ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வியாழன், 16 மார்ச், 2023

ஆனந்தத்தை அசைபோடுவோம்...


 நமது வாழ்க்கையில் எத்தனையோ ஆனந்தமான தருணங்கள் இருக்கின்றன.அவை எல்லாம் உண்மையிலேயே நாம் சோர்வடையும் போது உற்சாகத்தை கொடுக்கும்.சிலசமயம் நம்மால் நம்மை தேற்றவே முடியாத தருணங்கள் இருக்கும். அப்போது சாய்ந்துக்கொள்ள ஒரு தோள் தேடும் மனது.அரவணைக்க கைகளை தேடும். துரதிருஷ்ட வசமாக நாம் தேடும்போது அவைகளால் நமக்கு உதவ இயலாது. அப்போது துணைகொடுப்பவை நமது இனிமையான நினைவுகள் இனிமையான கடந்த கால நினைவுகள் மட்டுமே.ஆதலால் இனிமையான அந்த தருணங்களை சேமியுங்கள்.அதுவே உங்களுக்கு தோள் கொடுக்கும் அதுவே கைகளாக அரவணைக்கும்.என்ன நமக்குள்ளே ஆனந்தத்தை தேடுவோமா உறவுகளே.🎉🐾💃

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கழுதையும் நானும்...

 #கழுதையும் #நானும்:- *************************** அங்கே எனதருகில் ஓர் கழுதை வெகுநேரமாக என்னையே பார்த்துக் கொண்டு இருந்தது.. நான் அது ஏதோ பார...