வாழ்வெனும்
நெடும் பாதையில்
வஞ்சிக்கப்பட்ட
பலரோடும்...
உண்மையான
நேசத்தை கொட்டி
எதையும்
என்னிடம் எதிர்பாராமல்
பயணிக்கும்
பலரோடும்
தொடர்கிறது
நிழல் போல வாழ்க்கை...
அந்த பாதையின்
இரு பக்கத்திலும்
நன்மை தீமையெனும்
சிறகுகள் என்னை
சுமந்து செல்கிறது...
கடந்து செல்ல வேண்டிய
பாதையை மிகவும்
இலகுவாக....
சில சமயங்களில்
வாழ்வெனும் தோட்டத்தில்
மலர்ந்து மணம் வீசும்
சுகந்த மலர்களின்
நறுமணத்தை நுகர்ந்து
தென்றலாக
செல்கிறது...
பல சமயங்களில்
வழியில் சக மனிதர்கள்
நடத்தும் வேடிக்கை
நிகழ்வுகளை
மிகவும் நிதானமாக
ரசித்தபடியே கடந்து
செல்கிறது...
ஏதோ பிறந்து வளர்ந்து
இங்கே எதையோ செய்து
அதன் மூலமாக
சமூக மரியாதையை தேடி
அலைபவர்கள்
மத்தியில்...
நான் நானாக
எந்தவித சலனமும்
இல்லாமல்
என் வாழ்க்கைக்கு
அர்த்தத்தை தேடி தேடி
சோர்ந்து போகாமல்
அந்த நெடும் பாதையில்
கையில் ஜீவித்து இருக்க
வழி துணையாக
எந்தவித உணவையும்
எடுத்துக் கொள்ளாமல்
ஏதோவொரு நம்பிக்கையில்
பயணிக்கிறேன்...
இயற்கையோ
எனக்கு
தேவையான பொழுதில்
தேவையான அமிர்தத்தை
அங்கங்கே கொடுத்து
என் கரங்களை குலுக்கி
புன்னகையோடு
பயணிக்க வைப்பதை
பார்த்து கொஞ்சம்
ஆச்சரியமாக பார்த்து
பெருமூச்சொன்று
உதிர்த்து
கொஞ்சம்
திரும்பி பார்க்கிறேன்...
கண்ணுக்கு எட்டிய
தூரம் வரை
என் பாதையில்
நான் மட்டுமே
இன்னும்
அங்கே பயணிக்கிறேன்...
வேறு எவரையும்
காணவில்லை...
அந்த நெடும் பாதை
என்னிடம்
மெதுவாக சொல்கிறது...
அவர்கள் அவர்களை
நம்பி எடுத்து வந்த
உணவு தீர்ந்து போய் ...
எங்கோ வேறு பாதையில்
காலத்தின் கைகளில்
அடைக்கலமாகி
அந்த காலத்தை
திட்டிக் கொண்டே
அதனோடு
பெரும் குரலெடுத்து
அதை சபித்துக் கொண்டே
பயணிப்பதாக சொல்லியது...
இங்கே இலகுவான பாதை
இங்கே இருக்க
அவர்கள் எப்படி
வழி தவறினார்கள் என்று
எனக்கு நானே கேள்வி
எழுப்பிக் கொண்டே
மீண்டும் அந்த சுகமான
நெடும் பாதையில்
பயணிக்கிறேன்...
நான் அடைய வேண்டிய
இடம் இன்னும்
கொஞ்ச தூரம் தான்
உள்ளது என்று
அந்த காலம் சூட்சமமாக
என் காதில் சொன்னதை
குதூகலத்துடன்
ரசித்துக் கொண்டே
பயணிக்கிறேன்
கொஞ்சம் வேகமாக
நடை போட்டு...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:25/07/26.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக