ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

ஞாயிறு, 31 ஜூலை, 2022

அங்கே நடந்த நிகழ்வு...


 அங்கே என்ன நடக்கிறது

கொஞ்சமேனும்

அக்கறை இல்லாமல்

சலனமற்ற நிலையில்

நான் கடந்து செல்வதை பார்த்து

அங்கே சிலர் என்னை

விமர்சிக்கிறார்கள்..

அங்கே நடந்த நிகழ்வில் தான்

நான் சுக்குநூறாக

சென்ற பிறவியில் உடைந்து

இங்கே பிறவி எடுத்து

இருக்கிறேன் என்று

அவர்கள் அறிய

நியாயம் இல்லை தானே..

#இளையவேணிகிருஷ்ணா.

என்னை கொல்லுதடி...


 

உனக்கான காதலை 

என் மனதில் ஆழமாக

புதைத்து விட்டு

அதை உன்னிடம் 

நான் கொடுக்க 

மறந்து விட்டேன் என்பதை 

இதோ இங்கே 

நம்மை சுற்றி இருப்பவர்கள் 

பேசும் புரளி 

காதில் சுற்றி சுற்றி வந்து 

என்னை கொல்லுதடி... #இளையவேணிகிருஷ்ணா. ...

வெள்ளி, 29 ஜூலை, 2022

நான் நானாக..


அத்தனை வாழ்வியல்

நிகழ்வுகளையும்

இந்த இருளுக்குள் 

புதைத்து விட்டு

நான் நானாக உணரும்

இந்த தருணத்தில்

அங்கே எங்கோ ஆதரவற்று

அலைந்து திரிந்த

ஆனந்தம் எனை நோக்கி 

வேகமாக வந்து

கட்டியணைத்துக் கொண்டது..

#இளையவேணிகிருஷ்ணா.

வியாழன், 28 ஜூலை, 2022

இன்றைய தலையங்கம்

 இன்றைய தலையங்கம்:-

தேசத்தின் உயர்ந்த பதவியான ஜனாதிபதி பதவிக்கு திரௌபதி முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார்.. ஒரு குக்கிராமத்தில் இருந்து அரசியல் வாழ்வில் கால் பதித்து தமது வாழ்வில் பல போராட்டங்களை அனுபவித்து இன்று மிக உயர்ந்த பதவிக்கு வந்து இருக்கும் இரண்டாவது பெண் ஜனாதிபதி...

ஒருவரை பற்றி தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது என்பது வேறு.. அவர் ஒரு உயர்ந்த ஸ்தானத்தில் இருக்கும் போது விமர்சிப்பது வேறு.. தற்போது அவர் நாட்டின் பெருமைக்குரிய பதவியான மிக உயர்ந்த பதவியான ஜனாதிபதி பதவியை அடைந்து தனக்கான பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு விட்டார்.. இப்போது ஜனாதிபதியை தரக் குறைவாக ஒரு காங்கிரஸ் தலைவர் பேசி இருப்பது மிகவும் வருத்தமான விசயம்.. லோக் சபா காங்கிரஸ் தலைவரான எம்.பி.அதிர் ரஞ்சன் சௌத்ரி அருவருக்கத்தக்க வகையில் பேசி இருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது... அவர் அரசியல் வாழ்வின் கரும் புள்ளி.. மேலும் அவரை தேர்ந்தெடுத்த மக்களுக்கு மிக பெரிய அவமானத்தை தேடி தந்து விட்டார்.. மக்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுப்பது எல்லாம் இவர்கள் வாய் ஜாலம் மற்றும் அருவருக்கத்தக்க பேச்சை கேட்பதற்கு தான் என்று நினைத்து விட்டார்கள் போலும்.. ஏன் இந்த அவல நிலை...நமது அரசியலமைப்பு சட்டத்தை இதை விட கேவலமாக அவமதிக்க முடியாது..இதை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வன்மையாக கண்டிக்க வேண்டிய இடத்தில் இருந்தும் கண்டிக்காமல் இருப்பது மிகவும் மோசமான விசயம்...

எங்கே பார்த்தாலும் ஜாதி மதம் இதை தாண்டி யோசிக்காமல் குறுகிய மனப்பான்மையில் இருப்பது தான் வேடிக்கை..

ஒரு பதவிக்கு தேர்ந்தெடுத்த பிறகு அவரை பற்றி விமர்சிப்பது தரம் தாழ்ந்த செயல்.. இதற்கு ஒரு முடிவுக்கு கட்ட வேண்டும்..

ஜனாதிபதி தேர்வுக்கு திரௌபதி முர்மு தேர்ந்தெடுக்கப்படுவதாக உறுதியான பிறகு சொல்லிய பிறகு தான் அந்த கிராமத்திற்கு மின்சார வசதி அவசரமாக அவசரமாக செய்ததையும் இங்கே நாம் நினைவுக் கூர வேண்டும்..நமது நாட்டில் அரசியல்வாதிகள் தமது அரசியல் சித்து விளையாட்டுக்கு எவரையேனும் பகடையாக்கி விட்டு குளிர் காய்வதை நிறுத்த வேண்டும்..

இங்கே பழங்குடியினர்கள் நாட்டின் பல பகுதிகளில் மிகவும் மோசமான நிலையில் உணவுக்கு கூட வழி இல்லாமல் அடிப்படை வசதி கூட இல்லாமல் அவதிப்படுவது இந்த நாட்டில் இருக்கும் அரசியல்வாதிகளுக்கு தெரியவில்லை போலும்.. தாம் நிறுத்தும் வேட்பாளரை அரசியல் பாகுபாடு இல்லாமல் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அகங்காரம் மட்டும் தான் தெரிகிறது.. ஒவ்வொரு முறையும் குடியரசு தலைவரை நிறுத்தும் போதும்.. அரசியல் ராஜதந்திர வேலைகளை கட்சி பாகுபாடு இல்லாமல் செய்துக் கொண்டு தான் இருக்கிறார்கள் நமது தேசத்தின் அரசியல்வாதிகள்.. அவர் நாட்டின் முதல் குடிமகன்.. அவரின் மேல் உங்கள் காழ்ப்புணர்ச்சி மை தயவுசெய்து செய்து காட்டாதீர்கள்...அவரை அவமதிக்கும் வேலையை இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள்....

#தலையங்கம்.

#இளையவேணிகிருஷ்ணா.



அமாவாசை இரவு ...


இந்த அமாவாசை இரவு

ஓர் வரம் 

பால்வெளியில் உலாவும்

நட்சத்திரங்களுக்கு...

#இளையவேணிகிருஷ்ணா.


நானும் என் கனவும்


அத்தனை கனவுகளையும்

வண்ணமயமாக சுமந்து 

திரிகிறேன்...

வெட்டவெளியோ 

இங்கே பரந்து விரிந்து

கிடக்க

ஏதோவொரு விதத்தில்

என் கனவுகளை கலைத்து விட

துடித்து இழுக்கிறது

ஒரு கை அங்கே...

நானும் என் கனவும்

சேர்ந்தே போராடுகிறோம்...

எங்களை விடுவித்து கொண்டு

அந்த வெட்டவெளியில் கலக்க..

அந்த கைகளோடு போராடி

வென்று விட்ட இந்த நாள்

பொன்னாளாக...

எனக்கும் என்னை நேசித்த

அந்த கனவுக்கும்....

#இளையவேணிகிருஷ்ணா.







கிருஷ்ணா இணையதள வானொலி

 நேயர்களே வணக்கம் 🙏🎻🙏

இன்று இரவு ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஓர் பயணம் நிகழ்ச்சியில் மகாபாரதம் நெடுந்தொடர் கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் நேயர்களே 🙏🎻🙏

https://zeno.fm/radio/krishna-fma76ufetpuy8uv/

பேரானந்தம் எனும் 🔥


 அங்கே எனது இறப்பை

எண்ணி ஏராளமானவர்கள்

கண்ணீர் விடுவதை பார்த்து

எனது ஆன்மா சிரிக்கிறது...

அவர்கள் விடும் கண்ணீரில்

எனது பேரானந்தம் எனும்

பெரும் தீ

அணைந்து விடுமா என்று ...

#இளையவேணிகிருஷ்ணா.

சமுத்திரத்தில் உதித்தவள்..

 


ஆழ்கடலில் பேரமைதியை

புதைத்து வைத்திருக்கும்

 சமுத்திரத்தில்

நான் உதித்தேன்...

இந்த பிரபஞ்சத்தின் சலசலப்பு

எனது ஆழ்ந்த அமைதியை

 அசைத்து விடவா

முடியும்?

இங்கே எனக்கான சலசலப்பெனும்

தீயில் குளிர் காய 

ஒரு கூட்டம் காத்திருந்து

ஏமாற்றத்தை பரிசாக பெற்று

செல்கிறது...

நான் அந்த இறைவியின் அம்சமென

இங்கே எவருக்கும்

சொல்லி விடாதீர்கள்...

#இளையவேணிகிருஷ்ணா.

தேஜஸின் பேரொளி நான்


 அங்கே என்னை

பார்த்ததும்

மரியாதை குறைவாக

நடத்த மணிக்கணக்கில்

கூட்டம் போட்டு முடிவெடுத்தார்கள்..

என் வருகைக்காக காத்திருந்தார்கள்

பேரமைதி அங்கே நிலவியது

ஒரு சில கணங்கள்...

திடீரென அங்கே நான்

அடியெடுத்து வைத்தேன்...

இத்தனை நேரம்

என்னை அவமானப்படுத்த

திட்டம் திட்டியவர்கள் உட்பட

அனைவரும் தன்னையும் அறியாமல்

எழுந்து நின்றார்கள்..

எனது தேஜஸை பார்த்து

மிரண்டு...

#இளையவேணிகிருஷ்ணா.

புதன், 27 ஜூலை, 2022

இந்த இரவு இனிமையானது


 இந்த இரவு

இனிமையானது;

என்னை எவரும் கண்டுக் கொள்ள

மாட்டார்கள்;

நானும் இரவும் பகல் முழுவதும்

தவமிருந்து நாங்கள் பெற்ற

வரமிது...

அந்த தேநீர் கோப்பையோடு

நானும் இந்த இரவும்

சலிக்காமல் பேசி தீர்க்கிறோம்..

தேநீர் தீர்ந்தவுடன்

இருளை அள்ளி பருகுகிறோம்..

இங்கே எல்லாவிதமான

பேச்சுக்களையும் பேசி

தீர்க்கும் போதே 

கீழ்வானம் மெல்ல மெல்ல

வெளுக்கிறது..

மீண்டும் அடுத்த இரவிற்கான

தவத்தை செய்ய நாங்கள் இருவரும்

பிரிய மனமில்லாமல் விடை

கொடுத்துக் கொண்டோம்..

#இளையவேணிகிருஷ்ணா.

செவ்வாய், 26 ஜூலை, 2022

ஆழ்ந்த அமைதியில் அடைக்கலம்

வாழ்வின் பேரமைதி

ஏதோவொன்று

எனக்கு 

உணர்த்திய நேரத்தில் 

நான் எந்தவித இடையூறும் 

இல்லாமல் 

அதை சத்தம் இல்லாமல் 

ரசித்து கிடக்கிறேன்...

இங்கே ஆர்ப்பாட்டம்

அடங்கிய பின் தான்

வாழ்வின் சூட்சமம் புரிகிறது

அந்த சலனமற்ற நிலையில்

நான் நானாக முழுவதும்

உணர்ந்து ஆழ்ந்த

அமைதியில் முழுமையாக

அடைக்கலமாகிறேன் ...

#இளையவேணிகிருஷ்ணா.






 

ஆர்ப்பாட்டம் இல்லாமல்

 

வாழ்வின் துயரங்கள் 

உள்ளும் புறமும்

 சுடுவதாக

அங்கே பலபேர்

கதறிக் கொண்டு இருக்க

இங்கே நானோ

அந்த தாக்கத்தை

உள்வாங்காமல் 

அந்த துயரத்தின் முதுகிலேயே குழலூதி 

ஊர்வலம் போகிறேன்

எந்தவித ஆர்ப்பாட்டமும்

இல்லாமல்...

#இளையவேணிகிருஷ்ணா.

ஆறுதல் நொடிகள்...

 

நான் உனக்கு

சொல்ல நினைத்த

ஆறுதல் நொடிகள்

இறந்துக் கொண்டே

வருகிறது..

நானோ இன்னும் 

உனக்கு நம்பிக்கை மொழி

சொல்லிக் கொண்டே

இருக்கிறேன்..

இறந்துக் கொண்டே

இருக்கும் காலத்தை 

கண்டுக்கொள்ளாமல்..

இன்னும் நம்பிக்கையோடு..

#இளையவேணிகிருஷ்ணா.




வாழ்வியல்

 


ஞாயிறு, 24 ஜூலை, 2022

நழுவுகின்ற நேரம்...

 

நழுவி கின்ற நேரத்தில்

விடாப்பிடியாக என்னை 

புதைத்துக் கொள்ள

விரும்புகிறேன்...

நேரமோ

என்னை

அணைக்கவும் முடியாமல் 

தவிர்க்கவும் முடியாமல் 

தடுமாறி செல்கிறது...

#இளையவேணிகிருஷ்ணா.



ஒரு கோப்பை தேநீர்

 


வாழ்வில் வறட்சி
நேரும் போதெல்லாம்
ஒரு கோப்பை தேநீர்
என்னை மீண்டும்
புதுப்பித்து விடுகிறது..
நான் மீண்டும் உற்சாகமாக
ஓடி களிக்கிறேன்...
இந்த பிரபஞ்சவெளியில்
#இளையவேணிகிருஷ்ணா.

வெள்ளி, 22 ஜூலை, 2022

கிருஷ்ணா இணையதள வானொலி

 நேயர்களே வணக்கம் 🙏🎻🙏

இன்று இரவு ஒன்பது(9:00pmto10:00pm) மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஓர் பயணம் நிகழ்ச்சியில் மகாபாரதம் நெடுந்தொடர் கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் நேயர்களே 🙏🎻🙏

வாழ்வியல் பற்றிய அரிய தத்துவம் அடங்கிய பொக்கிஷம் இது என்று சொன்னால் மிகையல்ல..

https://zeno.fm/radio/krishna-fma76ufetpuy8uv/

புதன், 20 ஜூலை, 2022

இசை வனம் இணையதள வானொலி

 நேயர்களே வணக்கம் 🙏🎻🙏

இன்று இரவு பத்து மணிக்கு உங்கள் இசை வனம் இணையதள வானொலியில் இரவு சாகரம் நிகழ்ச்சியில் படைப்பாளி கண்ணன் அவர்களின் கவிதை தொகுப்பு கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் நேயர்களே 🙏🎻🙏

https://isaivanam.com/

கிருஷ்ணா இணையதள வானொலி

 நேயர்களே வணக்கம் 🙏🎻🙏

இன்று இரவு ஒன்பது(9:00pmto10:00pm) மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஓர் பயணம் நிகழ்ச்சியில் மகாபாரதம் நெடுந்தொடர் கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் நேயர்களே 🙏🎻🙏

வாழ்வியல் பற்றிய அரிய தத்துவம் அடங்கிய பொக்கிஷம் இது என்று சொன்னால் மிகையல்ல..

https://zeno.fm/radio/krishna-fma76ufetpuy8uv/

செவ்வாய், 19 ஜூலை, 2022

கிருஷ்ணா இணையதள வானொலி

 நேயர்களே வணக்கம் 🙏🎻🙏

இன்று இரவு ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஓர் பயணம் நிகழ்ச்சியில் மகாபாரதம் நெடுந்தொடர் கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் நேயர்களே 🙏🎻🙏.

https://zeno.fm/radio/krishna-fma76ufetpuy8uv/

இசை வனம் வானொலி

 இன்று இரவு பத்து மணிக்கு உங்கள் இசை வனம் இணையதள வானொலியில் இரவு சாகரம் நிகழ்ச்சியில் படைப்பாளி கவிஞர் கண்ணன் அவர்களின் கவிதை தொகுப்பு கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் நேயர்களே 🙏🎻🙏

https://isaivanam.com/

பெரும் போரின் உக்கிரத்தை தணித்து...

 நீயோ குருட்டு பிடிவாதத்தால் எவரின் தூண்டுதலாலோ விலகி விலகி பயணிக்கிறாய்  என்னிடம் இருந்து... அந்த உக்ரைனை போல... நானோ உன்னை  என் பேரன்பின் ...