ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வியாழன், 29 பிப்ரவரி, 2024

இரவின் ரசம் ...


 இரவின் நிழலில்

விளையாடும்

நிலாவொளியின்

சூட்சம அழகில்

இந்த பிரபஞ்சம்

தனித்துவம் பெறுகிறது...

கொஞ்சம் விழித்து பாருங்கள் 

தற்போது...

உங்கள் அழகை

எந்தவித தொந்தரவும் இல்லாமல் 

உங்கள் மேனியில் விளையாடும்

சந்திரனின் பேரழகில்

நீங்கள்

அமைதிக் கொள்வீர்கள்...

#இரவுகவிதை.

#சூழல்கவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 29/02/24.

புதன், 28 பிப்ரவரி, 2024

இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சி 🎻

 


நேயர்கள் அனைவருக்கும் இனிமையான வணக்கம் 🙏🎻🍁.

இன்று இரவு இந்திய நேரம் ஒன்பது மணி முப்பது நிமிடத்திற்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சி கேட்டு ரசிக்கலாம் நேயர்களே 🎻.

இன்றைய நிகழ்ச்சி எமது பள்ளி கால தோழமைகளுக்காக ஒலிபரப்பு செய்யப்படுகிறது ✨🎉🦋.

https://zeno.fm/radio/krishna-fma76ufetpuy8uv/

மேலேயுள்ள  லிங்கில் வானொலி ஒலிபரப்பு சேவை கேட்டு மகிழலாம் வாருங்கள் 🙏🤝✨.

செவ்வாய், 27 பிப்ரவரி, 2024

இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சி 🎻

 


நேயர்கள் அனைவருக்கும் இனிமையான வணக்கம் 🙏.

இன்று இரவு இந்திய நேரம் பத்து மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சி கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் நேயர்களே 🙏🎻✨.

இன்றைய படைப்பாளி திரு.#கலைமணி அவர்களின் இனிமையான காலத்தால் அழியாத பாடல்கள் கேட்டு மகிழலாம் வாருங்கள் நேயர்களே 🎻✨🎉🦋.


கீழேயுள்ள லிங்கில் வானொலி ஒலிபரப்பு சேவை கேட்டு மகிழலாம் 🎻.

https://zeno.fm/amp/radio/krishna-fma76ufetpuy8uv/

ஞாயிறு, 25 பிப்ரவரி, 2024

இரவு சிந்தனை ✨


 என்னடா வாழ்க்கை இது

என்று சலித்து புளித்து

ஆழ்ந்த உறக்கத்திற்காக

இந்த கோடைக் காலத்தில்

மொட்டை மாடியில் படுக்கை விரித்து

அப்படியே வானத்தை பார்த்தால்

அந்த நிலவொளி நமது வாழ்வின்

வெறுமையை போக்கி 

விடுவதில் தான்

வாழ்வின் மாயாஜாலம் புரிகிறது...

#இரவு சிந்தனை ✨.

இளையவேணி கிருஷ்ணா.

நாள் 25/02/24.

ஞாயிற்றுக்கிழமை.

வியாழன், 22 பிப்ரவரி, 2024

இரவு கவிதை 🍁

 


எவ்வளவோ வாழ்வில்

பயணித்து களைத்து விட்டேன் 

என்றேன்...

இதோ அங்கே இளைப்பாற

ஓரிரு மரங்கள் இருக்கிறது

என்று காலம் என்னை பார்த்து

புன்னகைத்து கடக்கிறது...

ஆறுதலை தேடி காலம்

அலைவதே இல்லை...

நாமோ எவரோயொருவர்

ஆறுதலுக்காக யுகம் யுகமாக

காத்திருந்து கருவறை புகுகிறோம்

மீண்டும் மீண்டும்...

#இரவு சிந்தனை ✨

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 22/02/24.

வியாழக்கிழமை.

ஞாயிறு, 18 பிப்ரவரி, 2024

அமைதி இழந்த நிம்மதி..

 


நிம்மதிகள் அமைதி இன்றி

அலைவதை எப்போதேனும்

நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா?

நான் பார்த்துக் கொண்டு தான்

இருக்கிறேன்...

ஒவ்வொரு நொடியும்

இங்கே எது எதற்காகவோ

ஓடிக் கொண்டே

நிம்மதியை தேடி அலையும்

மனிதர்களை பார்த்து...

அந்த நிம்மதி தனது இயல்பை

இழக்கிறது...

#இளையவேணிகிருஷ்ணா.

#இரவு கவிதை 🍁

நாள் 18/02/24.

ஞாயிற்றுக்கிழமை.

இரவு கவிதை 🍁

 

ஒவ்வொன்றுக்கும்
ஒவ்வொரு விலை இருப்பதாக
அங்கே ஏதோ 
முணுமுணுக்கிறார்கள் ...
இதை எதையும் கண்டுகொள்ளாமல்
காலம் அதன் போக்கில்
பயணிப்பதை பார்த்து
நானும் அந்த விலையை பற்றி
கண்டுக் கொள்ளாமல்
கொஞ்சம் சுவாரஸ்யமாக
எனக்கான தேடலோடு
பயணிக்கிறேன்..
#இரவு கவிதை 🍁
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 18/02/24.
ஞாயிற்றுக்கிழமை.

இரவு சிந்தனை ✨

 


நடப்பதெல்லாம் நாடகம்

என்பது தெளிவாக 

தெரிந்த பிறகு

ஆழ்ந்த பேரமைதி 

நமது உள்ளத்தை

ஆக்கிரமிக்கும்...

அது தான் நமது வாழ்வை

ஆகர்ஷண சக்தியாக்கும்...

#இளையவேணிகிருஷ்ணா.

இரவு சிந்தனை ✨

நாள் 18/02/24.

ஞாயிற்றுக்கிழமை.

செவ்வாய், 13 பிப்ரவரி, 2024

கழுதையும் நானும்


கழுதையும் நானும்:-

***************************

அங்கே எனதருகில் ஓர் கழுதை வெகுநேரமாக என்னையே பார்த்துக் கொண்டு இருந்தது.. நான் அது ஏதோ பார்க்கிறது.. போய் விடும் என்று நினைத்தேன்.. ஆனால் அது அங்கிருந்து அசையாமல் இன்னும் கொஞ்சம் நெருக்கமாக நின்று கொண்டு எனது முகத்தை பார்த்தது.. நான் அதற்கு பசியாக இருக்குமோ என்று நினைத்து ஏதேனும் சாப்பிடுகிறாயா என்று கேட்டேன்..அது இல்லை என்று தலையாட்டி விட்டு ..ஏதோ கேட்க தயங்கியது.. நான் சிரித்துக்கொண்டே எதுவாக இருந்தாலும் நீ என்னிடம் கேள்.. கண்டிப்பாக என்னால் முடியும் என்றால் உனக்கு உதவுகிறேன் என்றேன்..அது மெல்ல மெல்ல தனது தயக்கத்தை விட்டு விட்டு மிகவும் மெதுவாக உனது குரலை எனக்கு ஒரு நாள் மட்டும் தானமாக கொடுக்க முடியுமா என்று கேட்டது...


நான் அதை ஒரு பார்வை பார்த்தேன்..அது பயந்து விட்டது போலும்.. வேண்டாம் வேண்டாம்.. உனக்கு விருப்பம் இல்லை என்றால் என்றது வேக வேகமாக..

நான் சிரித்தபடியே இதுதானா.. இதற்கு ஏன் இந்த தயக்கம்.. என்று அதனிடம் எனது குரலை கொடுத்து விட்டு அதன் குரலை வாங்கி கொண்டேன்..

அந்த குரலை வைத்தே என்னோடு உரையாடியவர்களுடன் பேசினேன்..

அவர்கள் ஒவ்வொருவரும் என்னை பார்த்து மிகவும் நகைத்தார்கள்;பரிகசித்தார்கள்; என்னோடு மிகவும் நெருக்கமாக பயணித்தவர்கள் கூட அந்த நாளில் என்னை விட்டு சொல்லாமல் விலகி சென்று விட்டார்கள்..

அதேசமயத்தில் அந்த கழுதையின் பின்னால் தற்போது மிகவும் ஆச்சரியமாக அத்தனை பெரிய கூட்டம் சென்றது... எதையும் காதில் வாங்காமல் அந்த கழுதை எங்கே சென்றாலும் கண்மூடி தன்னை மறந்து பயணித்தார்கள்...

எனக்கு அந்த ஒரு நாள் முடிந்தபோது அவ்வளவு மன உளைச்சலை இங்கே என்னோடு பயணித்தவர்கள் எனக்கு ஏற்றி விட்டார்கள்..


அந்த கழுதை மிகவும் உற்சாகமாக வந்தது.. அந்த நாளின் முடிவில்.. என் வாழ்வில் இப்படி ஓர் ஆனந்தத்தை உணர்வேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை என்று சொல்லி எந்த சலனமும் இல்லாமல் எனது குரலை என்னிடம் கொடுத்தது...

நானோ அது கேட்பதற்கு முன்பாகவே அதன் குரலை அவசரம் அவசரமாக அதனிடம் ஒப்படைத்து விட்டு அதனிடம் கேட்டேன்.. ஏன் நீ எனது குரலை வைத்துக் கொள்ள எண்ணம் இல்லையா.. உன் பின்னாடி தான் அத்தனை பேர் சுற்றினார்களே.... ஏன் நீ கூட இப்போது எனது குரலால் ஆனந்தமாக இருப்பதாக தானே சொன்னாய் என்றேன் மிகவும் சுவாரஸ்யமாக அதன் பதிலை எதிர்பார்த்து..

அதற்கு அந்த கழுதையோ எப்போதும் இயல்பை விட்டு பயணிப்பது ஆபத்தாக தான் முடியும்.. அதனால் எனக்கு உன் குரல் வேண்டாம்..நீயே வைத்துக் கொள்.. இந்த ஒரு நாள் ஆனந்தம் எப்போதும் என் வாழ்வின் இறுதி வரை பயணிக்கும்..அது போதும் எனக்கு..என்றது..

அதன் பதிலில் ஆயிரம் வாழ்வியல் தத்துவத்தை உணர்ந்து நான் வாய் மூடி மௌனியானேன்...

திங்கள், 12 பிப்ரவரி, 2024

இரவு கவிதை 🍁


பெறுவதும் தருவதும்

இங்கே எல்லை இல்லாமல்

தொடர்கிறது...

இந்த நிகழ்வின் 

முடிவில்லா பயணத்தில்

ஏதோவொரு சலிப்பே 

மிஞ்சுகிறது என்று 

எண்ணும் போது

வாழ்வின் அர்த்தம் புரிகிறது...

#இரவு கவிதை 🍁

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 12/02/24.

திங்கட்கிழமை.

ஞாயிறு, 11 பிப்ரவரி, 2024

இரவு சிந்தனை ✨


எதுவாக இருந்தாலும்

பார்த்துக் கொள்ளலாம் என்கின்ற

தைரியத்தை தவிர

வேறெதுவும் என்னிடம்

சொத்தாக இல்லை...

#இரவுசிந்தனை🍁

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 11/02/24.

ஞாயிற்றுக்கிழமை.

சனி, 10 பிப்ரவரி, 2024

விருதுக்கு யார் ஆறுதல் சொல்வார்கள்?

 


தேர்தல் நெருங்குகிறது...

பல விருதுகள்

பல பேரை 

எதிர் பாராத விதமாக

திக்கு முக்காட வைக்கிறது...

விருதின் தீண்டலில்

நெருப்பென எவரோ ஒரு விருதை 

பெறுபவருக்கு சுடும் போது

விருது கை நழுவி போக

அங்கே உதவியாளர் ஓடோடி வந்து 

விருதின் மாண்பை காக்க...

விருது பெறுபவரோ சற்றே 

நடுநடுங்கி விருதை விட்டு

விலகி மேடையில் இருந்து

கீழே இறங்கும் போது

அந்த விருது ஏனோ மௌனமாக அழுது தொலைக்கிறது...

விருதை அறிவித்த அரசாங்கமோ 

அந்த விருதின் அழுகையும் 

அரசியல் ஆக்கி அதை 

அசிங்கப்படுத்தி

விடும் போது தான்

அந்த விருது நொறுங்கி போகிறது...

இங்கே அந்த விருதின் நிலைக்கு 

யார் ஆறுதல் சொல்லக் கூடும்????

#விருதின்நிலை.

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:10/02/24.

சனிக்கிழமை.

நேரம் முன்னிரவு 9:30.

வெள்ளி, 9 பிப்ரவரி, 2024

வரம் 🍁

 


மனதை கலங்கடிக்கும்

நிகழ்வுகள் மூச்சு திணறடிக்கும்

அளவுக்கு நிகழ்ந்துக் கொண்டே

இருக்கும் போது ஒரு கட்டத்தில்

உணர்வற்ற பொம்மையாகி போய் விடும்

வரம் கிடைத்தால் போதும்...

அதுவே எனக்கு வாழ்வின்

மிக அரிய பொக்கிஷமாக

பாதுகாத்து வைத்துக் கொள்வேன்

அது ஒரு குழந்தையின் கையில்

விளையாட்டு பொருளாக 

இருந்து விட்டு

போகட்டுமே என்று...

நாள்:10/02/24.

சனிக்கிழமை.

#இளையவேணிகிருஷ்ணா.

வியாழன், 8 பிப்ரவரி, 2024

இரவு கவிதை 🍁

 


ஒரு ஷணமும் நான்

என்னை நேசிப்பதை

நிறுத்தியதே இல்லை!

எனக்கு நான் எப்போதும்

ஒரு விலை மதிப்பற்ற

எதனோடும் ஒப்பிட முடியாத

பொக்கிஷம் தான் நான்!

இங்கே அந்த காதல் எனும் நதியில்

நானும் நானும் மட்டுமே

நீராடி மகிழ்ந்து திளைக்கிறோம்!

இங்கே எந்த காயமோ கீறலோ

எப்போதும் நேர்ந்திடாத போது

நான் ஏன் கவலைக் கொள்ள 

வேண்டும் வேறு எதை பற்றியும்?

#இரவு கவிதை 🍁

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 08/02/24.

வியாழக்கிழமை.

செவ்வாய், 6 பிப்ரவரி, 2024

காலம் எனும் வீணை

 


காலம் எனும் வீணை

எனை மீட்டிக் கொண்டே 

இருக்கிறது!

நானோ அதன் ஸ்பரிசத்தில் 

இந்த பிரபஞ்சத்தின் 

இசையில் லயித்து

என்னை கொஞ்சம் 

ஆசுவாசப்படுத்திக் கொள்கிறேன்!

#இரவுகவிதை🍁.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 06/02/24.

செவ்வாய்க்கிழமை

நேரம் முன்னிரவு 9:38.

இரவு கவிதை 🍁

 


நான் எதையும் பெரிதாக

நினைக்காமல்

இந்த நொடிப்பொழுதில்

கரைகிறேன்...

வாழ்வெனும் 

பெரும் சமுத்திரம்

என்னை கொஞ்சம்

ஆச்சரியமாக வேடிக்கை 

பார்க்கிறது...

இரவு கவிதை 🍁

நாள் 06/02/24.

செவ்வாய் கிழமை

#இளையவேணி கிருஷ்ணா

திங்கள், 5 பிப்ரவரி, 2024

இரவு கவிதை 🍁

 


கனிகள் முடிந்ததும்

பறவைகள்

பறந்து விடும் போதும்

மரங்கள் அநாதையாக

உணர்வதில்லை!

காற்றின் தாலாட்டில்

அந்த இலைகள்

அசைவதில்

கண் மூடி ஆனந்தித்து

அனுபவிக்கிறது...

இரவு கவிதை 🍁

நாள் 05/02/24.

திங்கட்கிழமை.

#இளையவேணிகிருஷ்ணா.

ஞாயிறு, 4 பிப்ரவரி, 2024

இரவு கவிதை 🍁

 


எல்லா சுக துக்கங்களையும்

இந்த இரவின் நிழலில்

இளைப்பாற வைத்து விட்டு

நான் கொஞ்சம் களைப்பாறுகிறேன்!

விடியலின் பயணத்தில்

நான் எழுப்பாமலேயே

என்னோடு பயணிக்க காத்திருக்கும்

அவைகளுக்கு விழிப்பு நிலை

எப்போதும் சாத்தியமே...

நான் தான் முதல் நாள் செய்த

அதீத பணிகளின் சோர்வில்

எழாமல் உறங்கி விடுவேன்...

#இரவு கவிதை 🍁

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 04/02/24.

ஞாயிற்றுக்கிழமை.

சனி, 3 பிப்ரவரி, 2024

இரவு கவிதை 🍁

 

போர் மேகங்கள் சூழும்

இடத்தில்

ஒரு சிறு செடி மட்டும்

எப்படியோ தனது இருப்பை

மிக நேர்த்தியாக வடிவமைத்து

தப்பித்து கொள்கிறது!

#இரவு கவிதை 🍁

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 03/02/24.

சனிக்கிழமை.

வெள்ளி, 2 பிப்ரவரி, 2024

இரவு சிந்தனை ✨

 


எல்லைக்கு அப்பாற்பட்ட

அந்த ஆத்ம சிந்தனைக்கு

இங்கே எந்த ஆதரவும் இல்லை

ஆனாலும் அதில் மூழ்கி

பெரும் நிம்மதி அடைகிறேன்...

#இரவு சிந்தனை ✨

#இளைய வேணி கிருஷ்ணா .

நாள் 02/02/24

வெள்ளிக்கிழமை.

வியாழன், 1 பிப்ரவரி, 2024

இரவு கவிதை 🍁

 


சில நினைவுகள்

நிழலாக நடமாடும் போது

நீ ஏன் ஒளி இழக்கிறாய்?

#இரவு கவிதை 🍁

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 01/02/24.

வியாழக்கிழமை 

இன்றைய தலையங்கம்

  இன்றைய தலையங்கம்:- யாரோ பிரிகிறார்கள் சேர்கிறார்கள்... ஏன் அவர்கள் தனிப்பட்ட வாழ்வில் பொது ஜனங்கள் தலையிட்டு ஏதேதோ கருத்து சொல்லி அவர்களை ...