தற்போது வாட்ஸ் அப்பில் இந்த ஆப்சன் வந்து இருப்பது மிகவும் நல்ல விசயம்.. முன்பெல்லாம் ஏதேனும் குறுந்தகவல் தெரியாமல் அதாவது யோசிக்காமல் அனுப்பி விட்டால் அல்லது ஒருத்தருக்கு அனுப்ப வேண்டிய குறுந்தகவல் இன்னொருத்தனுக்கு அனுப்பி விட்டால் ஒரு பதட்டம் வந்து விடும்.. நான் இதுவரை ஒருத்தருக்கு அனுப்ப வேண்டிய குறுந்தகவலை இன்னொருவருக்கு அனுப்பியதே இல்லை என்பது வேறு விசயம்.. ஆனால் ஏதோவொரு வேகத்தில் குறுந்தகவல் போட்டு விட்டு உடனே வாசித்து விட்டு அடடா இது சரியில்லை என்று நினைத்து டெலிட் செய்து இருக்கிறேன்.. பெரும்பாலும் நடப்பது இல்லை.. சில நேரங்களில் எனக்கு இருக்கும் கோபத்தில்.. ஆனால் பெரும்பாலானவர்களுக்கு இது அடிக்கடி நடந்து விடுகிறது.. அப்போதெல்லாம் அந்த டெலிட் செய்த மெஸேஜ் படும் பாடு இருக்கிறதே..அடடா... அது அந்த அனுப்பி டெலிட் செய்த மெஸேஜ்க்கு தெரியாது.. அதுபாட்டுக்கு தேமே என்று டெலிட் ஆகி நிம்மதியாக இருக்கும் இருந்த இடம் தெரியாமல்.. குறுந்தகவல் அனுப்பப்பட்டவருக்கும் அதை டெலிட் ஆன நிலையில் பார்க்கும் குறுந்தகவல் பெறுபவர் நிலையும் தான் பெரும் போராட்டமாக அமைந்து விடும்.. அதை நல்ல புரிதல் இருப்பவர்கள் சாதாரணமாக கடந்து சென்று விடுகிறார்கள்.. ஆனால் டெலிட் ஆன குறுந்தகவல் என்னவாக இருக்கும் என்று மண்டைக்குள் ஒரு குறுகுறுப்பு இருப்பவர்களை சமாளிப்பது தான் பெரும் பிரச்சினை.. இங்கே நாட்டில் ஆயிரம் ஆயிரம் விசயங்கள் நடக்கிறது.. அதைப்பற்றி குறுகுறுப்பு சிறிதும் இங்கே இல்லை.. உணர்வற்ற மனிதர்களாக தான் இருக்கிறார்கள்..ஏதோ தவறாக அனுப்பி டெலிட் ஆன குறுந்தகவல் படும் பாடு இருக்கிறதே அது ஏதோ கொலை குற்றம் செய்து விட்ட மனிதரை போல அவதிப்படுகிறது.. ஏன் அந்த கொலை குற்றம் செய்த மனிதர்கள் கூட பெயிலில் தப்பி விடுகிறார்கள்..😔
இது ஒரு நல்ல நோக்கத்தில் வாட்ஸ் அப் கொண்டு வந்ததே எத்தனை மனிதர்களை பிரச்சினையாக்கி அழகு பார்க்கிறது.. என்ன உலகமடா இது சாமி🏃🤦.
#வாட்ஸ்அப்அலப்பறைகள்.
#இளையவேணிகிருஷ்ணா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக