ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வெள்ளி, 21 ஜூலை, 2023

வேறென்ன பெரிதாக செய்து விட முடியும் என்னால்

 


சம்சாரம் எனும் பெரும் அலையில்

மூழ்கிக் கொண்டே

எனக்கு அங்கே பலபேர் 

கட்டளை இடுகிறார்கள்

நீ வாழ்வை வீணாக்கிக் கொண்டு

இருக்கிறாய் என்று...

பாவம் அவர்களுக்கு தெரியாது

அந்த குரல் 

அந்த அலையை தாண்டி

என் செவிகளுக்கு வந்து

 எட்ட போவதில்லை என்று..

அதையும் மீறி வந்தாலும்

அதே அலையில் அந்த குரலை

பரிசாக கொடுத்து விடுவதை தவிர

வேறென்ன நான் 

பெரிதாக செய்து விட முடியும்?

#இளையவேணிகிருஷ்ணா.


22/07/2023.

காலை 10:15.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஒரு நகரத்தின் பரபரப்புகளுக்கிடையே பறக்கும் பட்டாம்பூச்சியாக...

என் உயிர் சுவாசத்தின்  தீண்டலாக  நீ என்னோடு  ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின்  பரபரப்புக்குகளுக்கிடையே ...