ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

செவ்வாய், 28 மார்ச், 2023

இரவின் ரகசியம்

 

இரவின் ரகசியத்தில்

என் ரகசியம் எங்கே

என்று கொஞ்சம் நிதானமாக

தேடியலைகிறேன்...

மெலிதான வெளிச்சம்

என்னை நினைத்து

கவலைக் கொள்கிறது...

எந்த ரகசியமும் வெளிப்பட்டவுடன்

சுவாரஸ்யமாக இருக்க போவதில்லை

என்றாலும் அந்த ரகசியத்தின் 

சுவையை

விட்டு விட மனமில்லாமல்

பயணிக்கிறேன்...

இரவின் துணைக் கொண்டு

அந்த ரகசியம் வெளிப்பட்டு விடுமா

இல்லை இரவின் இருளில்

புதைந்து போகுமா?

விடை தெரியாத பயணம் ஒன்றின்

சுவாரஸ்யம் மட்டும் 

குறையாமல் பயணிக்கும்

என்னை பார்த்து இந்த இரவு

ஆச்சரியம் அடைகிறது!!

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நீள் இரவின் கொடுமை...

  நீ பிரிந்து சென்ற  ஒவ்வொரு நாளின்  இரவையும்  கடந்து செல்வது  அவ்வளவு எளிதல்ல  எனக்கு... அது நரகத்தின் வேதனையை  எனக்கு தந்து  அந்த காயத்தில...