நமது வாழ்க்கை பயணம் நெடுந்தூரமானது.இதில் நாம் ஒரு தவறை செய்கிறோம்.எதுவமே எந்த உறவுகளுமே கூட வராது என்று தெரிந்தும் தேவையில்லாத சுமைகளாக அவர்களை சுமந்து திரிகிறோம்.நான் சொல்வதை நீங்கள் கவனமாக புரிந்துக்கொள்ள வேண்டும். கணவன் மனைவி இருவரும் பிள்ளைகளுக்கான கடமைகளை செய்து விட்டீர்கள் என்றால் அவர்களை விட்டு விலகி சென்று விடுங்கள். உங்கள் மரியாதையை காப்பாற்றிக்கொள்ளுங்கள்.அந்த காலத்தில் வானபிரஸ்தம் என்று ஒன்று இருந்தது. அதாவது பிள்ளைகளிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு இறைவனை தேடி ஆன்மாவை உணர காடுமலைகளுக்கு சென்றார்கள்.இன்று அப்படியா?இறுதி மூச்சு வரை சம்சார பந்தத்தில் சிக்கி சீரழிகிறார்கள்.குடும்பத்தில் பலபெரியவர்கள் பிள்ளைகளை நம்புவதே இல்லை. இதனால் பல பிள்ளைகள் வாழ தெரியாமலே வாழ்ந்து விட்டு போகிறார்கள்.அன்பான பெரியோர்களே உங்களுக்கு பின் அவர்கள் வாழ்க்கை எப்படி வாழ்வார்கள். பொறுப்பை நீங்கள் சிறிது சிறிதாக துறந்து அவர்களிடம் ஒப்படைத்து நம்பிக்கை ஒளியை ஏற்றி நீங்களும் ஆனந்தமாக வாழ்ந்து அவர்ஙளையும் ஆனந்தமாக வாழ விடுங்கள்.
#இளையவேணிகிருஷ்ணா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக