அவளோடு ஓர் பயணம்:-
அங்கே அலுவலகத்தில் அவ்வளவு களேபரங்கள் நடந்து முடிந்து இருக்கிறது.. இங்கே நீ நிலவை ரசித்து அதில் காதல் மொழியை பேசி வீடியோ போட்டு கொண்டு இருக்கிறாயா? அதுவும் காதலில் அவ்வளவு பிடிப்பு இல்லாத நீ இப்படி உருகும் காதல் மொழி பேசி அப் லோட் செய்வது தான் ஆச்சரியம் என்று கேட்டுக் கொண்டே எனது வீட்டில் நுழைகிறான் கிருஷ்.
நான் சமையலறையில் தோசை வார்த்துக் கொண்டே அவன் வருகையை ஆச்சரியமாக பார்த்து வரவேற்றேன்.. புன்முறுவலோடு..
என்ன கிருஷ்.. இந்த பக்கம் காலையிலேயே என்றேன்.. சிரித்தபடியே..
ஆம்..நீ அந்த நிகழ்வை அவ்வளவு எளிதாக கடந்து விடுவாய் என்று நான் நினைக்கவில்லை.. அதனால் தான் காலையிலேயே இங்கே வந்தேன்.. என்றான்.
ஓ.. அந்தளவுக்கு நீ என் மீது அக்கறை செலுத்த ஆரம்பித்து விட்டாயா என்றேன் கேலியாக..
சரி வா...தோசை சாப்பிடலாம் என்றேன்..
இல்லை நதி.. வீட்டில் அம்மாவிடம் உடனே வந்து விடுவேன் என்று சொல்லி விட்டு வந்தேன்.. என்றான்..
அட பரவாயில்லை.. சாப்பிட்டு விட்டு போ.. நானும் அலுவலகத்திற்கு தான் தயாராகிறேன் என்று சொல்லி கொண்டே அவனிடம் இரண்டு தோசை மற்றும் பூண்டு சட்னியை ஒரு தட்டில் போட்டு கொண்டு போய் கொடுத்தேன்..
அவனும் அதை மிகவும் நிதானமாக ரசித்து சாப்பிட்டு கொண்டே எப்படி இவ்வளவு இலகுவாக எதையும் எடுத்து கொள்கிறாய் என்றான்...
என்ன இந்த தோசை வார்த்தது பற்றியா சொல்கிறாய் என்றேன் சிரித்துக்கொண்டே..
இல்லை நதி... அலுவலகத்தில் உனக்கு எதிராக அவ்வளவு விசயங்கள் நடந்ததை பற்றி என்றான்...
அப்படி இல்லை கிருஷ்.. இங்கே பல நிகழ்வுகள் நமக்கு எதிராக நடக்கலாம்.. அதெல்லாம் உண்மையாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.. மேலும் நம்மை பற்றி எத்தனையோ விசயங்கள் எவர் எவரோ சொல்லலாம்..அதை பற்றி எல்லாம் மனதின் ஆழம் வரை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.. என்றேன் சிறு புன்னகையுடனே..
மேலும் ஒரு விசயம்.. இந்த காதல் மொழி என்று சொன்னாய் அல்லவா.. அது எல்லாம் ஒரு சுவாரஸ்யமான விசயம்.. அதில் எனக்கு நம்பிக்கை இல்லை என்றாலும் அதை உணர்பவர்களுக்காக அந்த வீடியோ.. அவ்வளவு தான்.. மற்ற படி எனக்கு இந்த காதல் எல்லாம் எப்போதும் ஒத்தே வராது.. அது ஓர் ரசனை மொழி.. அவ்வளவு தான்.. இதில் நான் காதலில் விழுந்து விட்டேன் என்று நீ நினைப்பது எல்லாம் ஒரு கற்பனை.. என்றேன்..
இந்த விளக்கத்தை கேட்டு விட்டு கிருஷ் சிரித்துக் கொண்டே அதானே.. சூரியன் மேற்கில் உதித்தாலும் உதிக்கலாம்..நீ காதலில் விழ வாய்பில்லை தானே என்று சொல்லி கொண்டே போய் எழுந்து கை கழுவினான்...
நானும் சிரித்துக்கொண்டே வாழ்வின் எனக்கான ரசனையை நீ புரிந்து கொள்ளும் போது உணர கூடும் என்றேன்..
அதுவும் சரிதான் நதி என்று சொல்லி கொண்டே விடைபெற்று சென்றான்..
நானும் அவனை வாசல் வரை வந்து வழியனுப்பி விட்டு வந்து சாப்பிட்டு விட்டு அலுவலகம் செல்ல தயாரானேன்.. உற்சாகமாக..
#அவளோடுஓர்பயணம்
#இளையவேணிகிருஷ்ணா.