட்டு 

எந்தவித சுகங்களும் இல்லாமல் 

பயணிக்கும் போது 

ஒரு சிறு துளி சுகம் என்னை 

ஏமாற்றி என்னுள்ளே 

எங்கே புதைந்து கொண்டது என்று 

தேடி தேடி களைத்து விடும் போது 

நான் காலத்திடம் 

சரணாகதி அடைந்து

கண்ணீர் மல்கி 

கூத்தாடுகிறேன் 

அந்த ஒரு துளி சுகத்தின் அவஸ்தை 

என்னை நெருப்பாக 

தகிக்கிறது என்று ...

காலமோ நீ ஏன் அதையே நினைத்து 

அதற்கு உயிர் கொடுத்து உனக்கு 

மிக பெரிய 

எதிரியாக்கிக் கொள்கிறாய் என்று 

மிகவும் இலகுவாக கேட்டதில் தான் 

புரிந்தது நான் அகங்கார வீதியில் 

அங்கும் இங்கும் 

அலைந்துக் கொண்டு 

இருக்கிறேன் என்று...

#அகங்கார வீதியில்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 15/09/24/ஞாயிற்றுக்கிழமை.

ஆயிரம் ஆயிரம் கேள்விகளால் இந்த உலகம்...

 


ஆயிரம் ஆயிரம் 

ஒன்றுக்கும் பிரயோஜனம் இல்லாத 

கேள்விகளால் இந்த உலகம் 

எனை ஆக்கிரமிக்கும் பொழுது 

நான் என்ன விடை 

பகிர்ந்து விட போகிறேன் என்று 

ஆவலாக காத்திருப்பவர்களை 

பார்த்து எனை நன்கு அறிந்திருந்த 

காலம் கொஞ்சம் பலமாக 

சிரித்து வைப்பதை பார்த்து 

அங்கே எனது பதிலுக்காக 

காத்திருப்பவர்கள் கொஞ்சம் 

எரிச்சலோடு காலத்தை

பார்த்து விட்டு என்னிடம் 

திரும்பும் போது 

நான் அங்கே இல்லை...

#நான் அங்கே இல்லை..

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 15/09/24/ஞாயிற்றுக்கிழமை.

அந்த துயரத்தின் நிழலொன்றில் அடைக்கலம் தேடிய போது...


வேறு எதுவும் அடைக்கலம் 

கிடைக்கவில்லை என்று 

உறுதி செய்து சோர்ந்து அமரும் 

தருணத்தில் 

அந்த பெரும் துயரத்தின் மரத்தின் 

நிழலொன்று அடைக்கலம் 

தந்தது...

அந்த இளைப்பாறுதலில் 

என் விசும்பலின் ஒலியில் 

நுட்பத்தை மட்டும் 

என்னால்  எவ்வளவு முயன்றும் 

மறைக்க இயலவில்லை ...

அந்த விசும்பலின் வெப்பத்தில் 

எனக்கு அடைக்கலம் தந்த நிழலில் 

உதிர்ந்த இலையொன்று 

கருகிக் கொண்டு இருப்பதை

ஒரு அசாதாரண பறவை 

தனது இனிமையான கூவுதலில் 

ஸ்பரிசித்து இது நியாயமா என்று 

மெல்லிய குரலில் கேட்ட போது தான் 

புரிந்தது என் துயரம் என்னோடு 

முடிவதில்லை என்று ...

உடனே என் விசும்பலை 

நிறுத்தி விட்டு சிறிது நேரம் 

புன்னகைத்து 

அங்கே உதிர்ந்து 

கருகிக் கொண்டு இருந்த 

இலையின் கருகலை நிறுத்தி 

அதன் பசுமையை மீட்டி விட்ட 

ஆனந்தத்தில் எனக்கு 

சில நாழிகை பொழுது 

அடைக்கலம் தந்த 

அந்த மரத்தை தழுவி முத்தமிட்டு 

என் கண்களில் வழியும் கண்ணீரை 

துடைத்துக் கொண்டு 

என் முன்பு பரந்து விரிந்த சாலையில் 

தொடர்ந்து பயணிக்கிறேன்

எந்தவித துயரத்தின் சுவடும் 

எனை நெருங்கி விடாதபடி...

#துயரத்தின் நிழலொன்று 

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 15/09/24/ஞாயிற்றுக்கிழமை.



செவ்வாய், 10 செப்டம்பர், 2024

உறங்கும் முன் ஒரு சிந்தனை கதை ✨

 


வணக்கம் நேயர்களே 🙏.

இன்று உறங்கும் முன் ஒரு சிந்தனை கதையில் ஜென் துறவியும் ஒரு திருடனின் மனநிலையும் தான் கேட்க போகிறோம் 🦋🎉.

கீழேயுள்ள லிங்கில் ஜென் கதையை கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிடுங்கள் நேயர்களே 🙏 😊 🙏.

https://youtu.be/4tc13MdH86w?si=ulhvH2reeYjLDFYZ

திங்கள், 9 செப்டம்பர், 2024

சிறுகதை உலகம்

 


நேயர்கள் அனைவருக்கும் இனிமையான வணக்கம் 🙏 

ஒரு வறுமையின் பிடியில் சிக்கிய சிறுவனின் மணக்கும் ரொட்டி துண்டை சாப்பிடும் ஆர்வத்தை மிகவும் வலி நிறைந்த உணர்வோடு படம் பிடித்து காட்டி இருக்கிறார் எழுத்தாளர் ஆர்.கே.அருள்செல்வன் அவர்கள்... வாழ்த்துக்கள் எழுத்தாளர் அவர்களுக்கு 🙏 🎉 கீழேயுள்ள லிங்கில் அந்த கதையை கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்க கேட்டு கொள்கிறேன் நேயர்களே 🙏.

https://youtu.be/IPSFw96uhYM?si=w22gqguQtH4eZZA1


உறங்கும் முன் ஒரு சிந்தனை கதை ✨

 


நேயர்களே வணக்கம் 🙏.

வாழ்வின் எத்தனை துயரங்கள் வந்தாலும் கலங்கி அப்படியே நின்று விடாமல் அடுத்து என்ன அடுத்து என்ன நமது பயணத்தை மிகவும் ஆவலாக பயணிக்கும் போது தான் அது மிகவும் அருமையான நிகழ்வாக நமக்கு மிக பெரிய பொக்கிஷத்தை பரிசளிக்க காத்திருக்கிறோம்... அப்படியான சுவாரஸ்யமான நிகழ்வு ஹோண்டா வாழ்வில் நடந்த நிகழ்வை நீங்கள் கீழேயுள்ள லிங்கில் கேட்டு உத்வேகம் அடையலாம் நேயர்களே 🙏🎻✨.

https://youtu.be/3XQbOE_s60w?si=R4HDqv8LQcfMxVct

ஞாயிறு, 8 செப்டம்பர், 2024

பற்றற்ற காலமும் கொஞ்சம் வெறுப்போடு கடந்து செல்கிறது...


வெளிநாட்டில் இருந்து வரும் மகனுக்காக 

இங்கே அந்த இறந்த தந்தையின் சடலத்தை பூத கணங்களாக காவல் காக்கிறார்கள் இரவும் பகலும் அந்த சுற்றமும் நட்பும்...

உயிரோடு இருந்த போது 

அலைபேசியில் ஒரு சிறு நலம் விசாரிப்புக்கு நேரம் கிடைக்காதவர்கள்...

உயிரோடு இருந்த போது 

தன் தந்தையின் சிறு சிறு 

உரையாடலுக்கு காது கொடுத்து கேட்க இயலாத மகனின் அந்த வருகை...

இப்படி அனைத்தையும் 

வேடிக்கை பார்த்து பார்த்து அலுத்து விட்ட காலம் 

சரி இது சரிப்பட்டு வராது என்று 

கொஞ்சம் கொஞ்சமாக தீராத ஏக்கத்தோடு பயணிக்க காத்திருக்கிறோம்

அந்த சடலத்தின் மீது 

சிறு துர்நாற்றம் வீசி 

அனைவரையும் அந்த காவலில் இருந்து 

விடுவித்து காலதேவனின் கைகளில் 

அந்த சடலத்தை 

ஒப்படைத்து தனது கடமை முடிந்த 

திருப்தியில் 

அந்த இடத்தை 

கடந்து செல்கிறது 

பற்றற்ற காலமும் 

கொஞ்சம் வெறுப்போடு...

#காலத்தின்வெறுப்பு.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:09/09/24/திங்கட்கிழமை.

எனது ஆசையின் சுவையும்...


காலம் மென்று தின்று போட்ட 

அந்த எச்சத்தில்

எனது ஆசையின் சுவையும் 

அந்த காலத்தின் நாவால் 

சாறு முழுமையாக 

எடுக்கப்பட்டு விட்டதா என்று 

அந்த வீசி எறியப்பட்ட சக்கையினை 

மீண்டும் மென்று உறுதி செய்து 

ஆனந்த கூத்தாடுகிறேன்...

#ஆசையின்சுவை.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:09/09/24/திங்கட்கிழமை.

நேரம் பரபரப்பான காலைப்பொழுது 8:27.

அந்த சபிக்கப்பட்ட நாட்களில் எல்லாம்...


அந்த சபிக்கப்பட்ட நாட்களில்  

எல்லாம் சதிக்கார நிகழ்வுகள்

என் முன்பு 

சதிராட்டம் ஆடி தீர்க்கிறது...

அந்த ஆட்டத்தில் களிப்பை 

பார்த்து பார்த்து சலித்து விட்ட நான் 

சலிக்காத எனது எழுதுகோலை

எடுத்து அந்த வெற்று 

வெள்ளைத் தாளில் 

என் வாழ்வின் தற்போது நடக்கும் 

அந்த நிகழ்வை

ஓவியமாக வரைந்து கொண்டு 

இருப்பதை பார்த்து 

அந்த சதிகார நிகழ்வு என் மீது 

மீண்டும் ஒரு அகோர சிரிப்பின் ஊடே

என்னை பயமுறுத்தும் போது 

நான் கொஞ்சம் அந்த சதிக்கார 

நிகழ்வின் மீது 

என் கோப கனலை 

வீசி எறிந்த போது 

நான் வரைந்து வைத்து இருந்த 

அந்த ஓவியமும் தன் பங்கிற்கு 

முழுமையடையாத கோபத்தை 

அந்த சதிக்கார நிகழ்வின் மீது 

உமிழ்ந்து விட்டு என் மேசை மீது 

ஆழ்ந்த அமைதியில் 

உறங்கி விடுகிறது...

நான் என் சகஜ நிலைக்கு வந்து 

அந்த தாளை ஸ்பரிசித்து 

அதற்கு ஆறுதல் தருவதாக 

நினைத்து 

எனக்கான ஆறுதலை 

தேடிக் கொள்கிறேன் ...

#சதிக்கார நிகழ்வுகள் 

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:09/09/24/திங்கட்கிழமை.




உறங்கும் முன் ஒரு சிந்தனை கதை ✨

 


தற்போது திருமண பந்தத்தில் நுழையும் பெண் பிள்ளைகள் எந்த பிரச்சினையும் சமாளிக்க தெரியாமல் சிறு விசயத்திற்கு கூட சோர்ந்து விடுகிறார்கள்... அதற்கு ஒரு பெண் பிள்ளை பெற்ற தாய் தனது மகளுக்கு கூறும் அறிவுரையாக இந்த கதை அமைந்துள்ளது... கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிடுங்கள் நேயர்களே 🙏.

கீழேயுள்ள லிங்கில் கதையை கேட்டு மகிழுங்கள் 🙏 

https://youtu.be/J1wSUBuvSsk?si=aIanf-kXLmME7z7f

#வாழ்வியல்


சனி, 7 செப்டம்பர், 2024

உறங்கும் முன் ஒரு சிந்தனை கதை ✨

 


வணக்கம் நேயர்களே 🙏.

இன்று உறங்கும் முன் ஒரு சிந்தனை கதை நிகழ்ச்சியில் அனுமனின் அகங்காரம் நீங்கிய நிகழ்வொன்று உங்களோடு பகிர்ந்து கொண்டேன்..

கீழேயுள்ள லிங்கில் அதை நீங்கள் கேட்டு மகிழுங்கள் 🙏.

https://youtu.be/8xhzCS4Lv_s?si=oNapBAPtRoBy-Ffn

வெள்ளி, 6 செப்டம்பர், 2024

உறங்கும் முன் ஒரு சிந்தனை கதை ✨

 


நேயர்கள் அனைவருக்கும் இனிமையான வணக்கம் 🙏.

உறங்குவதற்கு முன் நல்ல சிந்தனைகள் தூண்டும் கதைகள் கேட்டு விட்டு உறங்குவதால் நிம்மதியாக சஞ்சலம் இல்லாத மனதோடு உறங்க முடியும்.. அதற்கான அருமையான சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் நீங்கள் கேட்டு விட்டு நிம்மதியாக உறங்குங்கள் நேயர்களே 🎻 ✨ 🎉.

https://youtu.be/JR1v5Tfzod4?si=Mw5-C_5hDeYiHroe

வியாழன், 5 செப்டம்பர், 2024

சிறுகதை உலகம்

 



நேயர்களே வணக்கம் 🙏 


கீழேயுள்ள லிங்கில் உள்ள இந்த கதை கடந்த காலத்தில் நாம் மிகவும் பயந்த உலக நாடுகளையே பயமுறுத்திய கொரணா நோய் பரவலின் போது எழுதிய கதை... அந்த கால கட்டத்தில் ஒரு ஐரோப்பியரும் இந்தியரும் ஒன்றாக ஒரே நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர்..அவர்கள் ஒரு உணவு விடுதியில் கலந்துரையாடிய நிகழ்வாக கதை களம் அமைந்துள்ளது... மிகவும் வித்தியாசமான உணர்வுகளை பிரதிபலித்தது நம்மை வேறு உலகத்தில் சஞ்சரித்து மெய்யை நமக்குள் தேடி விடை காணுவதாக எழுத்தாளர் விஜய ராவணன் அமைத்து உள்ளார்.. நீங்கள் அந்த கதையை நான் வாசிக்க கேட்க வேண்டும் என்றால் கீழேயுள்ள லிங்கில் கேட்டு மகிழலாம் நேயர்களே 🙏.

https://youtu.be/Tytf1tEzFrg?si=hSHyMh9gU7UxJvNx

புதன், 4 செப்டம்பர், 2024

இன்றைய சிந்தனை ✨


நம்மில் பல பேருக்கு ஏதாவது 

விரும்ப தகாத 

சம்பவங்கள் 

நடந்து விட்டால் 

அப்படியே இடிந்து போய் 

உட்கார்ந்து விடுவீர்கள் இல்லையா?

அப்படி இடிந்து போகாதீர்கள் 

இங்கே எந்த நிகழ்வும் 

நாம் திட்டமிட்டபடி நடப்பதே இல்லை 

இயல்பாக ஒரு நதியை போல 

கடந்து கடந்து சென்றுகொண்டே 

இருங்கள்...

இங்கே அமைதியான 

சலனமற்ற பயணமே 

நமது வாழ்வின் பெரும் பகுதி 

பல வண்ண பூக்களால் 

மென்மையாக அலங்கரிக்கும்...

#இன்றைய சிந்தனை ✨ 

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 05/09/24.

வியாழக்கிழமை.

உறங்கும் முன் ஒரு சிந்தனை கதை ✨

 


நேயர்களே வணக்கம் 🙏.

இந்த உறங்கும் முன் ஒரு சிந்தனை கதை என்பது நமது மனதிற்கு அமைதியையும் வேறு தேவையில்லாத சிந்தனை இல்லாமல் உறங்கவும் நமக்கு உதவுகிறது...கதை கேட்டு கொண்டு உறங்குவது என்பது அந்த காலத்தில் இருந்து நம்மோடு பயணிக்கும் ஒரு விஷயம்...

கீழேயுள்ள லிங்கில் வரும் கதையை கேட்டு விட்டு தங்களது மேலான உறக்கத்தை தொடருங்கள் 😊🤝🙏.

https://youtu.be/VXfcfmlKGqg?si=ua8Ek-WVhJ_8arzr

சிறுகதை உலகம்

 


ஒரு பெண்ணின் கலைப் பயணம் அதே கலையுலகில் பயணிப்பவரை திருமணம் செய்துக் கொண்ட பிறகும் தொடர்கிறதா வலி நிறைந்த வர்ணனையோடு எழுத்தாளர் விஜய ராவணன் அவர்களின் எழுத்துகளாக மிளிர்கிறது... வாழ்த்துக்கள் நேயர்கள் சார்பாக எழுத்தாளர் அவர்களுக்கு🙏🎉🤝.

 கீழேயுள்ள லிங்கில் கதையை கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிடுங்கள் நேயர்களே 🎻 🙏 🙏 🤝.

https://youtu.be/wftyLdxKpcI?si=GBalrtMrvEgTcGxd


செவ்வாய், 3 செப்டம்பர், 2024

உறங்கும் முன் ஒரு சிந்தனை கதை ✨

 


நேயர்களே வணக்கம் 🙏.

உறங்கும் முன் ஒரு நல்ல சிந்தனை கதை கேட்டு விட்டு உறங்கும் போது எப்போதும் நிம்மதியாக ஆனந்தமாக உறக்கம் வரும்... அந்த வகையில் இன்று சிந்தனை தூண்டும் சூபி ஞானி கதை தான் கேட்க போகிறீர்கள் கீழேயுள்ள லிங்கில்... கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிடுங்கள் நேயர்களே 🎻 🙏.

https://youtu.be/GQ845HAZFvU?si=nMx7GY2wszUzgRoD

திங்கள், 2 செப்டம்பர், 2024

சிறுகதை உலகம்

 


ஒரு பனை மரத் தொழிலாளியின் உணர்வுகளை பிரதிபலிக்கும் இந்த கதையை கேட்டு பாருங்கள் நேயர்களே...

மேலும் அதை வாசிக்க நீங்கள் சிறுவாணி வாசகர் மையத்தை தொடர்புக் கொள்ளுங்கள் நூலை பெற்றுக் கொள்ள 🙏.

கீழேயுள்ள லிங்கில் வெள்ளி ஓடை கதையை கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிடுங்கள் நேயர்களே 🙏.

https://youtu.be/klEQ1HASuMw?si=WE9SsrysSOMAy3UA

உறங்கும் முன் ஒரு சிந்தனை கதை ✨

 


உறங்குவதற்கு முன் நல்ல சிந்தனைகள் உள்ள கதையை கேட்டு விட்டு உறங்கும் போது மனதிற்கு இலேசாக தோன்றும் நிம்மதியாக உறங்கலாம்... அதற்காக தான் இந்த உறங்கும் முன் ஒரு சிந்தனை கதை நிகழ்ச்சி நேயர்களே 🙏✨🎻. #வாழ்வியல் #சிறுகதை 

#உறங்கும்முன்

#சிந்தனைகதை.

#bedtime #stories

கீழேயுள்ள லிங்கில் கேட்டு மகிழலாம் வாருங்கள் நேயர்களே 🙏 🤝 😊.

https://youtu.be/IbCI2nktoAo?si=LGF2spicJN2dkD0v

காற்று ஒன்றே கனிவோடு ஒத்தடம் கொடுக்கிறது...


சிறகில் அளவில்லாத 

ரணத்தோடு இரத்தம் வழிய

வானில் பறக்கும் 

அந்த பறவைக்கு

காற்று ஒன்றே 

இங்கே கனிவோடு ஒத்தடம் 

கொடுக்கிறது...

இங்கே எந்த ஆராவாரமும் 

இல்லாமல் செய்யப்படும் 

செயல்களுக்கு மதிப்பில்லை 

என்ற போதும் 

அலைகள் இல்லாத 

எந்தவித ஆராவாரமும் இல்லாத 

கடலும் 

இங்கே நம்மில் ஒரு சிலரின் 

கவனத்தை சத்தம் இல்லாமல் 

பெறத்தானே செய்கிறது....

#இசைச்சாரல்வானொலி.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 02/09/24/திங்கட்கிழமை.

பெரும் போரின் உக்கிரத்தை தணித்து...

 நீயோ குருட்டு பிடிவாதத்தால் எவரின் தூண்டுதலாலோ விலகி விலகி பயணிக்கிறாய்  என்னிடம் இருந்து... அந்த உக்ரைனை போல... நானோ உன்னை  என் பேரன்பின் ...