ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

செவ்வாய், 21 மார்ச், 2023

இரவெனும் கோப்பையில்...


மழைக்கு ஒரு சூடான தேநீர் 

தயாரிக்க வேண்டும் 

என்கிறார்கள் 

அங்கே சிலர்...

நானோ இரவெனும் கோப்பையில் 

மழை எனும் தேநீரை 

பருகிக் கொண்டே

அவர்களிடம் சில கோப்பைகளை தருகிறேன்..

அவர்களோ இதை எப்படி

பருகுவது குளிர்ந்து இருக்குமே 

என்கிறார்கள்..

நான் ஒன்றும் சொல்லாமல்

அவர்களை விட்டு விலகி

அந்த கோப்பை தேநீர் 

ஒவ்வொன்றாக பருகி

முடிக்கும் போது

மழையும் நின்றது...

என் கோப்பையில் உள்ள 

தேநீரும் தீர்ந்தது...

#மழைக்கவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இன்றைய தலையங்கம்: யார் குற்றவாளிகள்?

  #இன்றையதலையங்கம்: #குற்றம் செய்தவர் யார்? கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமா...