ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

சனி, 4 மார்ச், 2023

மன நிர்வாணம் பழகு...

 




நீயோ ஆடையின்றி

வெளியே வர தவிக்கிறாய்!

கூச்சம் உன்னை தின்ன

ஏதோவொரு மறைவிடம்

கிடைத்தால் போதும்

என்று அமர்ந்து விட்டாய்!

அடிக்கடி எவரும்

வருகிறார்களா என

உனது கண்கள் அலைபாய்ந்ததை

என்னால் தூரத்தில் இருந்து

உணரமுடிந்தது உன்நிலையை!

உலகில் பலபேர் தனது மோசமான

செய்கைகளுக்கு சப்பைக்கட்டு

கட்டி வெட்கம் இல்லாமல்

அலைந்து திரிந்திருக்க!

எதற்காக வெட்கப்பட்டு

தலைகுனிந்து நீ மறைவிடத்தில்

இருக்கிறாயோ நான் அறியேன்!

நிர்வாணம் என்பது

வெட்கப்பட வேண்டிய

விசயமா ?

சமூகத்தில் நடக்கும் அவலங்களை

பார்க்கும் போது!

மனநிர்வாணம் பழகிக்கொண்டால்

எந்த நிர்வாணமும் யாரையும்

பாதிப்பது இல்லை

வேதவியாசரின் மகனைபோல!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சங்க இலக்கியம்//நற்றிணை பாடல் (5)

  நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப, அகல் வாய்ப் பைஞ் சுனைப் பயிர்  கால்யாப்ப, குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர் நறுங் காழ் ஆரம் சுற்றுவன அகை...