இதோ புதிய விடியலை
வரவேற்கிறது
என் வீட்டில் நீ விஷேசமாக
கொடுத்து
நான் வைத்த
ரோஜா பூ செடியில்
பூத்த
அந்த சிகப்பு ரோஜா...
நீ அன்றொரு நாள்
என் பிறந்தநாள் பரிசாக
கொடுத்த அந்த செடியில்
எத்தனையோ மலர்கள்
பூத்துக் குலுங்கி
என் புழக்கடையை
வெகுநாட்களாக
அலங்கரித்து
என் மனதை
குளிர்வித்த போதும்
இன்று மலர்ந்த
அந்த சிகப்பு ரோஜா
உன் நினைவை தந்து
அந்த மலரில் உள்ள முள்
என் மனதை குத்தி கிழிக்கிறது...
இதோ இதே நாளில் தான்
நீ இந்த ரோஜா பூ செடியை
எனக்கு இன்முகத்துடன் பரிசளித்தாய்...
நீ என் மீது ஊடல் கொண்டு
விட்டு நீங்கி சென்ற
இந்த கால இடைவெளியில்
அந்த செடியில் பூத்து உதிர்ந்த
மலர்களின் இதழ்களை
சேகரித்து வைத்து இருக்கிறேன்
உன் நினைவாக...
இதோ இன்று அந்த மலரின்
பனித் துளி படர்ந்த இதழ்கள்
காய்ந்து சருகாகி மண்ணில்
உதிர்ந்து உரமாகும் முன்
இன்றேனும்
நீ என்னை காண வந்து
வாழ்த்து செய்தியை
பகிரும் போது
உன் கூந்தலை
இந்த சிகப்பு ரோஜா
அலங்கரிப்பதற்காக
ஏங்கி தவிக்கும்
என் பெரும் காதலின்
சுவையை நீ அறிய
சிறிதேனும்
முயற்சி செய்ய மாட்டாயா
என் ஆருயிரே...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:08/02/26.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக