ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வியாழன், 23 மார்ச், 2023

எனக்குள் இருக்கும் அந்தரியாமி பாவம்

 

முடிவற்ற தேடலில்

தொலைந்து போகிறேன்...

தொலைதல் இங்கே

துன்பமானதில்லை...

எனக்கு!

எனைத் தேடி அலையும்

எனக்குள் இருக்கும் 

அந்தரியாமிக்கு தான் 

துன்பம்!

எனை தேடி அலைந்து

சோர்வுற்று களைத்த போது

பருக கொஞ்சம் தண்ணீர் தர

யாருமில்லாமல்

தவிக்கும் தவிப்பு

இங்கே எவர் அறியக் கூடும்?

#ஆத்மஞானம்.

#இளையவேணிகிருஷ்ணா.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சங்க இலக்கியம்//நற்றிணை பாடல் (5)

  நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப, அகல் வாய்ப் பைஞ் சுனைப் பயிர்  கால்யாப்ப, குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர் நறுங் காழ் ஆரம் சுற்றுவன அகை...