கொஞ்ச நேரம்
என் பந்தங்களை விலக்கி
இங்கே பெய்யும் மழையை
ரசிக்கிறேன்...
இயற்கையின் விதி பந்தம் என்று
அங்கே யாரோ
சொல்லி செல்கிறார்கள்..
நானோ புன்னகை செய்கிறேன்..
இங்கே பற்றற்ற தன்மையின்
வீரியத்திற்கு
பயந்த மனங்களே...
ஏதோவொரு பற்றுக் கோடை
பிடித்து பயந்து பயந்து
கொஞ்சம் கொஞ்சமாக நகர்கிறது...
நான் அவர்களிடம் ஒன்று
சொல்கிறேன்..
கொஞ்சம் எல்லா பந்தங்களையும்
பற்றுகளையும் விலக்கி
முயற்சி செய்து பாருங்களேன்...
இதோ அளவுக் கடந்த ஒளி
உங்கள் முன் வழிகாட்டி
செல்கிறது...
ஏதோன்றில் புதைந்து
பாதுகாப்பாக நகர்வதில்
என்ன சுவாரஸ்யம்
இருக்க போகிறது என்றேன்..
அங்கே அந்த பற்றுக் கோட்டை
தீவிரமாக பிடித்தவர்கள்
தன்னையும் அறியாமல்
கொஞ்சம் கொஞ்சமாக
விடுவித்துக் கொள்ள
முயற்சி செய்தது
என்னை கொஞ்சம்
புன்னகைக்க வைத்தது...
இதோ நம்பிக்கை அவர்களின்
வாழ்வின் பயணத்தை
மாற்ற போகிறதென...
#இளையவேணிகிருஷ்ணா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக