ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

ஞாயிறு, 9 ஜூலை, 2023

இரவு சிந்தனை ✨

 

இரவெனும் சூட்சுமங்கள்

இங்கே ஆயிரம் உயிர்களின் 

பயணத்திற்கு

சாட்சியாக இருக்கிறது!

இருளெனும் 

மாயையின் பிடியில்

உருவாவதாலோ என்னவோ

இறக்கும் வரை அந்த ஜீவன்

ஆத்ம ஞானத்தை பற்றி 

கவலைக் கொள்ளாமல்

விறகில் வெந்து மீண்டும் மீண்டும்

கருவறை பயணத்தை 

சலிப்பில்லாமல்

தொடர்கிறது!

என்னே மாயையின் வீரியம்!

இரவு சிந்தனை ✨

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நீள் இரவின் கொடுமை...

  நீ பிரிந்து சென்ற  ஒவ்வொரு நாளின்  இரவையும்  கடந்து செல்வது  அவ்வளவு எளிதல்ல  எனக்கு... அது நரகத்தின் வேதனையை  எனக்கு தந்து  அந்த காயத்தில...