ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

சனி, 4 மார்ச், 2023

என் பிரத்யேகமான உலகம்

 

எந்த சலசலப்புகளும்

இல்லாமல் பயணிக்கிறேன்

அத்தனை ஆர்ப்பாட்டத்திற்கு

இடையிலும்..

என்னை சுற்றி 

ஒரு தீ 🔥 ஜுவாலை 

கொழுந்து விட்டு

எரிகிறது...

அதன் தாக்கத்தை சிறிதும்

உணராமல் 

எந்த சலனமும் இல்லாமல்

என் பயணம் தொடர்கிறது..

அந்த சூறாவளி 

பல மனிதர்களை பதம் பார்த்தது

நானோ தென்றல் காற்றின்

தீண்டலை தவிர வேறெதுவும்

அனுபவிக்கவில்லை...

இங்கே இதெல்லாம் 

சாத்தியமா என்று அந்த இயற்கையே

என்னை பார்த்து வியந்து

கிடக்கிறது...

அங்கே சில பல மனிதர்கள்

என் மீது ஆவேசம் கொண்டு

பொறாமையெனும் பார்வையால் 

பொசுக்குகிறார்கள்...

அதற்கு நான் என்ன செய்ய இயலும்??

என் உலகம்

என் உலகமாகவே இருந்து விட்டு 

போகட்டுமே...

இங்கே அதை பற்றி

உங்களுக்கு என்ன கவலை?

நான் உங்கள் உலகத்தில்

நுழையவில்லை...

நீங்கள் என் உலகத்தில்

நுழைய இயலாமல்

துன்பம் அடைகிறீர்கள்...

இங்கே வாழ்தல் என்பது

விசித்திரமான ஒன்று

என்பதை உங்களுக்கு

எவர் புரிய வைக்கக் கூடும்?

#இளையவேணிகிருஷ்ணா.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நீள் இரவின் கொடுமை...

  நீ பிரிந்து சென்ற  ஒவ்வொரு நாளின்  இரவையும்  கடந்து செல்வது  அவ்வளவு எளிதல்ல  எனக்கு... அது நரகத்தின் வேதனையை  எனக்கு தந்து  அந்த காயத்தில...