ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

ஞாயிறு, 5 மார்ச், 2023

வாழ்வெனும் நெரிசல்

 

வாழ்வெனும் நெரிசலில்

அகப்பட்டு நசுங்குகிறேன்...

அந்த நசுங்கலில் பிறந்த

துன்பத்தை இனிப்பெனும் 

சுவையாக நினைக்க

இங்கே எனக்கு 

அறிவுறுத்தப்படுகிறது எனக்கு..

கொஞ்சம் இதழோரம் 

வலுக்கட்டாயமாக சிரிப்பை 

வரவழைத்து பயணிக்கும் எனக்கு 

கொஞ்சம் ஆறுதலாக

என் அருகில் வந்து

ஆசுவாசப்படுத்திக் கொள்ள

இங்கே எதை தேடுவது என்பதில்

என் நெரிசல் எனும் நசுங்குதல் 

கொஞ்சம் நகர்ந்து போகிறது...

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாலையோர புழுதியில் நனைந்த ஓவியம்...

 அந்த பிரமாண்டமான வீட்டில்  வாழ்ந்து கொண்டு  இருப்பவர் சில நாட்களில்  உற்சாகம் இழந்து  அவர் தாம் பார்த்து பார்த்து கட்டிய  அந்த வீட்டில்  உள...