ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வியாழன், 16 மார்ச், 2023

எதை தருவாய்...


 என் அன்பே

உன் விழிகளில்

வழிவது

கண்ணீர் என்று

நினைத்தால்

அது பிழை

எனக்கு மட்டும்தான்

தெரியும்

அது கண்ணீர்

அல்ல காதலென்று

உன் காதலை

கண்ணீரில்

கரைத்து விட்டால்

எனக்கு

எதை தருவாய்

அன்பே

காதலின் வலி

என்னவென்று

உன் கண்ணீர்

சொல்கிறது

என் காதலின்

வலியை

எதன் மூலம்

கரைப்பேன் நான்

உன் கண்ணீரை

துடைப்பதற்கு

என் கைகளை

அனுமதிப்பாயா

நம் காதலின்

உணர்வுகளை

இதயத்தால்

இணைந்து கரைப்போம்

என் அன்பே...

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இத்தனை வன்மமும் எதற்காக??

    என் மீதான  காதல் உணர்வுகளில்  ஒரு வித மையல் கொண்டு என்னை நெருங்காதே... உன் மீதான  என் பெரும் காதலின்  அலையில் நீ அடித்து  சென்று நடுக் க...