ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

சனி, 18 மார்ச், 2023

கனவெனும் நீரோடையில்...

 


கனவெனும் நீரோடையில்

கனத்து ஓடுகிறது

ஏதேதோ நினைவுகள்...

அந்த நினைவுகள்

எந்த பாறையிலும் மோதாமல் 

காத்து நிற்கிறேன்...

என் இமைகளை 

கரைகளாக கொண்டு...

இரவெனும் தாயின் 

பேரன்பில் கரைகிறது

நான் நேசித்த இந்த நொடி

கூடவே சத்தம் இல்லாமல்

அந்த நினைவுகளும் தான்...

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாழ்வெனும் நெடும் பாதையில் நான்...

  வாழ்வெனும்  நெடும் பாதையில்  வஞ்சிக்கப்பட்ட  பலரோடும்... உண்மையான  நேசத்தை கொட்டி  எதையும்  என்னிடம் எதிர்பாராமல்  பயணிக்கும்  பலரோடும்  த...