ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

திங்கள், 20 மார்ச், 2023

அந்த கணம் நழுவி செல்கிறது...


அந்த கணம் நழுவி செல்கிறது...

நான் சேர்த்து வைத்த

ஆனந்தமும் அதனோடு

சத்தம் இல்லாமல்

பயணிக்கிறது...

இவை அத்தனையையும்

நான் சிறு சலனம் இல்லாமல் ரசித்து

முடித்த போது

என் கையில் உள்ள

கோப்பையில் கடைசி சொட்டு தேநீர்

ஆறுதலாக

என் உதட்டில் ஒட்டிக் கொண்டது..

அந்த சுவையை

ஏனோ ஒதுக்க முடியாமல்

என்னோடு பயணிக்க 

அனுமதித்தேன்...

அதுவும் ஆறுதல் தேடி இருக்கலாம் 

என்னிடம்

எவர் அறிய முடியும்??

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சங்க இலக்கியம்//நற்றிணை பாடல் (5)

  நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப, அகல் வாய்ப் பைஞ் சுனைப் பயிர்  கால்யாப்ப, குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர் நறுங் காழ் ஆரம் சுற்றுவன அகை...