ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

செவ்வாய், 21 மார்ச், 2023

மழை இரவு..

 


மழைச் சாரலோடு

இதமான குளிர் காற்று வருட...

கொஞ்சம் கூட இதயம் இல்லாமல் 

அந்த மின்னல் கீற்று எனை

வீட்டின் உள்ளே துரத்த முயல..

நான் வீட்டின் முற்றத்தில்

அந்த மின்னலின் மிரட்டலை

கண்டுக் கொள்ளாமல்

மழையை ரசித்துக் கொண்டு

இந்த இரவை நொடி நொடியாக 

அனுபவிக்கிறேன்...

இங்கே கிடைத்தற்கரிய விசயங்கள் 

எப்போது வேண்டுமானாலும் 

நடக்கலாம்..

தயாராக இருங்கள்...

#மழைஇரவு..

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சங்க இலக்கியம்//நற்றிணை பாடல் (5)

  நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப, அகல் வாய்ப் பைஞ் சுனைப் பயிர்  கால்யாப்ப, குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர் நறுங் காழ் ஆரம் சுற்றுவன அகை...