ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வியாழன், 16 மார்ச், 2023

மனக்குதிரை..

 


ஓ மேக குதிரையே

உன்னை போல

என் மனகுதிரையும்

குதிக்கிறது

அது குதித்து குதித்து

படுகுப்புற குழியில்

விழுவதற்கு முன்னால்

தடுக்க எனக்கு

திராணி இல்லை

திமிரும் அதன்

குணத்தை

கடிந்து அடக்கியும்

அது அடங்க

மறுக்கிறது

வெறுத்துப்போய்

அதை அப்படியே

விட்டால்

அக்கம்பக்கம்

இருப்பவர்கள்

என்னை அழவைக்கிறார்கள்

ஏ மனக்குதிரையே

நீ செய்யும்

சேட்டைக்கு

நான் ஏன்

தண்டனை அனுபவிக்க

வேண்டும்

தடுமாறாமல்

நீ என்னுடன் வந்தால்

தடம் மாறாமல்

உன்னை அழைத்துச்

செல்வேன் நல்வழிக்கு

அடங்காமல் நீ

அலைந்தால்

ஊரில் அடி

வாங்கியே சாவாய்

எது வேண்டும் என்று

நீ முடிவெடுத்துக்கொள்

என் அகங்கார

மனகக்குதிரையே...

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சங்க இலக்கியம்//நற்றிணை பாடல் (5)

  நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப, அகல் வாய்ப் பைஞ் சுனைப் பயிர்  கால்யாப்ப, குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர் நறுங் காழ் ஆரம் சுற்றுவன அகை...