ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

புதன், 31 ஆகஸ்ட், 2022

ஏன் இந்த ஆர்ப்பாட்டம்


இதோ இங்கே

நான் 

வாழ்ந்துக் கொண்டு

இருக்கிறேன்..

ஒவ்வொரு நொடியும்

இறந்துக் கொண்டே

எனது வாழ்வின் சூட்சமத்தை

சத்தம் இல்லாமல்

சுருக்கமாக புரிய

வைத்துக் கொண்டு இருக்கிறது

எல்லாமே இங்கே

ஒரு கட்டத்தில் புதைந்து அழிந்து

போக தான் போகிறது..

அதற்கு ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம்

என்று எனது ஆன்மா

கேட்கும் கேள்விகளுக்கு தான்

பதில் இங்கே எவ்வளவு

முயன்றாலும் கிடைக்கவில்லை..

#இளையவேணிகிருஷ்ணா.

பிறவி எனும் சூட்சமம்


பிறவிகள் தோறும்

நம்மோடு

பயணிக்கிறது

இறப்பு...

இறப்பின் சூட்சுமத்தை

புரிந்துக் கொள்ள

முயற்சி செய்யாமலேயே

இங்கே 

பல கருவறையில்

பயணிக்கிறோம்...

பயணங்கள் 

அலுத்த போதும்

விடாமல் தொடர்கிறோம்

ஏதோவொரு ஆவலில்..

இங்கே 

அந்த பிறவியின்

சூட்சுமத்தை உணர்த்தும்

கருவறை 

கிடைக்கும் வரை

புனரபி ஜனமும்

புனரபி மரணமும்

யாகத்தில் இடைவிடாமல்

ஊற்றி பயணிக்க வைக்கும்

நெய்யை போல..

கொழுந்து விட்டு

எரியும் பிறவி எனும்

யாக தீயின் தணலை

இங்கே எவர்

இடைநிறுத்தக் கூடும்??

விடை தெரியா

கேள்வி இது...

#இளையவேணிகிருஷ்ணா.

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2022

நேசம் புதுமை..


 நான் எமனை நேசித்து

ஒரு காதல் கடிதம்

அனுப்பி வைத்தேன்..

நெடுநாட்களாக பதில்

இல்லை..

பொறுமை இழந்து

நீ என் கடிதத்தை வாசித்தாயா

என்று பெரும் ஆவலோடு

கேட்கிறேன்..

அதற்கு எமன் உன்னை போல

ஆயிரம் பல்லாயிரம்

கவிதைகள் வந்து உள்ளது..

உனது கடிதமும் பரிசீலனையில்

உள்ளது என்றான்..

எமனை எவர் வேண்டுமானாலும்

நேசிக்கலாம்..

எமன் ஆத்மார்த்தமாக

ஒருவரை நேசித்து

பெரும்  காதலோடு

ஏற்றுக் கொள்ள வேண்டுமே..

நான் அவனின் காதலியாக

காத்திருக்கிறேன்..

அவன் என்றேனும்

என் பெரும் காதலை புரிந்து

ஏற்றுக் கொண்டு

ஒன்றோடு ஒன்றாக

கலக்கும் நாள் தான்

வாழ்வின் பெரும் வரம் எனக்கு..

#இளையவேணிகிருஷ்ணா.

எமனை நேசித்து...


விருப்பு வெறுப்பற்ற

பயணத்தில்

நான் எமனுக்கு நிகரானவள்..

எமனை வெறுக்காதீர்கள்..

இங்கே வாழும் மனிதர்களை விட

எமனை நேசித்து

வாழ்ந்து விடுவது நல்லது..

எமனின் நேசத்தில்

ஓர் சத்தியம் எப்போதும் இருக்கும்.

#இளையவேணிகிருஷ்ணா.

முழுமதி நீயாக

 


அந்த முழுமதியில்

நீயாக

உனை தீண்டும்

மேகம் ☁️ நானாக..

நம்மை கட்டித் தழுவ

தூண்டும் தென்றலுக்கு

இந்த வெட்ட வெளி

நன்றி சொல்லி கொண்டு

இருக்க...

நாம் நம்மை மறந்து

களித்திருக்கிறோம்

காதலின் பெருவெளியிடையே

#இளையவேணிகிருஷ்ணா.


திங்கள், 29 ஆகஸ்ட், 2022

கிருஷ்ணா இணையதள வானொலி

 

நேயர்களே வணக்கம் 🎻🙏🎻

இன்று இரவு ஒன்பது மணிக்கு இந்திய நேரம் உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஓர் பயணம் நிகழ்ச்சியில் மகாபாரதம் நெடுந்தொடர் கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் நேயர்களே 🙏🎻🙏

வானொலி லிங்க்:- https://zeno.fm/radio/krishna-fma76ufetpuy8uv/


இசை வனம் இணையதள வானொலி

 வணக்கம் நேயர்களே 🙏🎻🙏

தற்போது உங்கள் இசை வனம் இணையதள வானொலியில் தற்போது இரவு எட்டு மணி முதல் ஒன்பது மணி வரைஅறிவோம் பகிர்வோம் நிகழ்ச்சியில் உங்களோடு கயல்..

சுவாரஸ்யமான தகவல்களோடு இனிமையான பாடல்கள் கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் நேயர்களே 🙏🎻🙏.

வானொலி லிங்க்:- https://isaivanam.com/


சனி, 27 ஆகஸ்ட், 2022

காலத்தின் பயணம்

 


நான் இருக்கிறேன்

நான் இருக்கிறேன் என்று

அங்கே யாரோ ஒருவர் சத்தம் 

போட்டுக் கொண்டே தான் 

இருக்கிறார்கள்...

காலமோ எந்த கூச்சலையும்

கண்டுக் கொள்ளாமல்

ஆழ்ந்த அமைதியோடு

பயணிக்கிறது..

#இளையவேணிகிருஷ்ணா.


தேநீர் கோப்பையின் அன்பு


அத்தனை நேரம்

என்ன பேசினார்கள் 

ஏது பேசினார்கள் 

தெரியவில்லை

கூட்டமாக கூடி..

அங்கே பேசப்பட்ட

விசயங்கள் எல்லாம்

நிச்சயமாக

ஏதோவொரு மனிதரை பற்றியோ

இல்லை ஒன்றுக்கும்

பயன்படாத விசயங்களாக தான்

இருக்கும் என்று மட்டும் 

ஊகிக்க முடிந்தது ...

கூட்டம் கலைந்து

அங்கே இருந்து வந்த

ஒருவர் என்னை பார்த்து கேட்கிறார்

நீங்களும் அங்கே வந்து இருக்கலாம்

நன்றாக நேரம் போனது என்றார்

உற்சாகமாக...

நான் சிரித்து கொண்டே சொன்னேன்

இதோ இந்த புத்தகம் தான்

தடுத்தது 

நீ அங்கே சென்று

உங்கள் இன்பத்தை

கெடுத்துக் கொள்ள 

வேண்டாம் என்று..

என்றேன்..

கூடவே இருந்த தேநீர் கோப்பை

கொஞ்சம் என்னை பருகி

எனக்கு விடை கொடுங்கள் என்றது

மிகவும் அன்பாக என்னிடம்..

#இளையவேணிகிருஷ்ணா.

வாழ்வின் நொடியில்...

 


வாழ்வின் 

ஒவ்வொரு நொடியிலும்

புதைந்துக் கொள்ளவே

நினைக்கிறேன்..

ஏனோ அந்த நொடிகள்

என்னை மட்டும் தனித்து

தவிக்க விட்டு விட்டு 

தனித்தே

ஆனந்தத்தை அனுபவிக்கிறது..

நானும் அதை பார்த்து

கற்றுக் கொண்டேன்..

தனித்து இருப்பதே

ஆனந்தம் என்று..

#இளையவேணிகிருஷ்ணா.

வியாழன், 25 ஆகஸ்ட், 2022

இசை வனம் இணையதள வானொலி

 

நேயர்களே வணக்கம் 🙏🎻🙏

இன்று இரவு பத்து மணிக்கு உங்கள் இசை வனம் இணையதள வானொலியில் கவிஞர் கவிதா அவர்களின் கவிதை தொகுப்போடு இனிமையான பாடல்கள் கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் நேயர்களே 🙏🎻🙏

ரேடியோ லிங்க்:-

https://isaivanam.com/

கிருஷ்ணா இணையதள வானொலி


 நேயர்களே வணக்கம் 🎻🙏🎻

இன்று இரவு ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஓர் பயணம் நிகழ்ச்சி கேட்டு ரசிக்கலாம்.. இதில் #மகாபாரதம்நெடுந்தொடர் கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் நேயர்களே 🙏🎻🙏

ரேடியோ லிங்க்:- https://zeno.fm/radio/krishna-fma76ufetpuy8uv/

புதன், 24 ஆகஸ்ட், 2022

என்னோடு பயணிக்கும் போதை...


 எழுதும் போதை..

வானொலி அறிவிப்பாளர்

போதை ...

மொத்தத்தில் கலை போதை 

என்னிடம் இருந்து

நீங்கும் போது

நான் ஆன்மாவோடு 

சூட்சமமாக

சத்தம் இல்லாமல் பயணிக்க

தொடங்கி விட்டேன் என்று

அர்த்தம்..

#இளையவேணிகிருஷ்ணா.



சலிப்பேறி நகரும் நொடிகள்


வாழ்வின் அர்த்தங்கள் என்று 

சொல்லப்படுவதெல்லாம் 

ஒரு கட்டத்தில் அர்த்தம்

இல்லாமல் 

உடைப்படுகிறது...

புகழ் எனும் போதையோ

ஏறி ஏறி இறங்கி

பாடாய்ப்படுத்தி கொல்கிறது..

எத்தனை எத்தனை நிகழ்வுகள்

நடந்தேறி விடுகிறது..

என் அனுமதி இல்லாமலேயே..

எது எப்படியாயினும்

சலிப்பேறி நகரும் நொடிகளை

இங்கே சகித்துக் கொண்டு

இருக்கும் கொடுமையை

அனுபவிப்பது போல

வாழ்வின் சுமை இங்கே 

வேறெதுவும் இருக்க முடியாது

என்பதை இங்கே நான்

உணரும் தருணத்தில்

ஆன்மாவின் ஆனந்தமான

அந்த சத்தம் இல்லாமல்

நகரும் நொடி

என் காதில் விழுகிறது..

#இளையவேணிகிருஷ்ணா.









வாழ்வை அதன் போக்கில் வாழ்ந்து விடுங்கள்


போன போக்கில் வாழ்ந்து விட்டு போவது என்பது எளிதானதாக தோன்றிவிடும்.. ஆனால் அப்படி வாழ நீங்கள் கொஞ்சம் முயற்சி செய்து பாருங்கள்..திணறி தான் போவீர்கள்.. சோதனை முயற்சியாக நீங்கள் அதை முயற்சி செய்து பாருங்கள்.. அப்போது அதில் உள்ள துன்பம் உங்களுக்கு புரியும்.

பகவான் கிருஷ்ணர் வாழ்வை நீங்கள் உற்று நோக்கி பாருங்கள்.. அவர் இளமை பருவம் முழுவதும் நண்பர்களோடும் மாடு கன்றுகளோடும் சுற்றி திரிந்தார்.. இடையிடையே அவரை கொல்ல முயன்றவர்களுக்கு நல்ல பாடத்தை கற்பித்தார்..இளமை காலத்தில் தனக்கேயுரிய காதல் எண்ணங்களோடு கோபியர்களோடு ராச லீலை புரிந்து திரிந்தார்.. பிறகு  அங்கங்கே பஞ்சாயத்து... அவர் ஓரிடத்தில் நில்லாமல் பயணித்துக் கொண்டே இருந்தார்.. அவர் வாழ்வை பெரிதாக யோசித்து தனக்காக இப்படி தான் வாழ வேண்டும் என்று நினைத்து வாழ முயற்சி செய்யவில்லை..வாழ்வை அதன் போக்கில் வாழ்ந்து விட்டு வைகுண்டம் சென்றார்.. அப்போது அவர் குலத்தை பற்றி யோசித்து இருக்கக் கூடும்..தானே எதையும் யோசித்து வாழவில்லை.. நமது குலமும் அப்படி தான் இந்த உலகில் வாழ தெரியாமல் துன்பப் படும் என்று நினைத்து தனக்கு முன்பே தனது குலத்தை ஒருவருக்கு ஒருவர் மது போதையில் பகைக் கொண்டு அடித்து கொண்டு தனது குலத்தை ஒரு முடிவை நோக்கி அழைத்துச் சென்று விட்டு தான் தான் வைகுண்டம் கிளம்பினார்..

இதை எதற்கு சொல்கிறேன் என்றால் நாம் அனைவரும் பல ஆயிரம் ஆயிரம் கனவுகளை மனதில் தேக்கி வைத்து கொண்டு அதை நோக்கி பயணிக்கிறோம்... இதில் ஒன்றும் தவறில்லை.ஆனால் அத்தனை கனவுகளும் பலித்து விட வேண்டும் என்று நினைப்பது தான் தவறு.. மனதில் தேவையில்லாத சஞ்சலங்கள் இதனால் தான் உருவாகிறது.. கொஞ்ச காலம் சென்றதும் வாழ்வை கொஞ்சம் திரும்பி பார்த்தால் ஏதோவொரு சலிப்பு தான் மிஞ்சும்.. ஒவ்வொரு நொடியும் ஆனந்தமான நொடிகள்.. இங்கே அதை உணருங்கள்..

பகவான் கிருஷ்ணர் சொல்வதை போல எந்த செயலையும் செய்யுங்கள்.. பலன் கிடைக்கவில்லை என்றால் அதையே பிடித்துக் கொண்டு சோர்ந்து உட்கார்ந்து விடாதீர்கள்.. அது தான் நீங்கள் செய்யும் பெரிய தவறு.. அதனால் தான் கர்மாவை செய்ய உனக்கு அதிகாரம் உள்ளது.. அதன் பலனில் உனக்கு அதிகாரம் இல்லை என்று மிகவும் தெளிவாக சொல்லி இருக்கிறார் பகவத் கீதையில்..

வாழ்வின் ருசியை உணருங்கள்

வாழ்க்கை ஆனந்தமயமானது..

#இளையவேணிகிருஷ்ணா.


செவ்வாய், 23 ஆகஸ்ட், 2022

இரக்கம் கொள்வதா நிராகரிப்பதா...

 

எனக்கும் எனது

மனதிற்குமான இடைவெளி

நானே நிர்ணயித்துக் கொண்டேன் 

ஏனோ அது என்னை விட்டு

விலக மறுக்கிறது...

எத்தனையோ நினைவுகளை

துறந்து நிச்சலனமான

பயணத்தை அமைதியாக

தொடர நினைக்கும் எனக்கு

நீ தொணதொணவென பேசி

வருவது பெரும் இடையூறு 

மனமே என்கிறேன்...

அதுவோ உன்னை நான்

எந்த தொந்தரவும் செய்யாமல்

பயணிக்கிறேன் என்று

ஒரு சிறு குழந்தையை போல

பிடிவாதம் பிடிக்கிறது ...

நான் இரக்கம் கொள்வதா

இல்லை நிராகரிப்பதா

புரியாமல் தவிக்கிறேன்..

#இளையவேணிகிருஷ்ணா.

திங்கள், 22 ஆகஸ்ட், 2022

கிருஷ்ணா இணையதள வானொலி

 நேயர்களே வணக்கம் 🙏🎻🙏

தற்போது உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஓர் பயணம் நிகழ்ச்சியில் மகாபாரதம் நெடுந்தொடர் கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் நேயர்களே 🙏🎻🙏

https://zeno.fm/radio/krishna-fma76ufetpuy8uv/

தாகத்தில் தவிக்கும் ஐரோப்பா

https://youtu.be/BpDUOdrs9eo

 மனிதர்கள் இயற்கையோடு இயைந்து வாழவில்லை என்றால் என்ன நடக்கும் என்பதை விளக்குகிறது இந்த நிகழ்வு.. நன்றி தினமலர் செய்தித் தாள் திருச்சி பதிப்பு 


ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2022

உறங்கும் முன் ஓர் சிந்தனை கதை

 https://youtu.be/lObTbmUCHuE

மேலே உள்ள இந்த லிங்கில் சென்று உறங்கும் முன் உங்கள் மனதை அமைதிப்படுத்தும் குட்டி கதையை கேட்டு மகிழலாம் நேயர்களே 🎻 🙏 🎻



அன்றாடம் போகிறது..


 அன்றாடம் போகிறது

என் அனுமதிக்காக

அது எப்போதும்

காத்திருப்பது இல்லை..

கைகளில் ஆயிரம்

கனவுகளை வைத்து

செய்வதறியாது

இங்கே திகைத்து

நிற்பதை பார்த்து

காலம் கொஞ்சம்

சத்தமாக சிரித்து

வைக்கிறது...

ஏன் இப்படி கனவுகளோடு

போராடி போராடி

என்னை தின்று தீர்க்கிறாய் என்று...

சுவைத்து முடிந்தால்

இங்கே எல்லாமே

சுவையற்ற ஒன்றாக தானே

இருக்க போகிறது..

அதற்கு ஏன் இப்படி

அன்றாடத்தோடு போராடி

சோர்கிறாய்...

அன்றாடத்தின் அத்தனை நொடிகளும் 

நீ ரசித்து சுவைக்க

காத்திருக்கிறது..

நீயோ அதிவேகமாக

அதை மென்று

சக்கையாக துப்பி விடுகிறாய்

இங்கே எதுதான்

அதனதன் தன்மையை

புரிந்து நடக்கிறது

என்று காலம்

முணுமுணுப்பதை

எவரும் இங்கே காதில்

வாங்காமல்

அவரவர் கனவுகளை

சுமந்து அதிவேகமாக

பயணிக்கிறார்கள்

அந்த நெடுஞ்சாலையில்..

#இளையவேணிகிருஷ்ணா.



நான் சிருஷ்டித்த உலகத்தில்


 நான் ஒரு உலகை

சிருஷ்டித்து

அதில் வசித்து வருகிறேன்

இல்லை இல்லை

ஆழ்ந்த அமைதியோடு

அதில் ரசித்து

வாழ்ந்து வருகிறேன்..

அங்கே எல்லா ஜீவராசிகளும்

அமைதியாக தனது ஜீவனை

அடைக்கலமாக கொடுத்து

பேரமைதியோடு வாழ்ந்து

வருகிறது சத்தம் இல்லாமல்

ஒரேயொரு மனிதனின்

கெஞ்சல் தாங்காமல்

அங்கே வாழ அனுமதியளித்தேன்...

அங்கே வாழ்ந்த

மொத்த ஜீவராசிகளும்

கதறிக் கொண்டு

நிம்மதி இழந்து

கண்ணீர் வடித்து

என்னிடம் கெஞ்சியது...

அந்த ஒரு மனிதனை

வெளியேற்றி விடுகிறீர்களா

என்று...

நான் அந்த கதறலில்

கலங்கி போனேன்...

அவனை வெளியேற்ற

போராடிய போது

எனது அமைதியை

தொலைத்தேன்..

இங்கே மனிதர்கள் என்றாலே

சலசலப்பு தானே

நீ மட்டும் விதிவிலக்காக

எப்படி என்றது

அங்கே வாழ்ந்த ஜீவராசிகள்..

நான் கொஞ்சம் சிரித்து

சொன்னேன்...

நான் எங்கே மனிதன் என்று

#இளையவேணிகிருஷ்ணா.


உணர்வற்ற அலைபேசியோடு..

 

பொழுது விடிந்து

பொழுது போகும் வரை

உணர்வற்ற கைபேசியோடு

கரைந்து விடுகிறது...

உணர்வோடு உள்ள

மனிதனின்

பெரும்பாலான நேரங்கள்... 

உணர்வுகளை

அது புரிந்து கொள்ளாமல்

அந்த மனிதனின் சுக துக்கங்களை

உள் வாங்கவாவது செய்கிறது

உணர்வுள்ள மனிதனோ

அங்கே எவனோ தீன குரலில்

அழைத்து காதில் விழுந்தும்

விழாததை போல கடந்து

செல்லும் போது

வேறு வழியின்றி அவன்

மீண்டும்

உணர்வற்ற கைபேசியோடு 

தனது உணர்வுகளை

கரைத்து விட்டு

உள்ளுக்குள் குலுங்கி குலுங்கி

அழுகிறான்...

தேற்றுவதற்கு ஆள் இல்லாமல்

#இளையவேணிகிருஷ்ணா.


நாட்குறிப்பும் எனது உணர்வுகளும்


ஆயிரம் ஆயிரம் 

விசயங்களை

மனம் யோசித்து 

வைத்திருக்கிறது...

எதை எழுதுவது

எதை விடுவது..

மேசையில் இருக்கும் 

நாட்குறிப்போ 

என் முகம் நோக்கி

ஆவலாக பார்க்க

நான் கொஞ்சம் தயங்கி 

எதையும் எழுதாமல் 

அதை அப்படியே மூடி வைத்து

எழுந்து விடுவதை பார்த்து

உன் உணர்வுகளை

என்னை தவிர எவர்

புரிந்துக் கொள்ள கூடும்?

உன் உணர்வுகளை

என்னிடம் கொட்டி விடு...

நான் நம்பிக்கை துரோகம்

செய்ய மாட்டேன்

நீ என்னிடம் சோகம் தீர 

பகிர்ந்த 

உன் உணர்வுகளை

அடுத்தவரிடம் தெரிவித்து 

என்றது...

அது சொன்னதில் பிழை ஏதும்

இல்லையே..

நம்பிக்கை என்பது

இந்த உலகில் 

நிலைக் குலைந்து கிடக்க 

எவரை நான் வடிகாலாக

நம்புவது

வேஷம் நிறைந்த உலகில்...

#இளையவேணிகிருஷ்ணா.





கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்

 


கொஞ்சம் 

ஆசுவாசப்படுத்திக் கொள்ள

இங்கே எந்த இடமும்

போதும்...

எந்த சூழலும் போதும்..

சொகுசாக இருந்தால் தான்

நம்மை 

ஆசுவாசப்படுத்திக் கொள்ள 

முடியும் என்று

நினைத்தால்

இங்கே ஆசுவாசப்படுத்துதலை

நாம் வலுக்கட்டாயமாக

கடத்தி செல்கிறோம்

அதில் சுகம் கிடைக்குமா??

#இளையவேணிகிருஷ்ணா.

சனி, 20 ஆகஸ்ட், 2022

கிருஷ்ணா இணையதள வானொலி

 


https://zeno.fm/radio/krishna-fma76ufetpuy8uv/

எப்போதும் இணைந்து இருங்கள்..

இது ஒரு வித்தியாசமான பாடல்களை கொண்ட இசை பயணம் இது..🎸💫✨🎻

உயிர் தேடலின் சூட்சமம்

 




ஏதோவொன்று

என்னை தூண்ட 

நான் மௌனமாக

அந்த சாலையில் இறங்கி

நடக்கிறேன்..

எங்கே என்று மட்டும்

கேட்காதீர்கள்..

உயிர் தேடலின் சூட்சமம்

இங்கே எவர் அறியக் கூடும்

அத்தனையும் கனவாக

நெஞ்சத்தில்

ஒரு துளியாக பதித்து

தூரத்தை கடக்கிறேன்

இதோ ஏதோவொரு புள்ளியில்

அந்த தேடலில் நான் 

வெற்றி காண்பேன் என்று..

#இளையவேணிகிருஷ்ணா.


வெள்ளி, 19 ஆகஸ்ட், 2022

கிருஷ்ணா இணையதள வானொலி: மகாபாரதம்


 நேயர்களே வணக்கம் 🙏🎻🙏

இன்று இரவு ஒன்பது மணிக்கு(9:00pm_10:00pm) உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஓர் பயணம் நிகழ்ச்சியில் மகாபாரதம் நெடுந்தொடர் கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் நேயர்களே 🙏🎻🙏

ரேடியோ லிங்க்:- https://zeno.fm/radio/krishna-fma76ufetpuy8uv/

இன்றைய வானொலி சிந்தனை:- 

எப்போதும் ஆனந்தமாக

இருங்கள் ...

இந்த வாழ்வில்

இந்த நொடியே நிரந்தரம்..


நீ என்னை யாசித்தால்...

 


நான் என்னையே

என்னிடம் 

யாசித்து நிற்கும்

சமயத்தில்...

நீ என்னை யாசித்து

நிற்கிறாய்..

இங்கே எதுவும்

யாசிக்காமல் கிடைப்பது இல்லை...

நீ யாசித்து நிற்கும் நானோ

என் வசம் இல்லை...

கடனாக

அந்த காலத்தின் கைகளில்

அடைக்கலம் ஆகி விட்டேன்

நீ ஏதேனும் பிணை வைத்து

இருந்தால்

அதை கொடுத்து

என்னை மீட்டி செல்...

இல்லை அமைதியாக இரு...

உனது யாசித்து நிற்கும்

கரங்களை கொஞ்சம்

கீழே இறக்கினால்

நலம்...

எனது கண்களில் வழியும்

நீரை கொஞ்சம் நிறுத்த

அது போதும் எனக்கு..

#இளையவேணிகிருஷ்ணா.


இன்னும் சில நொடிகளை யாசிக்கிறாய்

 


அத்தனை நொடிகளையும்

நீயே அதிகாரம் செய்ய

கொடுத்தும் கூட

நீ இன்னும் சில நொடிகள்

என்னிடம் யாசித்து

நிற்கிறாய்...

நான் என்ன செய்வேன்

காலத்தின் கைகளில்

சிக்கிக் கொண்ட

நொடிகளை உனக்காக

அதிகரிக்க சொன்னால்

அது என் அதிகாரத்தை

கேட்க வேண்டுமே...

அது என்னை போல

அல்ல...

சொன்னவுடன் பணிந்துவிட..

#இளையவேணிகிருஷ்ணா.

புதன், 17 ஆகஸ்ட், 2022

கிருஷ்ணா இணையதள வானொலி

 நேயர்களே வணக்கம் 🎻🙏🎻

இன்று இரவு ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஓர் பயணம் நிகழ்ச்சியில் மகாபாரதம் நெடுந்தொடர் கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் நேயர்களே 🙏🎻🙏

ரேடியோ லிங்க் https://zeno.fm/radio/krishna-fma76ufetpuy8uv/

கூகுள் ஆப் லிங்க்:- https://play.google.com/store/apps/details?id=krishna.fm3

சனி, 6 ஆகஸ்ட், 2022

வாழ்வின் ரசனை(1)

 


வாழ்க்கையை ரசிக்க வேண்டும் என்றால் ஏதோ அலுவலகத்திற்கு விடுமுறை போட்டு விட்டு பெரிய பெரிய ரெஸ்டாரண்ட் புக் செய்து அங்கே நாம் சாப்பிடும் சாப்பாட்டிற்கு ஜிஎஸ்டியோடு தொகை வரும் போது புலம்பிக் கொண்டு இனி மேல் இப்படி எல்லாம் வருவதற்கு யோசிக்க வேண்டும் என்று கவலையோடு வாழ்க்கையை ரசனையோடு ரசிக்க வந்து வந்த இடத்தில் புலம்பி தீர்ப்பதா வாழ்வின் ரசனை???

அதுவல்ல வாழ்வின் ரசனை...

இதோ இப்போது இந்த இரவு இங்கே அழகாக தென்றல் என்னை வருட பாதி நிலவு அமிர்தமாக என் மீது கிரணங்கள் பொழிய இந்த இரவின் சூட்சம அமைதி என் மனதிற்குள் ஏதோ இனம் புரியாத இன்பத்தை கொடுக்க அப்படியே மொட்டை மாடியில் ஒரு கயிற்று கட்டிலில் எவரும் அருகில் இல்லாத ஓர் தனிமை ஓர் ஆனந்தமான வரம்... அந்த தனிமை தற்போது உங்களுக்கு கிடைத்து இருந்து இப்படி ஓர் சூழலும் உங்களுக்கு அமைந்து விட்டால் போதும்..அதை விட நீங்கள் இந்த ரம்மியமான சூழலை ரசிக்க வேண்டும் தன்னை மறந்து... இது தான் வாழ்வின் ரசனை...

வாழ்க்கையை ரசிக்க பணம் செலவு செய்து தான் ரசிக்க வேண்டும் என்று இல்லை...இயற்கை நமக்காக தன்னை அழகாக்கி காத்திருக்கிறது.. அந்த அழகை ரசிப்பதை விட்டு விட்டு நாம் செயற்கை அழகை நோக்கி சென்றால் நாம் மத்திய அரசாங்கத்தின் ஜிஎஸ்டி வரியை நினைத்து புலம்பிக் கொண்டு வாழ்வின் ரசத்தை நாம் இழந்து விடுவோம்...

இந்த பிரபஞ்சம் அற்புதமானது.. நீங்கள் உங்கள் எண்ணத்தை அற்புதமாக்கிக் கொண்டு தயாருங்கள்... அது ராஜ கீரீடை செய்ய காத்திருக்கிறது...

இனிமையான இரவாகட்டும் நேயர்களே..🎻💫🍁🥳🦋

#இளையவேணிகிருஷ்ணா.

வியாழன், 4 ஆகஸ்ட், 2022

தேன்மொழி பாடல்...

 திருச்சிற்றம்பலம் படத்தில் சந்தோஷ் நாராயணன் குரலில் இந்த பாடலை கேட்கும் போது சோகத்தை இலகுவாக எடுத்து கொள்ள முடியும் என்பதை அழகாக பாடி வெளிப்படுத்தி இருக்கிறார்.. சில பாடல்கள் காதல் சோகத்தை லிட்டர் கணக்கில் வழிய வைக்கும்.. ஆனால் இந்த பாடலை கேட்கும் போது அப்படி இருக்காது..உன்ன நினைச்சு ஒன்னும் உருகல போடி...

சோகத்தில் ஒன்னும் வளர்க்கல தாடி...

கெத்து காட்டிட்டு அழுகுறனே..

அழுது முடிச்சுட்டு சிரிக்கிறனே....

இந்த வரிகளை பாடிய விதம் கேட்கும் போது மிகவும் அருமை... இவ்வளவு தான்.. காதல்.. அழுது முடித்து விட்டு இயல்பாக வாழ்வை எதிர் கொள்ள சொல்லும் விதமாக இருக்கிறது..

சில பாடல்கள் மனதில் நிற்கும்... சில பாடல்கள் படிப்பினை சொல்லும்.. அந்த வகையில் அட போங்க பாஸ் அடுத்த வேலையை பார்க்க என்பது போல ஒலிக்கும்...

கேட்டு பாருங்கள் நேயர்களே 🎻😊🎸✨🐾🏃

பழி போடுவது எளிது... உண்மை வேறு..

 


பாராளுமன்ற விவாதத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய குற்றசாட்டை மேம்போக்காக பார்த்தால் திமுக மேல் சாதாரண மக்களுக்கு கோபம் வரும்.. ஆனால் அதை ஆழ்ந்து கவனிக்கும் போது தான் தெரியும்..அடடா இதில் இவ்வளவு விசயங்கள் உள்ளதா என்று.. அந்த குற்றச்சாட்டு இதுதான்.. நீங்களும் இணையதளத்தில் காணொளி மூலம் பார்த்து இருப்பீர்கள்..எதை எடுத்தாலும் ஜிஎஸ்டி வரியை காரணம் காட்டி திமுக மக்களை திசை திருப்புவதாக சொல்ல வருகிறார்கள்.. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் திமுகவும் இருந்து அந்த வரிகளுக்கு அனுமதி கொடுத்து இருக்கிறது என்று மத்திய நிதியமைச்சர் சொல்லி இருக்கிறார்..

இந்த குற்றச்சாட்டிற்கு பதில் அளிக்கும் விதத்தில் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் பதில் இருந்தது கவனிக்கத்தக்கது..

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பு சாமானிய மக்களை பாதிக்கும் என்பதால் தமிழக அரசு எழுத்து பூர்வமாக தனது எதிர்ப்பைத் தெரிவித்து உள்ளது என்று சொல்லி இருக்கிறார்..

இதற்கு காரணமாக அவர் சொல்லி இருப்பது கவனிக்கத்தக்கது.#ஜிஎஸ்டிமன்றத்தின் #அடிப்படைகட்டமைப்பில் பல சிக்கல்கள் உள்ளன என்றும் இதில் மத்திய அரசுக்கு 33 சதவீத ஓட்டும் மற்ற அனைத்து மாநிலங்களுக்கும் தலா 2சதவீத ஓட்டும் உள்ளது.. பெரிய மாநிலமோ சிறிய மாநிலமோ ஒவ்வொரு மாநிலத்திற்கும் 2 சதவீத ஓட்டு மட்டுமே உள்ளது.. இப்படி உள்ள கட்டமைப்பில் ஜிஎஸ்டி வரியின் பரிந்துரை தடுக்க வேண்டும் என்றால் #ஏறத்தாழ #25மாநிலங்களின் #ஒருமித்த #ஆதரவு வேண்டும் இல்லையெனில் மத்திய அரசின் ஆதரவு வேண்டும் என்ற சட்ட சிக்கலை விளக்கியுள்ளார்..

இப்போது சொல்லுங்கள் யார் மேம்போக்காக பழி போடுகிறார்கள் என்று..

#ஜிஎஸ்டிநுணுக்கம்

#இளையவேணிகிருஷ்ணா.

புதன், 3 ஆகஸ்ட், 2022

ஆட்சியாளர்களை வழிநடத்துங்கள்


 இன்றைய தலையங்கம்:- உண்மையிலேயே மனசாட்சி உள்ள மனிதர் பிஜேபியின் இருக்கிறார்களா என்று தேடுகிறீர்களா..இதோ வருண் காந்தி தான் அவர்..

மக்களுக்கு கொடுக்கப்படும் நிவாரணம் மற்றும் இலவசத்தை நிறுத்துவதற்கு முன் நாம் நம்மை பற்றி நாம் அனுபவிக்கும் சலுகைகளை பற்றி சிந்திக்க வேண்டும் என்று சொல்லியதோடு இந்த விவாதத்தை முதலில் எம் பிக்கலின் ஓய்வூதியத் சலுகைகளை நிறுத்துவதை பற்றி நாம் ஏன் பேசக் கூடாது என்று நியாயமான கேள்வி ஒன்றை கேட்டு இருக்கிறார்..தமது டுவிட்டர் பக்கத்தில்..

மற்றொரு டுவிட்டர் பதிவில் உஜ்வாலா திட்டத்தில் காஸ் இணைப்பு பெற்ற #ஏழைகளில் 4.13லட்சம் பேரால் மற்றொரு சிலிண்டர் வாங்குவதற்கு பணம் இல்லை என்றும் 7.67 லட்சம் பேர் ஒரேயொரு முறை தான் மற்றொரு சிலிண்டர் வாங்கி உள்ளனர் என்றும் ஏழைகளின் எரிதல் அடுப்பு அணைந்து கிடக்கிறது என்றும் கூறி இருப்பது கவனிக்கத்தக்கது..

குறிப்பாக பிஜேபி ஆதரவாளர்கள் கவனிக்க வேண்டும்..

ஒரு கட்சியை ஆதரிக்கிறீர்கள் என்றால் கண் மூடித் தனமாக ஆதரிக்காமல் அவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டுங்கள்.. அவர்களுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்குங்கள்..அதை விடுத்து தீவிர ஆதரவாளர்களாக மாறி வானத்தில் வெள்ளை காக்கா பறக்கிறது பாருங்கள் மக்களே என்று சொன்னால் அதற்கு ஆதரவாளர்களும் சேர்ந்து ஆமாம் ஆமாம் என்று ஜால்ரா போடக் கூடாது.. தலையில் ஓங்கி ஒரு குட்டு வைத்து அங்கே எங்கே வெள்ளை காக்கா பறக்கிறது என்று கேட்க வேண்டும்..

#இன்றையதலையங்கம்

#இளையவேணிகிருஷ்ணா.

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2022

பொக்கிஷத்தை தேடி...

 


இங்கே ஆண் பெண்

உறவை சிலாகிப்பதை தவிர

எழுத வேறெதுவும் இல்லையா

என்றேன்

இந்த பிரபஞ்சத்திடம்..

ஏன் இல்லை...

அத்தனை பொக்கிஷங்களை

இந்த பிரபஞ்சம் தனக்குள் புதைத்து இருக்கிறது...

எப்போதும் மிக உயர்ந்த

விசயங்கள் மறைப்பொருளாகவே

இந்த பிரபஞ்சத்தில்

கண்டுக் கொள்ள படாமல்

கரைந்து போய் விடுகிறது...

அதில் அந்த உயர்ந்த பொக்கிஷமான 

விசயம் மட்டும் என்ன

விதி விலக்கா என்றது...

நானும் ஆம் என்று

தலையசைத்து

எவரும் தேட விரும்பாத

பொக்கிஷத்தை தேட

ஆரம்பித்தேன்...

#இளையவேணிகிருஷ்ணா.


இன்றைய தலையங்கம்

  இன்றைய தலையங்கம்:- யாரோ பிரிகிறார்கள் சேர்கிறார்கள்... ஏன் அவர்கள் தனிப்பட்ட வாழ்வில் பொது ஜனங்கள் தலையிட்டு ஏதேதோ கருத்து சொல்லி அவர்களை ...