ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வியாழன், 27 ஜூலை, 2023

காதலோடு விடை பெறுகிறது..

 


கொஞ்சும் சாரல் மழையோடு

காபியின் இதமான காதல்

இந்த அந்தி மாலை வேளையில் 

என்னோடு

எனக்கு பிடித்த 

ஓஷோவின் புத்தகத்தில் 

என் மனம் லயித்து கிடக்க

வாழ்வின் பேரின்ப சுவையில் 

திளைக்கும்

இந்த தருணத்தை

அதோ அங்கே சிறகடித்து பறக்கும் 

பறவை ஒன்று

அருகே இருக்கும் மரத்தில்

தனது கூட்டில் புகுந்து

கொஞ்சம் தலை நிமிர்த்தி

என்னை வேடிக்கை பார்க்க

இதோ இந்த அந்தி சந்தி வேளை 

என்னிடம் இருந்து

கொஞ்சம் கொஞ்சமாக

விடை பெற மனமில்லாமல்

காதலோடு

விடை பெறுகிறது...

#இளையவேணிகிருஷ்ணா.

27/07/2023.

#அந்திமாலைநேரம்

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நீள் இரவின் கொடுமை...

  நீ பிரிந்து சென்ற  ஒவ்வொரு நாளின்  இரவையும்  கடந்து செல்வது  அவ்வளவு எளிதல்ல  எனக்கு... அது நரகத்தின் வேதனையை  எனக்கு தந்து  அந்த காயத்தில...