ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

செவ்வாய், 28 மார்ச், 2023

பிரபஞ்சத்தின் ஆறுதல்..

 

ஆயிரம் விசயங்கள்

என்னோடு பயணிக்கிறது...

ஆயிரம் விசயங்கள்

எனக்கு புன்னகையோடு

விடை கொடுக்கிறது...

என்னோடு 

பயணிக்கும் விசயத்தில் 

நான் ஒட்டாமல் 

கொஞ்சம் தள்ளியே 

பயணிக்கிறேன்....

விடை பெறும் விசயங்களுக்கு கூட

மிகவும் நிதானமாக ஒரு கபடமற்ற 

புன்னகையோடே

கையசைத்து விடை கொடுக்கிறேன்...

காலம் கொஞ்சம் எனை 

சீண்டி பார்க்கிறது..

நீயென்ன அவ்வளவு

பெரிய ஞானியா என்று

சற்றே கோபத்துடனே...

அதன் கோபத்தை கூட

ஒரு புன்னகையோடு 

கடக்கிறேன் 

ஒரு தலையசைப்போடே...

இங்கே எதை பற்றியும் 

கவலைப்படாமல் பயணிப்பது 

ஒரு குற்றமா என்று 

என்னை இயக்கும்

பிரபஞ்சத்திடம் மெதுவாக

கிசுகிசுத்து கேள்வி கேட்கிறேன்...

இல்லை என்று பேரன்போடு 

அது தந்த பதிலில்

நான் கொஞ்சம் 

ஆசுவாசப்படுத்திக் கொள்கிறேன்...

இல்லை இல்லை

இளைப்பாறிக் கொள்கிறேன்...

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாலையோர புழுதியில் நனைந்த ஓவியம்...

 அந்த பிரமாண்டமான வீட்டில்  வாழ்ந்து கொண்டு  இருப்பவர் சில நாட்களில்  உற்சாகம் இழந்து  அவர் தாம் பார்த்து பார்த்து கட்டிய  அந்த வீட்டில்  உள...