ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

சனி, 3 டிசம்பர், 2022

நானும் எமனும்

 

உனது வாழ்வின் பயணம்

முடிந்து விட்டது

என்னோடு வா என்று

மிரட்டுகிறார் எமன்...

சற்று பொறுங்கள்

நான் இப்போது தயாரித்த 

சுவையான தேநீரை

கொஞ்சம் காதலோடு பருகி

இவ்வளவு நாள் நெடுந்தூரம்

என்னோடு பயணித்ததற்கு

நன்றி சொல்லி வருகிறேன்

என்று கெஞ்சி 

கூத்தாடியதை பார்த்து

எமனே ம்ம் நடக்கட்டும்

எனக்கும் ஒரு கோப்பை தேநீர் 

கொண்டு வா

உனது கரங்களால் என்றது..

நான் தயாரித்த தேநீரை

ஒரு விசேட நபரோடு 

நிதானமாக சிரித்து பேசி

வாழ்வின் பயணத்திற்கு

விடை கொடுத்த அந்த தருணத்தை

என்னால் மறக்க முடியாது..

#நானும்எமனும்

#இளையவேணிகிருஷ்ணா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மர்ம வீடு பாகம் (1)

அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்க...