ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

புதன், 8 மார்ச், 2023

அது என் வீடு அல்ல...


அந்த பாழடைந்த 

என் வீட்டின் கதவை 

திடீரென திறந்த போது 

கிறீச்சிட்ட சத்தத்தை

கேட்டு ஓடுகிறது ...

இங்கும் அங்குமாக

அந்த எலிகள்...

ஓட்டின் வழியே

ஊடுருவி வரும் வெளிச்சத்தில் 

நிழலாடும்

அந்த துகள்களும்

அந்த வீட்டின் உரிமையாளர்

நானும் கூட என்று

சொல்லாமல் சொல்கிறது...

இந்த நிகழ்வில் நான்

எனது கண்களில் வழியும்

கண்ணீருக்கு மட்டும்

என்ன பெயர் வைக்கலாம் என்று 

யோசித்து

விடை கிடைக்காமல்

சோர்வோடு

மிகவும் மெதுவாக 

அந்த கதவை மூடி விட்டு

சாலையில் பயணிக்கிறேன்

அது என் வீடு அல்ல என்று

உறுதியாக நம்பும்படி

எனது மனதிற்கு

சொல்லிக் கொண்டு...

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சங்க இலக்கியம்//நற்றிணை பாடல் (5)

  நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப, அகல் வாய்ப் பைஞ் சுனைப் பயிர்  கால்யாப்ப, குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர் நறுங் காழ் ஆரம் சுற்றுவன அகை...