இங்கே அத்தனை
சம்சார அலைகளும் ஓயாமல்
என்னை தாக்கி தாக்கி
ஓய்ந்து விட்டது போலும்...
எதற்கும் அசையாத 
என்னை பார்த்து 
கொஞ்சம் அதிகமாக 
சோர்ந்து விட்டது என்று தான் 
நினைக்கிறேன் 
இனி என்ன செய்யலாம் என்று
யோசிக்கிறது...
நானோ மனதை துவைத நிலைக்கு
இறங்க விடாமல்
அது கொடுத்த அவகாசத்தை
இன்னும் தீவிரமாக
பயன்படுத்தி கொள்கிறேன் !
நான் இதற்காக பெரிதாக
போராடவில்லை...
என் இயல்பு நிலையே கிட்டத்தட்ட
அதுவே எனும் போது
நான் அனைத்தையும்
சுகர் நிலையில் இருந்துகொண்டே 
வரும் அலைகளை எதிர் கொண்டு 
எதிர் கொள்வேன்...
என்னை பொருத்தவரை
நான் ஒரு அத்வைதியாக
தீவிரமாக  இருக்கிறேனா என்று
மிக பெரிய சோதனை காலம் இது
அவ்வளவே...
#இளையவேணிகிருஷ்ணா. 
22/07/2023.
காலை 10:06.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக