ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

ஞாயிறு, 31 டிசம்பர், 2023

இந்த நிமிஷம் என் நிமிஷம்...

 

இன்று இருந்த அதே பொழுது நாளை 

வரப்போவதில்லை...

ஒவ்வொரு நாளும்

ஒவ்வொரு நொடியும்

புது வித அனுபவங்கள்

புது வித கதைகள்...

புது வித பயண அனுபவங்கள்...

புது வித மனிதர்கள்

சாலையை கடக்கும் போது

நம்மை பார்த்து 

புன்னகைக்கிறார்கள்...

ஏன் இன்று மாலையில்

எனது காலை நனைத்த 

கடல் அலைகள் கூட

நாளை வரப்போவதில்லை...

இப்படி எத்தனை எத்தனையோ 

விடயங்களை

கடந்து கடந்து

செல்லும் போது

நாளை புதிதாக ஒரு நாட்காட்டி வர போகிறது

அது ஒரு பல மாதங்களை

உள்ளடக்கிய பல காகிதங்களின்

உணர்வற்ற அசத்தில்

காலம் காலமாக

தேடிக் கொண்டு இருக்கிறோம்...

நமக்கு ஏதோ புதுமையை நிகழ்த்த போகிறது என்று...

ஒன்றை நீங்கள் நம்புங்கள்...

நீங்கள் இந்த நொடியை

ரசிக்காத வரை எதுவும் இங்கே 

புதுமையையோ

மாற்றத்தையோ 

நிகழ்த்த போவதில்லை என்று...

#இந்தநிமிஷம்என்நிமிஷம்.

#இசைச்சாரல்வானொலி.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் #டிசம்பர் 31/12/23.

#ஞாயிறு

#நேரம் 8:30.

காலம் நகர்கிறது...

 


மெது மெதுவாக என்னை

தின்றுக் கொண்டு

காலம் நகர்கிறது...

நான் அதன் ஆக்ரோஷமான

விழுங்கலில் சிக்கிக் கொண்டு

அல்லல்பட்டு காலத்தில் இருந்து

விடுப்பட்டு ஜீரணம் ஆகும் போது

எஞ்சி இருக்கும் எச்சத்தில்

எது மிஞ்சும் என்று

எவரேனும் தெரிந்தால் 

சொல்லுங்கள்...

#காலம் நகர்கிறது..

#இளையவேணிகிருஷ்ணா.

வெள்ளி, 29 டிசம்பர், 2023

போற்றுவார் போற்றட்டும்;தூற்றுவார் தூற்றட்டும்...

 


#இன்றைய #தலையங்கம் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் இறப்பதற்கு கூடிய கூட்டம் சத்தம் இல்லாமல் இங்கே உணர்த்தி இருப்பது தர்ம சிந்தனை உள்ளவர்கள் தான் எப்போதும் மக்கள் மனதில் நிலைத்து இருப்பார்கள் என்பது தான்...

இங்கே ஒரு கட்சியை தாக்கி தாக்கி பேசுவதால் அரசியலில் வெற்றி பெற்று விடலாம் என்பது முட்டாள்தனம்... சத்தம் இல்லாமல் மக்கள் சேவையில் தன்னலம் இல்லாமல் அர்ப்பணித்து கொண்டவர்கள் மட்டுமே மக்கள் மனதில் இடம் பிடித்து நீங்கா புகழ் அடைய முடியும்...

இங்கே ஒரு விசயத்தை கவனிக்க வேண்டும்... எவ்வளவு அகங்காரம் கொண்ட மனிதர்களும் ஒருவரின் தர்ம செயல்களால் தலை வணங்க வைக்கப்படுவார்கள் என்று மீண்டும் மீண்டும் இந்த பிரபஞ்சம் நிரூபித்து உள்ளது.. அதற்கு அந்த மத்திய நிதி அமைச்சர் பெண்மணி தலை வணங்கி விஜகாந்திற்கு அஞ்சலி செலுத்தியதே சாட்சி... இங்கே கர்ணனுக்கு முன் பகவான் கிருஷ்ணரே அவர் செய்த தர்மங்களை பிச்சையாக இடுமாறு கேட்கவில்லையா... எப்போதும் இந்த பிரபஞ்சம் தர்ம சிந்தனை கொண்டவர்களால் மட்டுமே நிம்மதியாக சுழல்கிறது என்பதை மீண்டும் இங்கே பதிவு செய்கிறேன்...

ஆவணி மாதத்தில் சூரியன் ஆட்சி... அந்த மாதத்தில் உதித்து அந்த சூரியன் போல விருப்பு வெறுப்பின்றி கள்ளம் கபடம் இல்லாமல் ஒரு ஜீவன் இங்கே நம்மில் பயணித்து மறைந்து இருக்கிறது...

அவரின் கோபத்தில் எழுந்த அந்த உணர்ச்சி பிரபாவங்களை மட்டும் வெட்டி ஒட்டி தகிடுதத்தம் செய்தவர்கள் வெட்கப்படுங்கள்...கர்ணனை அவமானம் செய்ததால் அந்த கர்ணனின் புகழ் இங்கே பூமியில் குறையவில்லையே... அப்படி தான் விஜகாந்திற்கு தன்னலம் இல்லாமல் கூடிய கூட்டம் அவரது புகழை அந்த சூரியன் போல எப்போதும் சுடர் விட்டு பிரகாசித்து கொண்டு இருக்கும்...

உண்மையில் தர்ம சிந்தனை கொண்டவர்கள் புகழை சில மக்களின் கீழ்த்தரமான செயல்களால் தோற்கடிக்க முடியாது என்பதை இன்று நிச்சயமாக நிறைய பேர் உணர்ந்து இருப்பார்கள் என்று நம்புகிறேன்...

#கேப்டன்விஜயகாந்த்

#புகழாஞ்சலி.

#இளையவேணிகிருஷ்ணா.

வியாழன், 28 டிசம்பர், 2023

இரவு கவிதை 🍁

 


இறப்பு பல சூட்சமங்களை

உள்ளடக்கி பயணிக்கிறது..

அந்த சூட்சமத்தில் ஆன்மா

இருள் உலகத்தை அடைகிறதா

இல்லை பேரொளி கொண்ட

உலகத்தில் பயணிக்கிறதா

என்பதை இங்கே நம்மோடு

பயணிப்பவர்கள் தான்

நமக்கு பிறகு இந்த பிரபஞ்சத்திற்கு

எடுத்து செல்லும் தூதுவர்கள்...

#இரவுகவிதை.

நாள்:28/12/23.

வியாழக்கிழமை.

#இளையவேணிகிருஷ்ணா.

இன்றைய தலையங்கம்

 


இன்றைய தலையங்கம்:- எத்தனை பேருக்கு சத்தம் இல்லாமல் உதவி இருக்கிறார் அந்த மனிதர்.... உண்மையில் அவரை பற்றிய தகவல்களை கேட்க கேட்க நம்மையும் அறியாமல் கண்கள் கலங்கி கண்ணீர் அஞ்சலி செலுத்தவே செய்தது...

ஒரு மனிதர் வாழ்ந்து முடித்த பிறகு அவரிடம் எவ்வளவு கோடியில் சொத்து இருக்கிறது என்பது அடையாளம் அல்ல... தர்ம சிந்தனை உள்ள மனிதர் தான் தனது அடையாளத்தை இந்த பூமியில் புகழாக மக்கள் மனதில் நீங்காத செல்வமாக விட்டு செல்ல முடியும் என்பதை மீண்டும் சத்தம் இல்லாமல் நிரூபித்து இருக்கிறார் கேப்டன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த்... இவரிடம் இருந்தாவது இன்றைய அரசியலில் கால் பதிக்க நினைக்கும் இளைஞர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்... சம்பாதிக்க ஆயிரம் வழிகள் உள்ளன... ஆனால் தயைக் கூர்ந்து அரசியலை தேர்ந்தெடுக்காதீர்கள்... 🙏. அரசியல் என்பது மக்கள் மனதில் ஏதோவொரு நல்ல வகையில் எப்போதும் நினைவு கூறும் வகையில் அமைத்துக் கொள்வதே நல்ல அரசியல்வாதிகளுக்கு அழகு...அதை தான் இன்றைய அரசியல் தலைவர்களுக்கு அமைதியாக உணர்த்தி காற்றோடு கலந்து இருக்கிறார் அந்த கள்ளம் இல்லாத மனிதர்...

#இன்றையதலையங்கம்.

#இளையவேணிகிருஷ்ணா.

புதன், 27 டிசம்பர், 2023

இரவு கவிதை 🍁

 


கரைந்து செல்லும்

அந்த கணங்கள்

என் வாழ்வின் சுவையையும்

சுவைத்து செல்வது தான்

வேடிக்கை நிறைந்த சுவாரஸ்யமான 

தருணம் எனக்கு...

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

இசையோடு ஒரு பயணம்

 


நேயர்கள் அனைவருக்கும் இனிமையான வணக்கம் 🙏✨🙏.

தற்போது இந்திய நேரம் இரவு 9:10 மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலி ஒலிபரப்பு சேவையில் இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சி கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் நேயர்களே 🎻✨🎉.

கீழேயுள்ள லிங்கில் வானொலி ஒலிபரப்பு சேவை

https://zeno.fm/radio/krishna-fma76ufetpuy8uv/

செவ்வாய், 26 டிசம்பர், 2023

இசையோடு ஒரு பயணம்

 


நேயர்களே இன்று இரவு ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சி கேட்டு ரசிக்கலாம் ✨🎻.

கீழேயுள்ள லிங்கில்

https://zeno.fm/radio/krishna-fma76ufetpuy8uv/

செவ்வாய், 19 டிசம்பர், 2023

உறங்கும் முன் ஒரு சிந்தனை கதை

 


நேயர்களே வணக்கம் 🙏🤝💐🎻.

எப்போதும் உறங்குவதற்கு முன் நல்ல சிந்தனை கதைகளை கேட்டு விட்டு நிம்மதியாக உறங்குங்கள்.. அப்போது தங்களது உறக்கம் நிர்மலமாக இருக்கும்..

கீழேயுள்ள லிங்கில் சென்று நீங்கள் உறங்கும் முன் ஒரு சிந்தனை கதை கேட்டு ரசிக்கலாம்.

https://youtu.be/wTDpuNGTwec?si=5ty3wSzp0scWE8eU

என் வாழ்வின் பெரும் சுமை...


எனக்கென்று 

யாரும் இல்லை என்று

நான் எப்போதும் 

கவலைப்பட்டதே இல்லை...

எனக்கென்று யாரோ

இருக்கிறார்கள் என்பது தான்

என் வாழ்வின்

பெரும் சுமையாக எப்போதும்

கருதுகிறேன்...

ஏனெனில் நான் எந்த சுமைகளும்

இல்லாமல் பயணிக்க

இந்த பிரபஞ்சத்திற்கு அனுப்பப்பட்டு

இருக்கிறேன்...

#இரவு சிந்தனை ✨

#இளையவேணிகிருஷ்ணா.

திங்கள், 18 டிசம்பர், 2023

பாவம் அவள் என்ன செய்வாள்?

 


உலகம் முழுவதும்

செய்த தவறுகளுக்காக

சாதாரண மக்கள்

இங்கே அடி மேல் அடி வாங்குகிறார்கள்..

ஒரு புண்ணியம் செய்தவர்கள் இருந்தால் கூட போதும்..மழை பொழிய என்று பெரியவர்கள் சொல்ல கேள்விப்பட்டு இருக்கிறோம்... இங்கே இயல்பான வாழ்க்கையை மொத்த உலகமும் தொலைத்து விட்டு வேறு பாதையில் பயணிப்பதற்கான தண்டனையை நாம் அனைவரும் சேர்ந்து தானே அனுபவிக்க வேண்டும்... உலகம் முழுவதும் இந்த பூமி தாயை கொடுமை மேல் கொடுமை செய்துக் கொண்டே இருந்தால் பாவம் அவள் என்ன செய்வாள்.. ஒரு நாள் சில மணித்துளிகளில் கதறி அழுது புரண்டு விடுகிறாள் பெரும் மழையாக நமது மடியில்...

#இரவுசிந்தனை.

#பெரும்மழை.

#இளையவேணிகிருஷ்ணா.

உறங்கும் முன் ஒரு சிந்தனை கதை

 


நேயர்களே வணக்கம் 🎻💐🎻.

உறங்கும் முன் நல்ல சிந்தனை இருந்தால் நிர்மலமான உறக்கம் வரும்... அதற்கு கதைகள் மூலம் நல்ல சிந்தனைகளை அந்த காலத்தில் மூதாதையர்கள் சொல்லி வந்தார்கள்.. இப்போதும் இதற்கு நல்ல மதிப்பும் மரியாதையும் கிடைக்கிறது..இதோ கீழேயுள்ள லிங்கில் சென்று நீங்கள் உறங்கும் முன் ஒரு நல்ல சிந்தனை கதைகளை கேட்டு விட்டு நிம்மதியாக உறங்குங்கள் நேயர்களே 🙏🎻🙏.

https://youtu.be/DcOwjWFy4Pc?si=Mj7fjkbd-tJNgXsU

ஞாயிறு, 17 டிசம்பர், 2023

மார்கழி அனுபவம் (2)

 


அந்த வேடிக்கை மனிதன் மிக மிக மெதுவாக அந்த இளங்குளிரை அனுபவித்தபடியே

சாலையில் இறங்கி நடக்கிறான்...

எத்தனையோ வீட்டில் இருந்து வெளியே வந்த பெண்மணிகள் கொஞ்சம் சுவாரசியமாக வாசலுக்கு தண்ணீர் தெளித்து கோலம் இட்டார்கள்...

இன்னும் சில பேர் கடனே என்று வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு பயந்து எழுந்து அந்த குளிரை மனதிற்குள் திட்டிய படியே

வாசல் தெளித்து கோலம் இட்டார்கள்...

அப்போது ஒரு வீட்டின் வாசலில் ஒரு நாய் அந்த இளங்குளிரை தாங்க முடியாமல்

தன் உடலுக்குள் தலையை இறுக்கமாக புதைத்து படுத்து இருந்தது...

அந்த வீட்டில் உள்ள பெண்மணியோ ஏற்கனவே மிகவும் எரிச்சலாக இந்த இளங்குளிரில் சலிப்பாக

எழுந்தவள்...

அந்த நாயை அவள் வாசலில் பார்த்ததும் தமது வாளியில் உள்ள தண்ணீரை

வேகமாக அந்த நாயின் மீது தெளித்தாள்...

இதை பார்த்த அந்த வேடிக்கை மனிதனுக்கு கொஞ்சம் கோபம் வந்தது...

பிறகு இயல்பாகி தனக்குள் இப்படி பேசிக்கொண்டு சென்றான்...

அந்த இளங்குளிருக்கு இதமாக இந்த பெண்மணி

இன்னும் கொஞ்ச நேரம் உறங்கி விட்டு வந்து இருந்தால்

குளிருக்கு இதமளிக்கும் என்று நினைத்து படுத்து இருந்த 

ஒரு ஜீவனுக்கு அவள் வாசலில் இடம் கொடுத்த புண்ணியமாவது அவள் கணக்கில் சேர்ந்து இருக்கும்..

இப்போது அவள் கணக்கில் அந்த இளங்கலைப் பொழுதில் எழுந்து வாசலுக்கு தண்ணீர் தெளித்து அழகாக உள்ளூர வெறுப்போடு இட்ட அந்த கோலத்தோடு

வீட்டின் இரு புறமும் ஏற்றிய விளக்கு இட்டது புண்ணியம் சேர்க்குமா பாவம் சேர்க்குமா என்று யோசித்தப்படியே

அந்த வேடிக்கை மனிதன் தனது நடையை தொடர்ந்தான்... அப்போது அவன் காலருகே அந்த நாயின் மூச்சு காற்றின் வெப்பம் வந்து தீண்ட

நான் அந்த தேநீர் விடுதி அருகே நின்று இருந்தான்..

இதோ அந்த பெண்மணி செய்த பாவ கணக்கிற்கு சில ரொட்டி துண்டுகளை அதற்கு பசியாற கொடுத்து விட்டு

மறக்காமல் பிரார்த்தனை 

செய்துக் கொண்டான்...

மறக்காமல் இந்த புண்ணிய கணக்கை அந்த பெண்மணி கணக்கில் சேர்த்து விடுமாறு அந்த இறைவனை....

#மார்கழிஅனுபவம்.

நாள்: டிசம்பர் 18/12/23.

#இளையவேணிகிருஷ்ணா.

#இசைச்சாரல்வானொலி.

மார்கழி அனுபவம்


அந்த இளங்குளிரும் 

சாரக்காற்றையும்

அனுபவித்துக் கொண்டே 

போர்வையை தலை வரை போர்த்தி

மனதுக்குள் அந்த கிருஷ்ணரை

எங்கோ இருந்து தவழ்ந்து வரும்

திருப்பாவையை காதின் வழியே

சுவைத்து கண்மூடி பேரானந்தத்தை

அனுபவித்து விடுவதை விடவா

நிர்பந்தமாக எழுந்து வாசலுக்கு 

தண்ணீர் தெளித்து கோலம் இட்டு

கோயிலுக்கு சென்று தீபம் இட்டு

வந்து விடுவதில் இருந்து விட

போகிறது?

#மார்கழி அனுபவம்.

நாள் டிசம்பர் 18/12/23.

#இளையவேணிகிருஷ்ணா.


சனி, 16 டிசம்பர், 2023

அவன் அந்த மாய இருளில் என்ன செய்துக் கொண்டு இருக்கிறான்?

 


அவன் அந்த

மாய இருளில்

என்ன செய்துக் கொண்டு 

இருக்கிறான் என்று

தெரியவில்லை...

ஆனால் ஏதோவொன்று 

தொலைந்து விட்ட பொருளை 

தேடிக் கொண்டு 

இருக்கிறான் என்று மட்டுமே

புரிகிறது நமக்கு...

இருளில் தேடினால் எப்படி 

கிடைக்கும் 

என்று நாம் இங்கே 

யோசித்துக் கொண்டு இருக்கும் 

நொடியில்

அவன் அந்த பொருளை 

கண்டுபிடித்து விட்ட சந்தோஷத்தில் 

அதை இறுக பற்றிக் கொண்டு

ஓடி விடுகிறான்...

அவன் ஓடும் போது சில சருகுகள் 

சடசடவென மிதிப்படும் ஓசை மட்டும்

நமது காதுகளில் எட்டுகிறது..

அவன் கையில் கிடைத்த அந்த 

பொருள் எதுவாக இருக்கும் என்று

யோசித்து யோசித்து

இந்த இரவை தொலைக்கிறோம் 

நாம்...

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

புதன், 13 டிசம்பர், 2023

உறங்கும் முன் ஒரு சிந்தனை கதை

 


நேயர்களே வணக்கம் 🙏 நாள் முழுவதும் உழைத்து ஓய்வெடுத்து உறக்கம் கண்களை தழுவும் போது ஒரு நல்ல சிந்தனை தூண்டும் கதைகளை கேட்டு விட்டு நிம்மதியாக உறங்குங்கள் 🙏.

நாள் 13/12/2023.

கீழேயுள்ள லிங்கில்:- https://youtu.be/Wk-8nyy3a8Y?si=yLNeHUTY5Owu-MUG

செவ்வாய், 12 டிசம்பர், 2023

உறங்கும் முன் ஒரு சிந்தனை கதை ✨

 


நேயர்கள் அனைவருக்கும் இனிமையான வணக்கம் 🎻✨🎉.

கீழேயுள்ள லிங்கில் ஒரு அழகான வாழ்வியல் கதையை கேட்டு விட்டு நிம்மதியாக உறங்குங்கள் நேயர்களே 🎻🙏😊.

நாள்:12/12/2023.

செவ்வாய் கிழமை.

https://youtu.be/RNT4RVs2Q2g?si=iHFHIrAHOF4ldpam

திங்கள், 11 டிசம்பர், 2023

கொஞ்சம் மனதிற்கு ஆறுதல் வரைகலை ✨

 

எனது கைவண்ணத்தில் ஒரு ஓவியம்.. கொஞ்சம் மனதிற்கு ஆறுதல் தருகிறது..☔🌿🦋.

உறங்கும் முன் ஒரு சிந்தனை கதை ✨

 


வணக்கம் நேயர்களே 🙏🎻🙏.

நாம் உறங்கும் முன் ஒரு நல்ல சிந்தனை கதைகளை கேட்டு விட்டு உறங்கும் போது நல்ல ஆழ்ந்த நிம்மதியான உறக்கம் வரும்.. மேலும் மனமும் அமைதியாக இருக்கும் போது நல்ல சிந்தனைகளை ஏற்றுக் கொண்டு செயல்பட எத்தனிக்கும்..

இதோ கீழே உள்ள லிங்கில் சென்று நீங்கள் உறங்கும் முன் ஒரு சிந்தனை கதை கேட்டு ரசிக்கலாம் நேயர்களே 🎻✨🎉🦋.

https://youtu.be/la9cBuA9qKI?si=Y9BOtYTf2tK5fnCW

இரவின் ரகசியங்கள்...


 இரவின் ரகசியங்கள்

எங்கே பத்திரப்படுத்தப்படுகிறது?

அதன் ஆழ்ந்த அமைதியில்

புதையுண்டு கிடப்பதை தவிர

அதற்கு வேறேது போக்கிடம்?

#இளையவேணிகிருஷ்ணா.

#இரவுகவிதை.

சனி, 9 டிசம்பர், 2023

காலமும் நானும்

 


காலமும் நானும்:-

நான் அப்படியே அமர்ந்து இருந்தேன் முற்றத்தில்...கொஞ்சம் வெங்காய பக்கோடா கொறித்து கொண்டே இடையிடையே இஞ்சி தட்டி போட்ட தேநீரையும் சூடாக பருகிக் கொண்டே... குளிர் காற்றை மெய்மறந்து ரசிக்கிறேன்..வானிலையின் தன்மை அப்படி..எல்லோரும் குளிர்கிறது என்று போர்த்திக்கொண்டு படுக்கையில் விழுந்து இருக்க நான் மட்டும் ஏனோ இந்த காலநிலையில் ரசிகையானேன்..என் தோளை பற்றி பிடித்தது யார் என்று திரும்பி பார்த்தால் காலம்..அட என்ன இப்போதெல்லாம் நீ என்னை தேடி அடிக்கடி வந்து விடுகிறாய் என்று கேட்டேன்...எனக்கும் ரசனை இருக்காதா..உன்னோடு சேர்ந்து கொஞ்ச நேரம் இந்த காலநிலையை ரசித்து விட்டு போகலாம் என்று வந்தேன் என்றது..ஒரு நிமிடம் இதோ வருகிறேன் என்று சொல்லி விரைவாக அதற்கு சூடான வெங்காய பக்கோடாவோடு தேநீரை மும் கொண்டு வந்து கொடுத்தேன்..அது மிகவும் ஆர்வமாக வாங்கிக் கொண்டு ரசித்து வெங்காய பக்கோடாவை ருசித்து தேநீரை ரசித்து பருகியது.. இருவரும் அமைதியாக அந்த காலநிலையை ரசித்தோம்..எங்கோ இருந்து வந்த மழைக் கால மேகம் ஒன்று பாடல் இந்த காலநிலையில் கேட்க இதமாக இருந்தது... இப்படியான பாடல்கள் கேட்க கேட்க இனிமை தான் இல்லையா என்றது காலம் என்னிடம்..ஆமாம் காலமே..சில நேரத்தில் சில பாடல்கள் நாம் எநிர்பாராத நேரத்தில் இப்படி வந்து மகிழ்விக்கும் போது கிடைக்கும் சுகமே தனி தான் என்றது..திடீரென வேகமாக வீசிய காற்று நின்றது..ஆழ்ந்த இந்த இரவின் அமைதி ஏதோவொரு ஆவலை எங்களை தூண்டியது..நாங்கள் இருவருமே இதை பார்த்து கொஞ்சம் ஆச்சரியம் அடைந்தோம்..என்ன நடக்கிறது இங்கே காலமே என்றேன் ஆவலாக..நானும் உன்னை போல தான் ஆச்சரியமாக பார்க்கிறேன் எனது ஆருயிர் தோழியே என்றது..கொஞ்ச நேரம் நாங்கள் நடக்கும் அந்த காலநிலை மாற்றங்களை ரசித்து இருந்தோம்..திடீரென காலம் என்னிடம் ஏதாவது இந்த சூழலுக்கு தகுந்தார் போல ஒரு கவிதை சொல்லேன் என்றது..கவிதையா..மீண்டும் மீண்டும் மீண்டும் ஏன் இந்த சோதனை உனக்கு என்றேன் சிரித்துக்கொண்டே 😊?அட சொல்லேன்..என்றது.. கொஞ்சம் கொஞ்சலாக..சரி சரி சொல்கிறேன்.. என்றேன்.. புயல் வரும் நேரத்தில் நிகழ்கால கவிதை 🍁

இதோ இன்னும் சில மணிநேரங்களில்

கரை கடந்து விடும்

அந்த புயல்...

என் மனதில் சுற்றிக் கொண்டு இருக்கும்

உனது காதல் எனும் புயலை

கடக்க தான்

கரை தேடி அலைகிறேன்...

எக்காலம் கரை சேருமோ...

அட எவ்வளவு அழகான கவிதை இது என்று கைத்தட்டி சபாஷ் சொன்னது..

மீண்டும் நாங்கள் இருவரும் அமைதியானோம்..

இங்கே கொஞ்சம் கொஞ்சமாக சாரலாக மழை வர தொடங்கியது.. இப்போது இன்னும் ஆழ்ந்த அமைதியில் அந்த காலநிலையில் லயித்து கிடந்தோம் எங்களை மறந்து..

#காலமும்நானும்

#இளையவேணிகிருஷ்ணா.

இன்றைய தலையங்கம்

 


இன்றைய தலையங்கம்:-

ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால் இங்கே கடந்து சென்ற புயலால் மக்கள் பெரும் அவதிக்கு காரணம் நேர்மையான அதிகாரிகள் இல்லாமல் போனது தான்... ஒரு சமயோசிதமான அதிகாரி எவ்வளவு மோசமான அரசியல்வாதிகளையும் யோசித்து திருந்த வைக்க முடியும்... இங்கே அதிகாரிகள் தான் மெத்த படித்தவர்கள்.. பெரும்பாலான அரசியல்வாதிகளுக்கு நிறைய விசயங்கள் தெரியாது..தொலைநோக்கு பார்வையுடன் எல்லா அரசியல்வாதிகளும் இருக்க வாய்ப்பே இல்லை.. ஆனால் ஒரு நல்ல அதிகாரி பொறுமையாக எடுத்து சொல்ல முடியும்.. அப்படி எடுத்து சொல்லியும் கேட்கவில்லை என்றால் அவர்கள் சட்ட ரீதியாக அணுகலாம்... அரசியல்வாதிகள் தான் செலவு செய்த பணத்தை எடுக்கத் தான் பார்ப்பார்கள்.. அப்படி அவர்களை செயல்பட தூண்டியது மக்களாகிய நாம்.. ஒவ்வொரு முறையும் தேர்தல் வந்தால் ஓட்டுக்கு பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போட்டால் என்ன விளைவுகள் ஏற்படும் என்று யோசிக்க வேண்டும்.. இப்படி ஒவ்வொரு விசயமும் சங்கிலி தொடர் போல ஏதோவொரு வகையில் நாம் அனைவரும் குற்றவாளிகள்... எப்படியோ ஒரு வீடு வேண்டும்.. அது ஏரியாக இருந்தால் என்ன குளமாக இருந்தால் என்ன என்று யோசிக்காமல் வாங்க எடுக்கும் முடிவு... இந்த இயற்கைக்கு நாம் என்ன செய்து இருக்கிறோமோ அதைத் தான் சரியான நேரத்தில் சரியான முறையில் நமக்கு கொண்டு வந்து சத்தம் இல்லாமல் சேர்த்து விட்டு நாம் படும் அல்லலை பார்த்து கவலை இல்லாமல் அமைதியடைகிறது... நாம் அந்த இயற்கைக்கு அமைதி இல்லாததை தான் கடந்த காலங்களில் கொடுத்து இருக்கிறோம்..அவரை விதைத்து விட்டு துவரை எதிர்பார்த்தால் துவரையா கிடைக்கும்?

இனியேனும் மக்கள் நிம்மதியாக வாழ என்ன தேவை என்று புரிந்துக் கொண்டு வாழ்க்கையில் சில முடிவுகளை எடுக்க வேண்டும்.. விழித்துக் கொள் மானிடனே.. நமது அரசியல்வாதிகள் நம்மை நமது வாழ்வியலை விட்டு வெகுதூரம் இழுத்து சென்று விட்டார்கள்..அதற்கான பலனை தான் நாம் அனுபவிக்கிறோம்..இங்கே ஆழ்ந்த அரசியல் விமர்சகர்கள் மிகவும் குறைவு.. நாம் நமது வாழ்க்கையை எப்படி வடிவமைக்க வேண்டும் என்று நாம் முடிவெடுக்க இறைவன் நமக்கு அதிகாரம் கொடுத்து இருக்கிறார்.இனியேனும் யோசிக்க வேண்டும் மக்கள்!

#இன்றையதலையங்கம்.

#இளையவேணிகிருஷ்ணா.

வெள்ளி, 8 டிசம்பர், 2023

நிரந்தரமற்ற நொடிகளில் நிரந்தரமாக நான்..

 


தீராத காதல்

இந்த வாழ்வின்

நகர்வில்...

எந்த நிகழ்வும் என்னை துவம்சம்

செய்து விடக் கூடாது என்று

கொஞ்சம் என்னை 

ஆசுவாசப்படுத்திக் கொண்டு

கண் மூடி சுற்றுப்புறம் மறந்து

தனிமையை நேசிக்கிறேன்...

ஆறுதல் சொல்ல என்று எவரும்

நெருங்க வேண்டாம்...

இதோ இந்த வஸ்துவின் வெப்பத்தில்

எல்லாம் பொசுங்கி விடும்...

தீராத காதலை 

இந்த வாழ்வில் இருந்து

விடுவித்து விடவும் கூடும் நான்

இன்னும் சில நொடிகளில்...

நிரந்தரமற்ற நொடியில்

நிரந்தரமாக நான்

என் இருப்பை உறுதி 

செய்துக் கொள்கிறேன்...

கொஞ்சம் நீங்கள் விலகி இருங்கள் 🙏.

#இளையவேணிகிருஷ்ணா.

வியாழன், 7 டிசம்பர், 2023

அந்த அறிவிக்கப்பட்ட மழைக்கால இரவொன்றில்......

 


அந்த அறிவிக்கப்பட்ட மழைக் கால

இரவொன்றில்

அறிவிக்கப்படாத

எதிர்பாராத உன் நினைவுகளை

கொஞ்சம் அகற்றுங்கள் என்று 

ஆணை இடுவதை

என் மனம் கொஞ்சம் வேடிக்கையாக

சிரித்து விட்டு

அந்த செயலை செய்யாமலேயே

என்னை வெறுப்பேற்றி

ரசிப்பதில்

நான் இன்னும் கோபம்

அடைந்து

மன கதவின் தாழ்தனை

விலக்கி சற்றே வெளியே

பார்க்கிறேன்..

பெய்துக் கொண்டிருந்த மழை ஏனோ

என்னை அது பங்கிற்கு கேலி செய்து 

சிரித்து வைத்தது..

#இளையவேணிகிருஷ்ணா.

புதன், 6 டிசம்பர், 2023

நாயொன்று மெல்ல முனகி வேடிக்கை பார்க்கிறது...

 

அங்கே ஒரு வெள்ளம்

பெருக்கெடுத்து

நகரை சத்தம் இல்லாமல் 

விழுங்கிக் கொண்டு

இருக்கிறது...

இங்கே வெள்ளத்தால்

விழுங்கப்பட்ட நகரில் உள்ள

ஜீவன்களின் கணக்கெடுப்பு மட்டும் 

சத்தம் இல்லாமல்

நிகழ்த்தி விட்டு

உணர்வற்று கடக்கிறார்கள்

சில பல அரசியல் நியாயஸ்தர்கள்...

இவர்கள் நியாயத்தை

அங்கே அந்த வெள்ளப் பெருக்கில் 

இருந்து தப்பி பிழைத்த 

நாயொன்று பெரும் பசியோடு 

சாட்சியாக

மெல்ல முனகி வேடிக்கை பார்க்கிறது....

#நகரை சூழ்ந்த வெள்ளம்.

நேரம் அந்தி மாலை 6:50.

நாள்: #டிசம்பர் 6/23.

#இளையவேணிகிருஷ்ணா.

ஞாயிறு, 3 டிசம்பர், 2023

ஒரு கொண்டாட்டமும் தேவையில்லாத இரவொன்றில்...


ஒரு கொண்டாட்டமும்

தேவையில்லாத இரவொன்றில்

நான் இந்த பிரபஞ்சத்தின்

எல்லையில் இருந்து

மௌனமாக விலகிச் செல்கிறேன்...

இந்த பிரபஞ்சமோ

பிடிவாதமாக என் இறப்பை

துக்க நாளாக அறிவித்து

இந்த பிரபஞ்சத்தின் 

ஏதோவொரு மூலையில்

சிரித்து மகிழ்ந்து 

கொண்டாடிக் கொண்டு

இருந்த அந்த பொருளற்ற 

விழாவையும் நிறுத்தி விட்டது தான்

எனது விடை தெரியாத

இந்த பிரபஞ்சத்தின் இறுதி மூச்சின் 

வெற்றியா என்று

என்னை நானே 

கேட்டுக் கொள்கிறேன்...

அதே சமயத்தில் என் சூட்சம ஆன்மா 

காற்றோடு காற்றாக

கலந்து மிதக்கிறது

அந்த வெட்டவெளியில்...

#இரவுகவிதை.

#இசைச்சாரல்வானொலி.

இதமான இரவொன்றில்...

 


இதமான இரவொன்றில்

கரைகிறேன்

எனை மறந்து...

குளிரும் இல்லா

வெப்பமும் இல்லா

இந்த காலநிலை

ஒரு வித பேரமைதியை

தருகிறது...

இங்கே துணையின்றி

பயணிப்பது

ஆனந்த சொரூபமே என்று

இந்த கடற்கரை நிலவொளி

எனக்கு பாடம் நடத்துகிறது

தனது ஒளிவெள்ளத்தில்..

அத்தனை நினைவுகளையும்

அலையில் கரைத்து

அமைதிக் கொள்ள

துடிக்கிறது மனது..

பேரண்டத்தின் அமைதியை

இங்கே யார் புரிந்துக் கொள்ள கூடும்..

சம்சாரம் எனும்

தணலில் அமைதியின் தேடலை துவங்கி

முடிவற்ற பயணத்தில்

தனது இருப்பை தேடி

அலைகிறது பொல்லா மனது

அதற்கான இருப்பை

எவரும் களவாடவில்லை என்று இங்கே எவரேனும்

சொல்லுங்கள்...

களவாடப்பட்டது முற்றிலும்

வடிவமற்று பயணிக்கும் 

ஆன்மாவின் பேரானந்த பெருநிலை என்று..

#இரவும்நானும்

#இளையவேணிகிருஷ்ணா.

இன்றைய தலையங்கம்

  இன்றைய தலையங்கம்:- யாரோ பிரிகிறார்கள் சேர்கிறார்கள்... ஏன் அவர்கள் தனிப்பட்ட வாழ்வில் பொது ஜனங்கள் தலையிட்டு ஏதேதோ கருத்து சொல்லி அவர்களை ...