ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

சனி, 7 அக்டோபர், 2023

தேநீர் விடுதியை அலங்கரிக்கும் உன் ஞாபகம்...

 


இதோ இந்த தேநீர் விடுதியில் 

அந்த மழைக் கால இரவொன்றில் 

ஒரு நீண்ட சிறு மௌனத்திற்கு 

பிறகு தான்

அன்று நீ உதிர்த்த வார்த்தைகள் 

என் வாழ்வின் சுவையை கூட்டியது...

இன்று உன் ஞாபகம் மட்டும்

இந்த தேநீர் விடுதியை

அலங்கரிக்கிறது

இதோ என் மேசையில்

இன்னும் இதமான கதகதப்பில் 

என் மீது பெரும் நேசங் கொண்ட 

தேநீர்

என் நிலையை நினைத்து

கலங்கியபடி...

நான் அதன் மணத்தில்

கொஞ்சம்

விழித்துக் கொள்கிறேன்...

ஏன் இதன் நேசம் கூட

உன் மீது நான் கொண்ட

நேசத்தை விட பல நூறு மடங்கு 

அதிகமாகி

என் நாவினை தீண்டி 

அரவணைத்துக் கொள்கிறது

பெரும் காதலோடு...

நான் விழித்துக் கொள்வதற்கு 

காரணம்

அந்த பெரும் காதலாக கூட

இருக்கலாம்...



#இரவுகவிதை.

நாள் 07/10/2023.

நேரம் இரவு 9:53.

#இசைச்சாரல்வானொலி.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நீள் இரவின் கொடுமை...

  நீ பிரிந்து சென்ற  ஒவ்வொரு நாளின்  இரவையும்  கடந்து செல்வது  அவ்வளவு எளிதல்ல  எனக்கு... அது நரகத்தின் வேதனையை  எனக்கு தந்து  அந்த காயத்தில...