ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

சனி, 30 மார்ச், 2024

இரவு கவிதை 🍁

 


அந்த ஆறுதலுக்கு

ஒரு துணை தேவை என்றதும்

நகர்ந்து கொண்டே இருக்கும்

காலம் கொஞ்சம் நின்று

அதற்கு தோள் கொடுத்தது...

எந்த விலையும் பேசப்படாமல்

ஒரு தோள் கிடைத்தது

இந்த காலத்தில்

ஆறுதலுக்கு ஒரே ஆச்சர்யம்...

கூடவே வந்த கண்ணீரை

அந்த காலத்தின் தோளை தவிர

உண்மையில் யார் அறியக் கூடும்?

இரவு கவிதை 🍁.

நாள் 30/03/24.

சனிக்கிழமை.

✍️இளைய வேணி கிருஷ்ணா

புதன், 27 மார்ச், 2024

காலை சிந்தனை 🍁🦋🎉

 வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே

அப்படி ஆகிவிட்டதே என்று

கவலைப்படாதீர்கள்!

வாழ்வின் அடுத்த தருணத்திற்கு

நாம் செல்கிறோம்...

இதில் வளர்ச்சியா தாழ்ச்சியா என்று

நினைப்பது மாபெரும் மாயை!

எந்த தருணம் நமக்கு கிடைக்கிறதோ

அதை அப்படியே உள்வாங்கி

ஆனந்தமாக உணர வேண்டும்

இது தான் வாழ்வின்

சுவாரஸ்யமான தருணத்தின்

ரகசியம் 🦋🍁🪂🦸🧚🚣.

காலை சிந்தனை ✨

நாள் :28/03/24.

வியாழக்கிழமை.

#இளை


யவேணிகிருஷ்ணா.

வியாழன், 21 மார்ச், 2024

வாழ்வியல் கவிதை 🍁🦋🎉

 


வாழ்வின் வர்ணங்கள்

கொஞ்சம் கொஞ்சமாக

சாயம் போக என்னிடம்

அனுமதி கேட்க தேவையில்லை என்று

எனக்கு தெரியும்...

நான் அந்த சாயத்தின் ஏதோவொரு

வண்ணத்தையேனும்

உடுத்தி விட வேண்டும் என்று

யோசித்து யோசித்து

ஒரு முடிவுக்கும் வராதபோது

பாவம் அந்த வண்ணமும்

என்ன செய்யும்?

என் இயலாமையை கண்டு

சிறு கண்ணீர் துளியோடு

விடை பெற்று செல்கிறது

மெது மெதுவாக...🍁

#இளையவேணிகிருஷ்ணா.

#வாழ்வியல் கவிதை 🍁

தேதி 22/03/24.

வெள்ளிக்கிழமை.

இன்றைய தலையங்கம்...

 



சங்கீத கலாநிதி விருது பெற இவருக்கு எல்லா வித தகுதியும் உள்ளது... வாழ்த்துக்கள் திரு டி.எம்.கிருஷ்ணா அவர்களுக்கு ✨🙏🎻.

இவர் நவீன #சமூக நீதி #காவலரும் கூட... சங்கீதம் ஏதோ ஒரு இனத்திற்கு மட்டுமே சொந்தம் என்பது போல அகங்கார போதை கொண்ட சில கூட்டங்கள் இவரை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்கிறது... இவரை இழிவு செய்பவர்கள் தான் தரம் தாழ்ந்தவர்கள்... எல்லோரும் இசை ஞானம் பெற வேண்டும் என்று ஒரு அபூர்வமான பிராமணர் நினைப்பது ஒரு குற்றம் என்று சொல்பவர்கள் இறந்த பிறகு பாரதி எங்கள் சமூகத்தை சேர்ந்தவர் என்றும் இராமானுஜர் எங்கள் சமூகத்தை சேர்ந்தவர் என்றும் கொண்டாடி தீர்ப்பவர்கள் இவரையும் அப்படி தான் கொண்டாடுவார்கள்... ஆனால் உண்மையில் இறைவனை உணர்ந்தவர்கள் எந்தவித பேதமும் கற்பிக்காமல் தான் தெரிந்து கொண்ட வித்தையை எல்லோரும் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று ஆத்மார்த்தமாக நினைப்பார்கள்... மீண்டும் ஒரு முறை அவரது சங்கீத பாண்டியத்திற்கு சமூக நீதி பார்வைக்கு நாம் அனைவரும் ஒரு சிரம் தாழ்த்தி வணக்கத்தை தெரிவித்துக் கொள்வோம் நேயர்களே 🙏🤝💐🎻.

#இன்றையதலையங்கம்.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:21/03/24.

வியாழக்கிழமை.

திங்கள், 18 மார்ச், 2024

இரவின் நிசப்தங்கள்...

 


இரவின் நிசப்தங்கள்

ஆயிரம் கேள்விகளால்

சூழப்படும் போது

எனக்கு ஆறுதல் ஓவியத்தின் 

கிறுக்கல்கள்..

அதில் என்னை தொலைப்பது...

இப்படி ...

தொடர்கதையாகிறது.

#எனதுஓவியம்.

#இரவுகவிதை🍁.

#இளையவேணிகிருஷ்ணா.

தேநீர் கவிதை 🍁

 


காற்றின் சுவையை

தேடி அலைகிறேன்...

என் மனமெனும் வாகனத்தில் 

கண்டம் விட்டு கண்டம் ...

என் கையில் இருக்கும் தேநீரோ

தன் அகங்காரம் கொன்று

அதன் சுவையை

நான் சுவைக்க என்னோடு போராடி

தீர்க்கிறது ஒரு சிறு துளி

அந்த எறும்பின் நகர்தலில்

என் மீது தெளித்து

என் நிலைமையை மீட்டெடுத்து...

#தேநீர் கவிதை 🍁

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 18/03/24.

நேரம் முன்னிரவு 9:20மணி.

இரவு கவிதை 🍁


என்னிடம் பாவமும் இல்லை!

புண்ணியமும் இல்லை!

நான் வாழ்வெனும் நதியில்

பயணிக்கும் போது

அகப்படும் நிகழ்வுகளை

அந்த நதியின் கரையில்

விட்டு நிச்சலனமாக 

பயணிக்கும் போது

தெளிந்த நீரின் சுவையை தவிர

வேறெதுவும் என்னோடு

நெருங்கி பயணிக்க முடியாமல்

அங்கே சில பல நிகழ்வுகள்

என்னை புறங்கூறி தன் மனதை 

ஆசுவாசப்படுத்திக் கொண்டு

கரையில் ஏங்கி விடை பெறுகிறது...

அதற்கு நான் என்ன செய்ய முடியும்???

#இரவு கவிதை 🍁

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 18/03/24.

திங்கட்கிழமை.

நேரம் முன்னிரவு 9:00மணி.

வெள்ளி, 15 மார்ச், 2024

கணக்கற்ற துயரத்தின் சதைகளா???


அந்த பிணந்திண்ணி கழுகின் 

பயணத்தில் எல்லாம் 

பிணங்கள் குவியல் 

குவியலாக காட்சி கொடுத்து

அந்த கழுகிற்கு பேரின்பத்தை 

கொடுத்தது...

ஒரு நாள் ஒரேயொரு பிணம்

திடீரென்று அந்த கழுகிடம்

தனது வாழ்நாளில் அனுபவித்த 

சொல்லொணா துன்பத்தை 

துயரத்தை சொல்லி அழுதது...

அந்த துயரத்தை உள் வாங்கிய கழுகு 

யோசித்தது...

இத்தனை நாள் நான் ஆனந்தமாக 

உண்டதெல்லாம் 

கணக்கற்ற துயரத்தின் 

சதைகளா என்று...

தற்போது தன் பசியை அடக்கி 

பறந்து செல்கிறது மேலே மேலே...

அங்கே ஏதோவொரு உலகம்

இந்த துயரத்தின் சாயல் படியாத 

பிணம் ஏதேனும் இருக்கும் 

என்கின்ற நம்பிக்கையோடு...

#காலைசிந்தனை.

#காலைகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 16/03/24.

சனிக்கிழமை.

நேரம் இளங்காலைப் பொழுது 6:00.

அந்த உணர்வற்ற பயணத்தில்...

 


ஒரு நாள் பொழுதை

தன் உணர்வற்ற பயணத்தில்

செலவழித்து...

கோடிக்கணக்கான மதிப்பில் 

சொத்துக்கள் சேர்த்து...

ஏதோவொரு கௌரவத்தை

உரிமையாக்கி போராடி...

வெற்றுத் தாள்களாக பூமியில் 

சோர்ந்து வீழும் போது 

எங்கோ இருந்து வந்த பெரும் காற்று

அந்த தாளாகிய என்னை 

அந்த நாற்றம் பிடித்த நீரோடையில் 

தள்ளும் போது

சுவாசிக்க திணறி

கதறி அழுவதை அங்கே நான்கு பேர் 

வேடிக்கை பார்த்து விட்டு 

நமட்டு சிரிப்பு

சிரித்து எனை கண்ணாற கண்டு 

ரசித்து விட்டு

கடந்து செல்லும் போது தான்

உணர்கிறேன்

வாழ்வின் ரசம் நிச்சயமாக 

இதுவல்ல என்று....

#காலைகவிதை🍁🎻✨.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 16/03/24.

சனிக்கிழமை.

அந்த வஸ்துவின் இறப்பில்...


அந்த எவரின் தேடலுமற்ற

இரவொன்றில்

மெழுகுவர்த்தியின் தீபத்தில்

தீயொன்று பற்ற வைத்து

அந்த வஸ்துவோடு காதல்

உறவாட எத்தனித்த போது

அந்த தேநீர் கோப்பையோ

எந்த பொறாமையும் இன்றி

அமைதி காத்து

என் ரசனையின் நிழலில்

இளைப்பாறி காத்திருந்தது...

அந்த வஸ்துவின் இறப்பின்

சுடும் துளிகளுக்கு பிறகு

அதனோடு காதல் உறவாட

நிச்சயமாக நான் வருவேன் என்று...

#இரவுகவிதை.

நாள் 15/03/24.

நேரம் முன்னிரவு 10:05.

#இளையவேணிகிருஷ்ணா.

இரவு கவிதை 🍁


அந்த ஏகாந்த வேளையின்

ஒவ்வொரு நொடியும்

என்னுள் பாகாய் உருகி

நதியென பெருக்கெடுத்து

ஓடும் போது

காலத்தையும் களிப்போடு

தன்னோடு இழுத்து 

செல்வதை அங்கே பலர்

வேடிக்கை பார்த்துக் கொண்டே 

ஆச்சரியமாக

கடந்து செல்கிறார்கள்...

#இரவுகவிதை.

நேரம்:9:55

நாள்:15/03/24.

#இசைச்சாரல்வானொலி.

கேட்பாரற்ற பொழுதுகள்...

 


அத்தனை மகிழ்ச்சியும் 

என் ஆராவாரமற்ற வாழ்வின் 

நகர்தலில் கண்டு மெய் மறந்து 

களிப்போடு 

கரையும் போது அங்கே 

கேட்பாரற்ற பொழுதுகளின் 

வெறுமையை 

எவரோ வசைப்பாடி 

நகர்வதை பார்த்து 

நான் பெருமூச்சோடு வாழ்க்கைக்கு 

ஆறுதல் சொல்லி 

அணைக்கிறேன்! 

#இளையவேணிகிருஷ்ணா.

வியாழன், 7 மார்ச், 2024

உறங்கும் முன் ஒரு சிந்தனை கதை 🍁

 


நேயர்கள் அனைவருக்கும் இனிமையான வணக்கம் 🎻 ✨ 🎻

அருமையான இரவு நேரத்தில் உங்கள் மனதிற்கு கொஞ்சம் இதமாக சின்ன சின்ன கதைகளை கேட்டு விட்டு உறங்குங்கள் நேயர்களே 🙏 🎻 ✨.

கீழேயுள்ள லிங்கில் கதையை கேட்கலாம்🙏https://youtu.be/KLsdnOd_TAE?feature=shared

நிச்சலனமான அந்த வேளையில்...

 


நிச்சலனமான அந்த நொடியில்

அந்த ஏகாந்த பறவையின்

ஒரு சிறு குரல் தான்

இந்த பிரபஞ்சத்தின் உயிர்ப்பை

எனக்கு மீட்டி தருகிறது!

எங்கோ தொலைந்து விட்டதாக

நினைத்தேன் என் நிம்மதியை...

நல்ல வேளை அப்படி எதுவும்

நடக்கவில்லை...

இதோ அந்த பறவையின் சிறகு

என்னை உரசி நான் அமர்ந்த

அந்த நிலத்தின் மரத்தடியில்

இளைப்பாறுகிறது

என்னை பார்த்து...

நானும் தான்...

#இளையவேணிகிருஷ்ணா.

இரவு கவிதை 🍁

நாள்:07/03/24.

வியாழக்கிழமை.

திங்கள், 4 மார்ச், 2024

அரசியல் ஜாம்பவான்...

 


இன்றைய தலையங்கம்:- ரொம்ப நாளைக்கு பிறகு முன்னாள் பீகார் முதல்வர் லல்லுவின் மேடை பேச்சு கேட்கிறேன்...லல்லு பிரசாத் யாதவ் ஒரு அரசியல் ஜாம்பவான்... அவரின் பேச்சு எப்போதும் சிலேடையாக மிகவும் ரசிக்கும் படியே இருக்கும்... ஏன் அவர் காங்கிரஸோடு கூட்டணி வைத்து போட்டி இட்ட தேர்தலில் மிகவும் மோசமான தோல்வியை சந்தித்த தருணத்தில் தேர்தல் முடிவுகள் பற்றி தொலைக்காட்சியில் பார்த்து கொண்டு இருக்கிறார் அந்த தேர்தலில் அவருக்கு மிகவும் மோசமான தோல்வியை கொடுத்தது.. தேர்தல் நடைபெற்ற வருடம் எனக்கு நினைவில்லை.. ஆனால் இந்த சம்பவம் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.. அவரது மகள் தொலைக்காட்சியில் தேர்தல் முடிவுகள் மோசமாக வருவதை பார்த்து மிகவும் சோகமாக இருப்பதை பார்த்து சிரித்துக் கொண்டே மகளிடம் கேட்கிறார்...அட இதற்கு போய் ஏன் இவ்வளவு சோகம்... மதியம் என்ன உணவு தயார் செய்ய போகிறாய் போ போ எனக்கு பசி வந்து விடும் என்று மிகவும் யதார்த்தமாக கடந்தவர்... எனக்கு எப்போதும் அவரின் எதற்கும் அவ்வளவாக அலட்டிக் கொள்ளாத தன்மை மற்றும் சிலேடை பேச்சு மிகவும் பிடிக்கும்...இதை படிக்கும் போது இங்கே சில பேர் மாட்டு தீவன ஊழலை பற்றி பின்னூட்டம் இடலாம்... ஆனால் தற்போது ஆட்சியில் இருக்கும் அரசாங்கம் மிகவும் நேர்மை வாதிகளா என்று கேட்கிறேன்... தைரியமாக சொல் நீ மனிதன் தானா மனிதன் தானா... என்கின்ற திரையிசை பாடல் தான் நினைவுக்கு வருகிறது... நிச்சயமாக இந்த வயதிலும் இவர் எவ்வளவு உற்சாகமாக மேடையில் பேசுகிறார்.. அரசியல் பழிவாங்கல் அத்தனை இருந்தும் தளராத மிக பெரிய ஜாம்பவான் லல்லு தான்...

அவருக்கு எனது ஆத்மார்த்தமான வணக்கங்கள் ✨🙏✨💐.

#இன்றையதலையங்கம்.

இளையவேணி கிருஷ்ணா.

#ஜாம்பவான்.

நாள் 04/03/24.

திங்கட்கிழமை.

இன்றைய தலையங்கம்

  இன்றைய தலையங்கம்:- யாரோ பிரிகிறார்கள் சேர்கிறார்கள்... ஏன் அவர்கள் தனிப்பட்ட வாழ்வில் பொது ஜனங்கள் தலையிட்டு ஏதேதோ கருத்து சொல்லி அவர்களை ...