ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வியாழன், 22 டிசம்பர், 2022

நீங்காத நினைவலைகள்

 

கடந்த பல வருடங்களை போலவே

இதோ இன்னும் சில நாட்களில் முடிய இருக்கும்

என்னோடு பயணித்த

இந்த வருடமும்

நீங்காத நினைவலைகளை

இன்னொரு சுமையாக

என் மனதில் ஏற்றி

விடைபெறட்டுமா என்கிறது...

கொஞ்சம் வாஞ்சையாக

என் கைகளை பிடித்து...

ஏன் இந்த அவசரம்..

இன்னும் நீட்டித்து

என்னோடு பயணித்தால் தான் என்ன என்கிறேன்..

நானும் அழிவும் வேறல்ல

நானும் புதுப்பித்தலும்

வேறல்ல..

புது பரிணாமத்தில்

உன்னோடு கை கோர்ப்பேன்

என்றது ...

ஏனோ சில பந்தங்களை

அவ்வளவு எளிதாக விட்டு விட 

முடியவில்லை என்றேன்

என் கண்ணீர் துளிகளை மறைத்து..

இந்த பந்தமோ எந்த பந்தமோ

எப்போதும் விலகுதல் விதி

ஒன்றே விலகாமல்

பயணிக்கும் என்றது

சற்றே புன்னகையோடே..

நானும் சிரிக்க முயன்று

தோற்றேன்...

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாலையோர புழுதியில் நனைந்த ஓவியம்...

 அந்த பிரமாண்டமான வீட்டில்  வாழ்ந்து கொண்டு  இருப்பவர் சில நாட்களில்  உற்சாகம் இழந்து  அவர் தாம் பார்த்து பார்த்து கட்டிய  அந்த வீட்டில்  உள...