ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வியாழன், 9 மார்ச், 2023

மோனத்தில் திளைத்திருப்போம்...


 இங்கே புற உலகில்

அத்தனை சலசலப்புகள் 

அதை எல்லாம்

கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு

நாம் பயணிப்போம்...

நமக்கான இசையுலகில்...

உனது இசை மீட்டலில்

எனது இதயம் கொஞ்சம்

ஆசுவாசப்படுத்திக் கொண்டு 

புத்துணர்வில் லயித்துக் கிடக்கிறது 

இங்கே நம்மை கடந்து செல்லும்

அந்த சம்சாரிகள்

கொஞ்சம் பொறாமைத் தீயில் 

நம் மீது கோபப்படவும் கூடும்

அதையும் உனது இசைத்தலில்

கரைத்து இளைப்பாற

வைத்து விடலாம்...

இங்கே கொண்டாட்டங்கள் மட்டுமே

நிலைத்து நிற்கும்...

நாம் புரிந்துக் கொண்டு

மௌனத்திலும் இசை மீட்டி

மோனத்தில் திளைத்திருப்போம்...

#இளையவேணிகிருஷ்ணா.



 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

போர் நிறுத்தம்...

   இத்தனை நாள் தூரமாக நின்று  வேடிக்கை பார்த்த  அமைதி  இன்று எந்த தயக்கமும்  இல்லாமல் என் கைகளில்  வேகமாக ஓடி வந்து  பேரன்பு கொண்டு  என்னை ...