ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

ஞாயிறு, 5 மார்ச், 2023

மனோவலிமை

 

ஏ எதிரியே!

நரசிம்மரின்

கர்ஜனையை

கண்டால்

காததூரம்

ஓடிவிடும் நீ

என்னிடம் மோத

என்ன தைரியம்?

என் பிடரி சிலிர்ப்பில்

உன்னை

சுற்றி அடித்து

அதில் சுகம்

காணும் என்னிடமே!

உன் விளையாட்டா?

நீ என்னை எதிர்க்க

கூட்டத்தோடு வா

நான் என்றுமே

ஏகாந்தத்தில்!

எளிமை கண்டு

எகிறினால்

ஏறிமிதித்து

நசுக்கி விடுவேன்!

நேர்த்தியாக!

என் வீரத்திற்கு

முன்னால்

உன் வீரம்

வீழ்ந்து

வணங்கி போகும்

என் காலடியை!

மோதுவதற்கு

தகுதியை வளர்த்து வா!

பிடறிமயிர் சிலிர்க்க

காத்து நிற்கிறேன்

களத்தில்

உன் வீரத்தை காண!🦁🦁🦁✍️இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சங்க இலக்கியம்//நற்றிணை பாடல் (5)

  நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப, அகல் வாய்ப் பைஞ் சுனைப் பயிர்  கால்யாப்ப, குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர் நறுங் காழ் ஆரம் சுற்றுவன அகை...