ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வெள்ளி, 28 ஜூலை, 2023

எஞ்சிய தேநீர் துளிகளில்

 


நீ அருந்தி முடித்த 

அந்த தேநீர் கோப்பையில்

ஒரு சில எறும்புகள் அதில் உள்ள

இனிப்பு சுவையை தேடுவதாக

இந்த உலகத்தில் உள்ள 

மக்கள் நம்பலாம் !

நான் ஏன் நம்ப வேண்டும்?

அதில் எஞ்சி இருப்பது

என் மீது கொண்ட காதல் துளிகள் 

என்று

எனக்கு தெரியாதா என்ன?

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சங்க இலக்கியம்//நற்றிணை பாடல் (5)

  நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப, அகல் வாய்ப் பைஞ் சுனைப் பயிர்  கால்யாப்ப, குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர் நறுங் காழ் ஆரம் சுற்றுவன அகை...