ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

செவ்வாய், 7 மார்ச், 2023

நான் நானாக....

 

எனக்கு தெரிந்ததெல்லாம் 

கொண்டாட்டம் தான்...

வெளியுலக கவனத்தை ஈர்க்க 

எப்போதும் நான் முயன்றதில்லை...

நான் என் பணி எப்போதும் 

எதையோ செய்துக் கொண்டே 

இருப்பது...

ஒன்றும் செய்ய தோன்றவில்லை 

என்றால்

காலநேர வரையறையின்றி

உறங்குவது...

இங்கே நான் இப்படி தான் என்று 

ஒருவரும் மதிப்பிட 

முடியாத அளவுக்கு 

தனித்துவமாக வாழ்கிறேன்

நான் நானாக...

என்னை 

பெண்ணாக பாவிப்பதை விட 

ஆண் பெண் பேதமில்லாத 

சூட்சம ஆன்மாவாகவே உணர்வதில்

பெரும் ஆனந்தம் கொள்கிறேன்...

நான் பேருணர்வோடு

இந்த பிரபஞ்சத்தை அணுகி

கழிக்கிறேன்...

மீண்டும் சொல்லிக் கொள்வதில் 

பெருமை அடைகிறேன்...

நான் நானாக பயணிப்பதில்...

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாழ்க்கை ஒரு சமன்பாடு தான் -சூபிஞானி கதை 🎉🦋

  வணக்கம் நேயர்களே 🎻🙏  இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட...